சிறகடிக்க ஆசை: 30 லட்சத்தால் சிட்டியிடம் சிக்கும் ரோகிணி.. முத்து கண்டுபிடித்த உண்மை! விஜயா நிலைமை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஜனவரி 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் 30 லட்சம் ஏமாற்றி போன கதிரை கண்டுபிடிப்பதற்காக ரோகிணி சிட்டியிடம் பேசுகிறார். இதனால் புது பிரச்சனை வரப்போகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாராத பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஜீவாவிடமிருந்து மனோஜ் மற்றும் ரோகிணி வாங்கிய 30 லட்சம் ரூபாய் பற்றி முத்து வீட்டில் போட்டு கொடுத்து விட இதனால் பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது. எப்படி என்கிட்ட இந்த விஷயத்தை மறைக்கலாம் என்று விஜயா ரோகிணியை போட்டு அடித்து பொளந்து எடுத்திருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அது போதாதுன்னு மனோஜ் ரோகிணியை அம்மா அடிக்கும்போது கூட சப்போர்ட் பண்ணாமல் ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ரோகிணி தன்னைப் பற்றிய உண்மை தெரிய வரும்போது மனோஜ் என்ன பண்ணுவார் என்று பெரிய கேள்விக்குறியோடு இருக்கிறார். இப்படியான நிலையில் இப்போது ரோகிணி சிட்டியிடம் மூன்று முறை கடன் வாங்கி இருக்கிறார் என்ற உண்மையையும் சத்யா மூலமாக மனோஜுக்கு தெரியவந்திருக்கிறது.

சத்யா சொன்னதை கேட்டதும் முத்துவும் மீனாவும் குழப்பத்தில் இருக்கின்றனர். அதோடு முத்து பற்றிய வீடியோவை லீக் செய்தது சிட்டி தான் என்று சொல்லும்போது ரோகிணியின் முகத்தில் வேர்த்து விறுவிறுத்து இருந்தது. இதனால் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது என்று முத்துவும் மீனாவும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

என்னுடைய போன் சிட்டியிடம் சிக்கி இருக்கு என்றால் அதற்கு காரணம் ரோகிணியாக தான் இருக்கும் என்று இன்று முத்து முக்கிய பாயிண்ட் பிடித்திருக்கிறார். இப்படியான நிலையில் ரோகிணியும் மனோஜும் புதியதாக வீடு வாங்க போறோம் என்று 30 லட்சத்தை கதிர் என்ற நபரிடம் ஏமாந்து இருக்கிறார்கள். அந்தக் கதிரை கண்டுபிடிக்கணும் என்று முத்துவும் மீனாவும் கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறார்கள்.

அதே நேரத்தில் முத்து கதிருடைய ஃபோட்டோ இருந்தால்தானே அவனை கண்டுபிடிக்க முடியும் என்று முத்து சொன்னதால் மீனா இவங்க அட்வான்ஸ் கொடுத்தது கோவிலில் வைத்துதான். கோவிலில் கேமரா இருக்கு அந்த கேமராவில் இருக்கும் கதிர் போட்டோவை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்று சொன்னதும் அதெல்லாம் வேண்டாம் நாங்க பாத்துக்கிறோம் என்று ரோகிணி சொல்லி இருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு காரணம் கதிரை நாம கண்டுபிடிச்சா அந்த 30 லட்சத்தையும் நாமலே எடுத்துக்கலாம் என்று ரோகிணி பிளான் போட்டு இருக்கிறார். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான வீடியோவில் சிட்டியை பார்த்து 30 லட்சம் ஏமாற்றி கொண்டு போன கதிரை பற்றி சொல்கிறார். அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று சிட்டி கேட்க பக்கத்தில் இருக்கிற கோவிலில் இருக்கும் கேமராவில் அந்த கதிருடைய வீடியோ இருக்கு.

அதை எடுத்துட்டு வாங்க நான் உங்களுக்கு அடையாளம் சொல்லுகிறேன். அதற்குப் பிறகு அந்த ஆளை கண்டுபிடிச்சிருங்க என்று சொல்ல, நான் அந்த ஆள கண்டுபிடிச்சு கொடுத்தா எனக்கு என்ன லாபம் என்று சிட்டி கேட்க நீங்க கேக்குற அமௌன்ட் தரேன் என்று ரோகிணி பேரம் பேசுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

இப்ப வரைக்கும் ரோகிணி கடன் வாங்கிய விஷயத்தை முத்துவும் மீனவும் வீட்டில் சொல்லாமல் இருக்கிறார்கள். இதனால் சிட்டி மற்றும் ரோகிணி இனி கொத்தாக முத்துவிடம் மாட்டுவார்கள் என்று தெரிகிறது‌ அதனால் அடுத்த வாரமும் இந்த சீரியலில் பரபரப்பான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+