விஜயாவை அடித்த ஸ்ருதி.. முத்து கொடுத்த அதிர்ச்சி.. அண்ணாமலை சொன்ன வார்த்தை! இப்படி ஆயிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த வகையில் மீனா தனக்கு கொடுத்த சர்ப்ரைஸால் முத்து ரொமான்ஸ் செய்ய போக அதற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் நள்ளிரவில் ஸ்ருதி கொடுத்த பிரியாணியை சாப்பிட்ட விஜயா படாத பாடுபடுகிறார். இந்த நிலையில் சில சுவாரசியமான காட்சிகள் நடந்தது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 21th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா மீனாவிடம் பால் காய்ச்சினியா? பாத்திரம் கழுவுனியா? என்று ஒவ்வொரு கேள்விகளாக கேட்டுக் கொண்டிருக்க அதை பார்த்து கோபமான முத்து எல்லா வேலையும் அவகிட்டயே சொல்லிட்டு இருக்கீங்களே? மத்த ரெண்டு பேரும் என்ன பண்றாங்க என்று கேள்வி கேட்க அதற்கு மீனா அமைதியா இருங்க என்று சொல்ல அதனால் கோபமான விஜயா ரூமுக்குள் போகிறார்.

முத்து உனக்காக தான் நான் பேசுறேன் என்று மீனாவை திட்டுகிறார். அதோடு உனக்காக ஒண்ணு வச்சிருக்கேன் என்று மல்லிகை பூவையும் அல்வையும் ஒரு கவரில் எடுத்துக் கொடுக்க பிறகு பூவை எடுத்து மீனா தலையில் வைத்து விட்ட முத்து அல்வாவை ஊட்டி விட போகும்போது ஸ்ருதி வந்துவிட மீனா இந்த நேரத்தில் எங்க வெளியே போறீங்க என்று கேட்க அதற்கு ஸ்ருதி பிரியாணி ஆர்டர் போட்டு இருந்தேன் அதை வாங்க போறேன் என்று சொல்கிறார்.

Siragadikka aasai march 21th promo and episode full update

பிறகு ஸ்ருதி பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிட்டு கொண்டு இருக்க அந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க வந்து விஜயா என்ன இந்த நேரத்தில் சாப்பிடுற என்று கேட்க, அதற்கு ஸ்ருதி விஜயாவையும் பிரியாணி சாப்பிட சொல்கிறார்‌. பிறகு விஜயா பிரியாணி சாப்பிட்டு வந்ததும் அண்ணாமலை ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்க அதற்கு பிரியாணி சாப்பிட்டேன் என்று சொன்னதும் அண்ணாமலை உனக்கு வயசு ஆயிடுச்சு ஜீரணமாகாது எதுக்காக இந்த நேரத்தில் சாப்பிட்டாய் என்று கேட்கிறார்.

Siragadikka aasai march 21th promo and episode full update

அதற்கு விஜயா எனக்கு ஒன்னும் அப்படி வயசு ஆகல, உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும் போது ஒன்பது வருஷம் வித்தியாசம். என்னை எல்லாரும் சின்ன பொண்ணுனு தான் சொல்லுவாங்க. நான் கல்லை சாப்டாலும் செரித்து விடும் என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். பிறகு முத்து மீண்டும் மீனாவுக்கு அல்வா கொடுக்கப் போக மீனா இருங்க நான் தட்டில் போட்டு எடுத்துட்டு வரேன் என்று அல்வாவை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தட்டை எடுக்க கிச்சனுக்குள் போக அதற்குள் மனோஜ் அந்த அல்வாவை பார்த்து ரோகினியை கூப்பிட்டு உட்கார வச்சு இருவரும் மாறி மாறி ஊட்டி கொள்கின்றனர்.

Siragadikka aasai march 21th promo and episode full update

இதனால் முத்து கோபப்படுகிறார். ஆனாலும் மீனா ரூமுக்குள் போனதும் மீனாவும் முத்துவும் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் விஜயா பிரியாணி சாப்பிட்டது செரிக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பிறகு காலையில் பார்வதி வந்து விஜயாவின் முதுகில் குத்து விட விஜயா கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்கிறார்.

Siragadikka aasai march 21th promo and episode full update

அதற்கு பார்வதி மீனாவை கூப்பிட்டு நீயும் ஒரு குத்து விடும் என்று சொல்ல அதற்கு முத்து இந்த சந்தர்ப்பத்தை விட்டுராத உனக்கு இருக்குற கோபத்தை எல்லாம் அவங்க முதுகில் காட்டிரு என்று சொல்ல விஜயா பயப்படுகிறார். அப்போது ஸ்ருதி என்ன அவங்கள குத்த தானே செய்யணும் நான் குத்துறேன் என்று கையை மடக்கி ஓங்கி குத்தவர விஜயா அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+