சிறகடிக்க ஆசை: ரோகிணிக்காக மீனாவை சிக்க வைக்கும் சிட்டி.. முத்து பிடித்த பாயிண்ட்! தெரியவரும் உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஜனவரி 11ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணிக்காக சிட்டி மீனா குடும்பத்தை பிரச்சனையில் சிக்க வைக்கிறார்.
சிறக்கடிக்க ஆசை சீரியலில் பல எதிர்ப்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் முழுக்க ஜீவாவிடம் இருந்து ரோகிணியும் மனோஜும் வீட்டிற்கு தெரியாமல் பணத்தை வாங்கிய விஷயம் முத்து மூலமாக தெரிய வந்திருக்கிறது. இந்த உண்மை தெரிந்ததும் விஜயா ரோகினியை அடித்து துவைத்து எடுத்திருக்கிறார்.

அதோடு இனி எந்த உண்மையையும் என்கிட்ட மறைக்கக்கூடாது என்று வார்னிங் கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் ரோகிணியும் மனோஜும் கதிர் என்ற நபரிடம் ஏமாந்து 30 லட்சத்தை கண்டுபிடிப்பதற்காக மீனாவும் முத்துவும் முயற்சி செய்கிறார்கள். கதிரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதி கட்டத்தை தாண்டி இருக்கும் நிலையில் இனி நீங்கள் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று ரோகினி சொல்லி இருக்கிறார்.
அதற்கு விஜயாவும், அண்ணாமலையும் சம்மதம் சொல்லிவிட்டனர். இந்த நிலையில் முத்து மற்றும் மீனா கண்டுபிடித்த அதே பாதையில் போவது குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்பதற்காக சிட்டியை வைத்து ரோகிணி காய் நகர்த்துகிறார். கதிர் போட்டோவை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கோவிலில் இருக்கும் சிசிடிவி புட்டேஜ் வாங்கிட்டு வாங்க என்று சொல்லி அனுப்புகிறார்.

சிட்டி கோவில் நிர்வாகியிடம் சிசிடிவி ஃபுட்டேஜ் கேட்கிறார். ஆனால் அந்த நபர் தர முடியாது என்று சொல்லிவிடுகிறார். அப்போது இந்த கோவிலின் வாசலில் பூ கட்டும் மீனாவின் அம்மா, மீனா, அவருடைய தம்பி எல்லாருமே எங்களுக்கு தெரிஞ்சவங்க தான். மீனாவின் தம்பி சத்யா என்னுடைய ஃபிரண்டு தான் என்று சிட்டி அறிமுகம் செய்கிறார்.

ஆனால் அதற்கு அந்த நபர் நீங்க யாரா வேணா இருந்துக்கோங்க. ஏற்கனவே மீனா இந்த வீடியோவை தான் கேட்டாங்க நான் அவங்களுக்கே முடியாதுன்னு சொல்லிட்டேன். இப்போ உங்களுக்கும் தர முடியாது என்று சொல்கிறார். இதனால் இந்த வீடியோவை எடுப்பதற்கு முயற்சி செய்யும்போது மீனா சொல்லி தான் இந்த நபர் எடுக்க வந்திருக்கிறார் என்று மீனாவிற்கு பிரச்சனை வரும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் முத்து இன்றைய எபிசோடில் 2 வயதான தம்பதிகளை தன்னுடைய காரில் சவாரிக்கு அழைத்து வருகிறார். அவர்கள் இருவரும் மலேசியாவில் இருந்து வருவதாக கூறி இருக்கிறார்கள். பல வருடங்களாக மலேசியாவில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை முத்துவும் மீனாவும் கோவிலில் வைத்து வீடியோ எடுக்கின்றனர். வயதான தம்பதிகள் கணவன் மனைவியாக ஒருவருக்கொருவர் மாலை மாற்றுகிறார்கள்.

அப்போது மீனா முத்துவிடம் இவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று ரோகிணியின் அப்பா பற்றி விசாரிக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இதற்கு முத்துவும் சரி என்று சொல்கிறார். இதனால் ரோகிணி அப்பா பற்றிய உண்மைகள் அடுத்த வாரம் தெரியவருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ரோகிணியின் அப்பா பற்றி இப்பவே தெரியபோகிறதா? அல்லது வழக்கம்போல ஏதாவது ரோகிணி சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications