Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணியை தொடர்ந்து மீனாவையும் மிரட்டிய நபர்! பாட்டி சொன்ன விஷயம்! அடுத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை 'சீரியலில், தீபாவளி சலசலப்பு ஒருபக்கம் இருக்க, முத்துவின் கிராமத்தில் நடந்த சம்பவங்கள் ரசிகர்களை பெரியக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோகிணி, கிரிஷ் மற்றும் மகேஸ்வரி ஒரு கிராமத்திற்கு செல்ல, அதே கிராமத்தில் முத்துவும் மீனாவும் ஒரு மர்ம மனிதனால் மிரட்டப்படுவது இன்றைய எபிசோடின் முக்கிய திருப்பமாக இருந்தது.

Siragadikka aasai serial vijay tv

மனோஜை ஏமாற்றிய ரோகிணி

மனோஜின் வீட்டிலிருந்து கிளம்பிய ரோகிணி, கிரிஷ் பாட்டியிடம், "இதுக்கப்புறம் எனக்கு தெரியாம நீ எதுவும் செய்யக் கூடாது. அவங்க உறவே நமக்குத் தேவை கிடையாது!" என்று திட்டிவிட்டு, பாட்டி ஊருக்கு வரச் சொன்னபோது, "சரி, நீங்க கிளம்புங்க, நான் கிளம்பி வரேன்" என்றுச் சொல்லிச் சமாதானம் செய்கிறார்.

மனோஜிடம் சமாளிப்பு

அந்த நேரம் பார்த்து மனோஜ் வந்து, "யார் கிளம்பறது?" என்று கேட்க, ரோகிணி, "வித்யா கிட்ட ஊருக்குப் போறதா சொல்லிக்கிட்டு இருந்தேன்" என்று சொல்லி சமாளித்து விடுகிறார். சிறிது நேரத்தில் அனைவரும் பாட்டி வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

முத்துவின் நண்பர்கள்

முத்துவின் கிராமத்தில், ஒவ்வொருவராக வந்து பாட்டியை நலம் விசாரித்துவிட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது முத்துவின் நண்பர்கள் வர, முத்து அவர்களிடம் ஜாலியாகப் பேசிக் கொண்டு இருக்க, அவர்கள் முத்துவிற்குப் பிடிக்கும் எனக் கரும்புப் பால் எடுத்துக் கொண்டு வருகின்றனர். அதனைக் குடித்துப் பார்த்த முத்து, சூப்பராக இருப்பதாகச் சொல்லி அனைவருக்கும் கொடுக்கிறார். அதேபோல, கிரிஷ், ரோகிணி மற்றும் மகேஸ்வரி மூவரும் அவர்களது சொந்தக் கிராமத்துக்கு வருகின்றனர்.

மகேஸ்வரியை மிரட்டிய அவன்

மகேஸ்வரியும் ரோகிணியும் ஊருக்கு வந்த பிறகு, ரோகிணிக்குத் தெரியாமல் மகேஸ்வரி யாருடனோ பேசிக் கொண்டு இருக்கிறார். "உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு. எனச் சொல்லிவிட்டு, மகேஸ்வரி வெளியில் வந்து ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு நபர் வந்து, "இங்கே ஏன் நீ வந்த? வந்திருக்கக் கூடாது! போயிடு!" என்று கத்தி சொல்ல, மகேஸ்வரி மற்றும் ரோகிணி இருவரும் பயப்படுகின்றனர்.

மிரட்டல்

"சரி, நம்ம அப்புறம் பாத்துக்கலாம். நீ எங்கேயும் வெளியே வராத" என்றுச் சொல்லிவிட்டு ரோகிணி போனை வைக்கிறார். உடனே மனோஜ் வந்து சாப்பிட அழைத்துச் செல்கிறார். மறுபக்கம், முத்துவும் மீனாவும் கோவிலில் பூஜைக்காகச் சீட்டு வாங்க வருகின்றனர். அப்போது முத்துவின் நண்பர் வந்துவிட, அவர்களிடம் முத்து பேசிக் கொண்டிருக்கிறான்.

அதே வார்த்தைகள்

அப்போது, மகேஸ்வரி இடம் பேசிய அதே நபர் வந்து மீனாவிடம், "எதுக்காக வந்த? இங்க வந்து இருக்கக் கூடாது! போயிடு!" என்று அதேபோல் சொல்ல, மீனா பயப்படுகிறார். உடனே முத்து வந்து, "நீங்க யாரு? நீங்க எதுக்கு வரக்கூடாதுன்னு சொல்றீங்க?" என்று கேட்க, அந்த நபர், "விதி தான் சொல்றேன்!" எனச் சிரித்துவிட்டுப் போக மீனா மேலும் பயப்படுகிறார்.

உடனே முத்து, "அவரே மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி இருக்காரு. எதுக்கு பயப்படுற?" என்று மீனாவைச் சமாதானம் செய்கிறான். வீட்டுக்கு வந்தும் மீனா அதையே நினைத்துப் பயந்து கொண்டே இருக்க, பாட்டி வந்து முத்துவிடம், "அந்தப் பொருளையெல்லாம் கரெக்டா வாங்கிட்டு வந்தியா?" என்று கேட்டுவிட்டுப் போகிறார்.

அண்ணாமலையின் கேள்வி

அண்ணாமலை வந்து பணம் கொடுக்க, " நான் வச்சிருக்கேன், அப்பா" என்று முத்து சொல்கிறான். "மீனா எதுக்கு இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்கா?" என்று அண்ணாமலை கேட்க, முத்து "அதெல்லாம் ஒன்னும் இல்லை, பா" என்றுச் சமாளிக்கிறான். ஸ்ருதி பாட்டியிடம் வந்து, "நீங்க ஆன்ட்டியை ஏதாவது வேலை வாங்குங்க. இந்த வீடியோ எடுத்துப் போடுறேன்!" என்றுச் சொல்ல, பாட்டி, "அப்படியெல்லாம் பண்ண முடியாதுமா. நான் அப்படியெல்லாம் அதிகாரம் பண்ண மாட்டேன்" என்றுச் சொல்கிறார்.

"அவங்க வீட்ல மீனாவை எவ்வளவு டார்ச்சர் பண்றாங்க தெரியுமா?" என்று ஸ்ருதி சொல்ல, "அப்படியா?" என்றுச் சொல்லிவிட்டுப் பாட்டி விஜயாவிடம் வருகிறார். பிறகு விஜயாவை டான்ஸ் ஆட சொல்ல விஜய் அங்கு டான்ஸ் ஆடி கொண்டு இருக்க, ஸ்ருதி வீடியோ எடுக்கிறார். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+