சிறகடிக்க ஆசை: ஸ்ருதி ஹோட்டலில் நடந்த ஷாக்.. சீதாவுக்கு தெரிந்த உண்மை! அருண் போட்ட நாடகம்! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: விஜய் டி.வி-யின் 'சிறகடிக்க ஆசை' சீரியல்ல இந்த வாரம் ஃபுல்லா சென்டிமென்ட், ரொமான்ஸ், பஞ்சாயத்துனு எல்லாமே நிறைஞ்சு இருந்துச்சு! மீனாவுக்கு முத்து புது பைக் வாங்கிக் கொடுத்ததில ஆரம்பிச்சு, ஸ்ருதியின் ஹோட்டல் ஓபனிங் வரைக்கும் ஒரே கலாட்டாதான்!

முத்து-மீனாவின் ரொமான்ஸ்
மீனாவுக்காக ஷோரூம் போய் ஒரு சூப்பரான எலெக்ட்ரிக் பைக்கை முத்து பார்த்து வாங்கிட்டாரு! அப்புறம் கோவிலில் வண்டிக்குப் பூஜை எல்லாம் போட்டுட்டு, மீனா வண்டியை ஸ்டார்ட் பண்ணச் சொன்னார்.
பின்னால சத்யா, சந்திராவை உட்காரச் சொன்னா, "நீங்க ரொமான்டிக்கா ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க மாமா"ன்னு சத்யா பங்கம் பண்ணிட்டாரு! "அப்படியா?"ன்னு சொல்லிட்டு முத்துவும் மீனாவின் பின்னால உட்கார்ந்துகிட்டுப் கிளம்பிட்டாங்க!. மீனா, "வண்டி சத்தமே கேட்கலைங்க, நல்லா இருக்கு!"ன்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. ஆனா, இந்த ரொமான்ஸ் கொஞ்ச நேரம்தான் நீடிச்சது!
போலீஸ் செக்மேட்
கொஞ்ச தூரம் வந்ததும், ஒரு போலீஸ்காரர் வண்டியை நிறுத்தச் சொல்லிட்டார். உடனே மீனா, "எங்களுக்கு லைசென்ஸ் இருக்கு, ஹெல்மெட் போட்டிருக்கோம், நான் ஸ்லோவாதான் வந்தேன்"னு டக்டக்னு பதில் சொல்ல, முத்துவே ஷாக் ஆகிட்டார்!
ஆனா போலீஸ், "மாலை போட்டு, நம்பர் பிளேட்டை மறைச்சு இருக்கீங்க"னு சொல்லி ஃபைன் கட்டச் சொல்லிட்டார். "இப்பதான் பூஜை போட்டு வர்றோம் சார்"னு முத்து சொன்னாலும் கேட்கல! 'ஃபைன் கட்டித்தான் ஆகணும்'னு முத்து முடிவெடுத்தப்போ, கரெக்டா அருண் வந்து, "என்ன பிரச்சனை?"ன்னு கேட்டு, "சரி விட்டுடுங்க"ன்னு சொல்லி முத்து-மீனாவை அனுப்பி வெச்சார். "புது வண்டி நல்லா இருக்கு, எனக்கும் வாங்கி கொடுங்க"ன்னு அருண் கிண்டல் பண்ண, முத்து-மீனா கிளம்பிட்டாங்க!
ஸ்ருதியின் ஹோட்டல் ஓப்பனிங்
மறுபக்கம், ஸ்ருதியின் ஹோட்டல் இனாகரேஷன் ஃபங்ஷன் பிரமாண்டமாக நடந்தது! முத்து, மீனா, சீதா குடும்பத்தினர் என எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. முத்து, "டெக்ரேஷன் எல்லாம் சூப்பரா பண்ணி இருக்காங்க!"னு பாராட்டினார். ஆனா, மனோஜ் மட்டும் பொறாமையில கொதிச்சார். "நான் ஏதோ சின்ன ஹோட்டல்னு பார்த்தா பெருசா ஆரம்பிச்சிருக்காங்க"னு சொல்ல, ரோகிணி, "அவளுக்குச் சப்போர்ட் பண்ண அம்மா அப்பா இருக்காங்க, நமக்கு யார் இருக்காங்க?ன்னு குத்திக் காட்டினாங்க. "அந்தப் பணக்காரப் பைத்தியம் எவ்வளவு நாளைக்கு இதைப் பண்ணப் போகுதோ தெரியல!"னு மனோஜ் நக்கல் பண்ணிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில், ஸ்ருதியின் அம்மா-அப்பாவும் வந்து நக்கல் அடிக்க, மீனா பதிலடி கொடுத்து அசத்தினார்.
நீத்து வந்ததில் ஷாக்
முத்து, மீனா, சீதா என எல்லாரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது, ஸ்ருதியின் தோழி நீத்து வந்து ஸ்ருதிக்கு வாழ்த்து சொல்லிப் பேச, ஸ்ருதியின் அம்மா-அப்பாவுக்குக் கடுப்பானது. 'இவ ஏன் இங்க வந்தா?'ன்னு அவங்க மனசுக்குள்ளே பேசிக்கிட்டாங்க.
பிறகு, பார்வதியின் ஃபிரெண்ட் அவரது கணவர் வர, அவர் தான் அங்கு செஃப்பா வேலை செய்யப் போகும் ஆனந்தோட அத்தை மாமான்னு அறிமுகப்படுத்த, எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க. அண்ணாமலை ரிப்பன் கட் பண்ணி ஹோட்டலைத் திறந்து வைக்க, விளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்.
ஸ்ருதி கல்லாவில் உட்கார்ந்ததும், முத்து லட்டு தட்டைக் கொண்டு வந்து "முதல்ல நீ வியாபாரம் பண்ணுப்பா"னு அண்ணாமலையிடம் கொடுக்க, "ஒரு லட்டு எவ்வளவுமா?"ன்னு அவர் கேட்டார். "நூறு ரூபாய்"னு ஸ்ருதி சொன்னதும், "ரொம்ப காஸ்ட்லி லட்டா இருக்கும் போல"னு சொல்லி எல்லாரும் சிரிச்சு, குடும்பத்துல இருக்குறவங்களுக்கு லட்டு ஊட்டி விட்டார்கள்.
முத்துவின் சீக்ரெட் அம்பலம்
இத்தனை சந்தோஷத்துக்கு நடுவுல ஒரு பெரிய உண்மை வெளியாச்சு! மறுபக்கம், கோகிலா, மீனாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "உங்க அம்மா கடையைத் திரும்ப வைக்கிறதுக்குக் காரணம் முத்துதான்!" என்று சொல்ல, மீனாவே ஷாக் ஆகிட்டாங்க!
உடனே சீதா, அந்த உண்மையைத் தெரிஞ்சதும் முத்துகிட்ட போய், "நீங்க தான் எங்க அம்மா கடை திரும்பக் கிடைக்கக் காரணம் என்ற உண்மை தெரிய வந்திட்டு!" என்று சொல்ல, முத்து, "நான் நம்ம வீட்டுக்காகத் தான் செய்தனான்" என்று சொல்லி, தான் செய்த நல்ல விஷயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தினார்! முத்துவின் பாசம், குடும்பத்துக்காக அவர் செய்த உதவியின் ரகசியம் வெளியாகி, இன்றைய எபிசோட் பாசமும், ஆச்சரியமும் நிறைந்து முடிந்தது!












Click it and Unblock the Notifications