கார் விஷயத்தை வீட்டில் போட்டு கொடுத்த ரோகினி.. ஆனால் விஜயா இப்படியா பேசுவாங்க? முத்து அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து காரை விற்ற விஷயம் ரோகிணிக்கு தெரிய வருகிறது. அதை ரோகிணி விஜயாவிடம் சொல்லிக் கொடுத்து பெருசு படுத்துகிறார்.

ஆனால் முத்து அதிரடியான பதிலை சொல்லி அனைவருடைய வாயையும் அடைத்து விடுகிறார். அதே நேரத்தில் முத்து மீது மீனாவுக்கு சந்தேகம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 3rd Episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவியின் ரெஸ்டாரண்டுக்கு வந்த ஸ்ருதி அம்மா உங்களை நம்பி தானே என் பொண்ணு வந்து இருக்கா அவளை நீங்க சந்தோசமா வச்சிருக்கணும். நீங்க அவ கூட ஹனிமூன் போயிட்டு வந்தா என்ன தப்பு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒருவர் வந்து ரவியிடம் நீ அடுப்பில் அப்படியே சாப்பாடை வைத்து விட்டு வந்ததால் அது எரிந்து போய்விட்டது என்று சொல்ல,

பதறிப்போன ரவி அங்கிருந்து அவசர அவசரமாக ஓடிப் போக அப்போதும் ஸ்ருதி அம்மா விடாமல் எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க என்று கேட்க அதற்கு கோபமான ரவி வேணும்னா உங்க பொண்ணை தனியா கூட்டிட்டு போங்க இப்படி நான் வேலை பாக்குற இடத்தில் வந்து தொந்தரவு பண்ணாதீங்க என்று திட்டி விட்டுப் போகிறார். அப்போது அங்கு வரும் ரெஸ்டாரண்ட் மேனேஜர் ரவியை திட்டு விடுகிறார்.

Siragadikka aasai march 3rd Episode and promo full update

அடுத்த கட்டத்தில் விஜயா ரோகினியிடம் மனோஜ் வேலைக்கு போவதற்காக பணம் கேட்கிறார். இந்த 14 லட்சம் ரூபாயையும் நீ உங்க அப்பா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி குடு அவன் வெளிநாட்டுக்கு போய் வேலை பார்க்க வேண்டாம். இங்கே ஏதாவது ஒரு பிசினஸ் பாத்துக்குவான் என்று சொல்ல அதற்கு ரோகிணி சரி அப்பாட்ட பேசி பார்க்கிறேன் என்று சமாளித்து அனுப்புகிறார். பிறகு இந்த அம்மா வேற நம்மளை எப்ப பார்த்தாலும் பணம் பணம்னு நச்சரிச்சிகிட்டே இருக்கு என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ரோகிணியும் வித்யாவும் பியூட்டி பார்லர் போவதற்காக ரோட்டில் ஆட்டோக்கு காத்திருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஆட்டோவை வழிமுறைக்க அது முத்து ஓட்டும் ஆட்டோ அதனால் முத்துவை பார்த்ததும் வித்யாவும் ரோகினியும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது வித்தியா இது உன் ஹஸ்பண்ட் ஓட தம்பி தானே என்று கேட்க அதற்கு முத்து நான் அவனுக்கு தம்பி கிடையாது. அவன் தான் எனக்கு அண்ணன் என்று கவுண்டர் கொடுக்கிறார்.

Siragadikka aasai march 3rd Episode and promo full update

பிறகு கார் என்ன ஆச்சு என்று ரோகிணி முத்துவிடம் கேட்க அதற்கு முத்து செல்வத்துக்கு போன் போட்டு தன்னுடைய காரை தன்னுடைய நண்பன் அவன் தங்கச்சி கல்யாணத்துக்காக ஒரு வாரம் கேட்டு வாங்கி இருப்பது போன்று நாடகம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு ரோகிணி குழப்பம் அடைகிறார். பிறகு ரோகிணியை இறக்கி விட்டதும் அவர் பணம் கொடுக்காமல் போக அதற்கு பணம் யார் தருவார் என்று முத்து கேட்க அதனால் கோபமான ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு போகிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் நபர் உன் நிலைமை இப்படி ஆகிட்டப்பா காரும் மொத்தமாக போயிடுச்சா என்று கேட்க அதற்கு முத்து காரை வித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அங்கு மறைந்திருந்து ரோகிணியும் வித்யாவும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு காரை விற்ற விஷயத்தை வீட்டிற்கு வந்ததும் ரோகிணி விஜயாவிடம் சொல்கிறார். அதோடு இந்த கார் திருப்பி வாங்குவதற்கு பணம் கொடுத்தது மாமா தானே வீட்டு பத்திரத்தை வைத்து தானே பணத்தைக் கொடுத்தாரு.

Siragadikka aasai march 3rd Episode and promo full update

அதுக்கு நாம வட்டி கட்டிக்கிட்டு இருக்கோம் அப்போ காரை விற்ற அந்த பணத்தை உங்ககிட்ட தானே கொடுக்கணும் அவர் அந்த பணத்தை என்ன பண்ணுனாருன்னு கேளுங்க என்று ரோகிணி ஏத்தி விட இது பற்றி நான் கேட்கிறேன் என்று விஜயா அண்ணாமலையிடம் சொல்லி முத்து கார் வித்த பணத்தை என்ன பண்ணினா என்று கேட்கிறார். அதற்கு முத்து தான் கார் வித்தது ஒரு முக்கியமான விஷயத்துக்கு தான் என்று சமாளிக்கிறார்.

Siragadikka aasai march 3rd Episode and promo full update

அதற்கு விஜயா காரை திருப்பி வாங்கியது வீட்டை அடமானம் வச்சு தான். அதனால அந்த பணத்தை நீ என்கிட்ட தான் தந்து இருக்கணும் என்று சொல்ல, அதற்கு முத்து என் அண்ணன் அதான் உங்க புள்ள மனோஜ் ஒரு 27 லட்சத்தை தூக்கிட்டு ஓடிப் போனானே அந்த பணத்தை கொண்டு வந்து தர சொல்லுங்க நான் இந்த பணத்தை தருகிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+