Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துக்காக கடன் வாங்கும் மீனா.. மனோஜுக்கு தெரிந்த பார்லர் உண்மை! விஜயாவுக்கு இந்த அவமானம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் பூகட்டியதில் தனது கிடைத்த லாபத்தை வைத்து மீனா முத்துவுக்காக ஒரு கார் வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்து இருக்கும் நிலையில் அதற்கு என்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுவதால் கடன் வாங்குகிறார்.

அதே நேரத்தில் மீனா கடன் கேட்ட நபரிடம் விஜயா அவமானப்படுகிறார். மறுபக்கத்தில் மனோஜ்க்கு பியூட்டி பார்லரில் பெயர் மாதிரி இருக்கும் விஷயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 15th promo and episode full update

அந்த வகையில் இன்று எபிசோடின் ஆரம்பத்தில் மீனா மற்றும் முத்து இருவரும் மாலை டெலிவரி செய்ததும் கிடைத்த பணத்தை பூ கட்டியவர்களுக்கு கொடுக்க, அவர்கள் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்கள். பிறகு அவர்கள் இந்த பணத்தை வைத்து நீ என்ன பண்ண போற? நீ தாலி மஞ்ச கயிற்றில் தானே போட்டு இருக்க அதனால தாலி செயின் வாங்கி போட்டுக்க என்று சொல்ல அதற்கு மீனா மறுத்துவிட்டு நான் அவருக்கு கார் வாங்கி கொடுக்க போகிறேன் என்று சொல்ல எல்லோரும் சரி என்று சொல்கின்றனர்.

பிறகு முத்து மற்றும் மீனா இருவரும் பணத்தை கொண்டு வந்து அண்ணாமலை இடம் கொடுக்க அவர் இது நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் உங்ககிட்டயே இருக்கட்டும் என்று சொல்கிறார். பிறகு அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் இருவரும் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள். அடுத்ததாக ரோகிணி பார்லர் போகும்போது விஜயா அவரை கூப்பிட்டு வச்சு நீ பார்லர் வச்சிருக்க எனக்கு மாசா மாசம் பாக்கெட் மணி தர அதுக்கு காரணம் நீ என் மேல வச்சிருக்கற மரியாதை என்று பேசிக் கொண்டிருக்க,

அதைக் கேட்டு மீனா டக் என்று கிளம்பி பீரோவில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வர ரோகிணி அந்த பணத்தை விஜயாவிடம் தான் கொடுக்கப் போறாங்க போல என்று ஆசை காட்டி விட விஜயாவும் ஆவலா காத்திருக்கிறார். ஆனால் மீனா அடுப்பில் சாம்பார் வைத்திருக்கிறேன் கொதிச்சதும் ஆப் பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்ப விஜயா பல்ப் வாங்குகிறார்.

Siragadikka aasai march 15th promo and episode full update

அப்போது கொஞ்சம் பணம் வந்ததும் என்னையே வேலை வாங்குற என்று விஜயா புலம்பி கொண்டு இருக்கிறார். அதற்கு ரோகிணி பணத்தோட போறாங்க என்ன பண்ண போறாங்க என்று கேட்க, அதற்கு விஜயா என்ன பண்ணவா மொத்த பணத்தையும் எடுத்துட்டு போய் அவங்க அம்மா கிட்ட கொடுத்துடு வா என்று சொல்கிறார். ஆனால் மீனா கார் செட்டுக்கு வந்து செல்வத்திடம் முத்துவுக்காக கார் வாங்கப் போவதாகவும் அதுவும் சர்ப்ரைஸ் ஆக வாங்கி கொடுக்க போவதாகவும் சொல்ல,

அதற்கு செல்வம் முத்து ஏற்கனவே சில கார் பார்த்து வச்சிருக்கான் என்று சொல்லி அந்த காரை பார்க்க போகின்றனர். அங்கு ஒரு காரை பார்த்ததும் மீனாவுக்கும் பிடித்து விட அதன் விலை என்னவென்று விசாரிக்க மூன்று லட்சம் என்று சொல்கிறார்கள். அதற்கும் முன்பணம் 80 ஆயிரத்தை கட்டி விட்டு மீதம் உள்ள பணத்தை மாதா மாதம் கட்டினா போதும் என்று அவர் சொல்கிறார்.

Siragadikka aasai march 15th promo and episode full update

அதற்கு மீனா பூக்கட்டி கிடைத்த லாபம் ஐம்பதாயிரம் இருக்கு ஆனாலும் இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று சீதாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, சீதா சிதம்பரம் என்று ஒரு வட்டிக்காரர் இருக்கிறார். ஆனால் அவர் நியாயமான வட்டிக்கு கடன் கொடுக்கிறார் .அவர் கடையை பார்த்துட்டு தான் கடன் வருவார் அவர்கிட்ட சொல்றேன் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு சிதம்பரம் மீனாவின் கடையை வந்து பார்த்துக் கொண்டிருக்க மேலே இருந்து பார்த்த விஜயா கீழே இறங்கி யாரென்று கேட்க அதற்கு சிதம்பரம் என்று அந்த வட்டிக்காரர் சொல்கிறார். அதற்கு சிதம்பரம்னா எதுக்கு என் வீட்டு முன்னாடி நோட்டம் விட்டுட்டு இருக்கே என்று கேட்க அதற்கு சிதம்பரம் நீங்க யாரு என்று விஜயாவிடம் கேட்க, அவர் நான் தான் விஜயா என்று சொல்ல உங்க பேர்ல தான் கடையே இருக்கா என்று கேட்கிறார்.

Siragadikka aasai march 15th promo and episode full update

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் மனோஜ் ரோகிணியின் பார்லருக்கு போயிருக்கும் நிலையில் அங்கு இருக்கும் போர்டில் வேற பெயர் மாற்றப்பட்டுள்ளதை பார்த்து என்ன ஆச்சு போர்டில் வேற பெயர் இருக்கிறது என்று மனோஜ் கேக்க அதற்கு ரோகிணி பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அப்போது வித்யா அது பெயரை ரிப்பேர் செய்ய கொடுத்திருக்கிறோம் என்று பொய் சொல்கிறார். இதனால் மனோஜ்க்கு சந்தேகம் ஏற்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+