சிறகடிக்க ஆசை: அந்த ரெண்டு பிராடு இவங்க தான்! கைகட்டிய ஜீவா.. முத்து கேட்ட கேள்வி..சிக்கும் ரோகிணி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கனடாவில் இருந்த ஜீவா மீண்டும் இந்தியா வருகிறார் அப்போது தன்னை ஏமாற்றியது யார் என்று முத்துவிடம் சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போதும் மாட்டுவார் என்று எதிர்பார்ப்போடு இருக்கும் ரசிகர்களுக்கு டிசம்பர் மாதத்தில் கண்டிப்பாக மகிழ்ச்சி செய்தி இருக்கிறது என்று சேனல் ஒரு ப்ரோமோ வெளியிட்டு இருந்தனர். ஆனாலும் இரண்டு நாட்களாக மனோஜ் வாங்கிய புது வீட்டில் காமெடி நடந்து கொண்டிருந்தது.

முதல் நாள் வீட்டுக்கு பெயர் வைக்கிறோம் என்று ஒரு எபிசோடு முடித்து விட்டார்கள். இன்றைய எபிசோடில் வீட்டில் பேய் இருக்கிறதா? இல்லையா? என்று செக் பண்ணி பார்த்தார்கள். மனோஜ் ஒவ்வொருவருக்காக ஆயிரம் கணக்கில் பணத்தை செலவழிப்பதை பார்த்து முத்துவும் அண்ணாமலையும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். போதாதகுறைக்கு மனோஜ் வாங்கிய புது வீட்டுக்கு சென்றாலும் அங்கு மீனாதான் சமைக்க வேண்டும் என்று விஜயா பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் வீட்டிற்குள் வைத்து முத்து மற்றும் விஜயாக்கு சண்டையும் வருகிறது இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜின் பழைய காதலி ஜீவா கனடாவில் இருந்து நான் இந்தியாவிற்கு நாளைக்கு வருகிறேன் என்று முத்துக்கு போன் பண்ணி சொல்கிறார்.
பாக்கியலட்சுமி: மீண்டும் நெஞ்சு வலியில் கோபி.. ராதிகாவிற்காக இனியாவை அறைந்த பாக்யா! திடீர் மாற்றம்
முத்து நீங்க சொன்ன நேரத்தில் நான் ஏர்போட்டில் சரியாக வந்து நிற்பேன் என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து முத்துவின் காரில் ஏறிய ஜீவா நான் போன தடவை வந்த போது ரிஜிஸ்ட்ரேஷன் விஷயமா தான் வந்தேன். ஆனால் ரெண்டு பிராடுகள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்கிறார்.
அதைக் கேட்ட முத்து அது யார் என்று சொல்லுங்கள் மேடம் எங்களுக்கு தெரிஞ்ச நிறைய பொடியன்கள் இருக்காங்க கண்டுபிடித்து விடலாம் என்று ஜீவாவிடம் சொல்கிறார். அப்போது ஜீவாவும் அவர்களை பற்றியான விஷயத்தை முத்துவுடன் சொல்லப்போவது போன்ற ப்ரோமோ காட்டப்பட்டிருக்கிறது.

அதுபோல நீ ரோகினியும் மனோஜும் ரெஜிஸ்டர் ஆபீஸில் நிற்கிறார்கள் அதே ரெஜிஸ்டர் ஆபீசுக்கு ஜீவாவும் வருகிறார். ஒரு கட்டத்தில் ஜீவா மனோஜ் மற்றும் ரோகிணியை பார்த்து விடுகிறார். அவர்களைப் பார்த்ததும் கோபத்தில் யார் மூஞ்சில முழிக்கவே கூடாது என்று நினைத்தேனோ அவங்க மூஞ்சிலேயே முழிக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அதை பார்த்து முத்து அவரிடம் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். இப்படியாக ப்ரோமோவில் இருக்கும் நிலையில் ஜீவா மனோஜ் மற்றும் ரோகிணி பற்றி போட்டுக் கொடுத்தால் அவர்கள் இருவரும் ஜீவாவிடமிருந்து வாங்கிய 20 லட்சம் பணம் பற்றிய உண்மைகள் தெரியவரும். அதை தொடர்ந்து தான் மனோஜ் வீடு வாங்கும் விஷயத்தில் ஏமாந்த விஷயமும் தெரியவரும். அதனால் அடுத்த வாரம் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு தான் பிரச்சனைகள் இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications