சிறகடிக்க ஆசையில் இன்று செம சம்பவம்! அண்ணாமலையிடம் சாமியாடி சொன்ன விஷயம்! ஆடி போன குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், அண்ணாமலையின் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், முத்துவின் மனைவி மீனாவை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்கள் ரசிகர்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று (நவம்பர் 12) எபிசோடில், கோவிலில் பார்த்த சாமியாடி வீட்டுக்கே வந்து மீனாவை மிரட்டியதால், என்ன நடக்கப் போகிறதோ என்றப் பெரிய டென்ஷன் (TENSION) கிளம்பியுள்ளது!

கலக்கத்தின் ஆரம்பம்
தீபாவளி கொண்டாட்டத்திற்காக அண்ணாமலையின் ஊருக்கு எல்லாரும் சென்றிருக்கிறார்கள். அங்கு மீனா, முத்துவுடன் கோவிலுக்குப் போனபோது, அங்கே ஒரு சாமியாடி வந்து, "இந்த ஊரை விட்டே போயிடு!" என்றுச் சொல்லி மிரட்டினார். அதைக் கேட்டு மீனா பயங்கரமாக மிரண்டு போனார். வீட்டுக்கு வந்த பிறகும் அதே நினைப்பிலேயே இருக்க, விஜயா, முத்து, ரோகிணி, மனோஜ், ரவி, ஸ்ருதி எல்லோரும் சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மீனா மட்டும் அந்த சாமியாடி சொன்னதை நினைத்து ஒரு ஓரமாக சோகமாக நிற்கிறார்.
சாமியாடி பற்றி பாட்டி சொன்ன பகீர்
மீனா சோகமாக நிற்பதைப் பார்த்த முத்துவின் பாட்டி, அவரிடம் வந்து விசாரிக்கிறார். "நான் அப்போதிலிருந்தே உன்னைக் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். சோகமாவே இருக்க, என்ன ஆச்சு?" எனக் கேட்க, அதற்கு மீனா கோவிலில் நடந்த விஷயத்தைச் சொல்கிறார். உடனே முத்து "அந்தச் சாமியாடி யார் பாட்டி?" எனக் கேட்க, பாட்டி ஒரு ரகசியத்தை உடைக்கிறார். "அவன் யாருனே தெரியல, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் இந்த ஊருக்கே வந்தான். அவன் கோவில்லயே தான் இருப்பான். யாராவது சாப்பிடக் கொடுத்தாகூட அவனுக்குப் பிடிச்சிருந்தா தான் வாங்குவான்" என்றுச் சொல்கிறார்.
மீனாவின் பீதி
பாட்டி சொன்ன விஷயம் தான் மீனாவைப் பெரிய பீதியில் ஆழ்த்தியது! அந்தச் சாமியாடி பற்றி மேலும் ஒரு பகீர் தகவலைப் பாட்டி சொல்கிறார். "அவன் என்ன சொன்னாலும் நடக்கும்!" என்றுச் சொல்லும் அவர், அதற்கு உதாரணமாக, "ஒரு முறை மழை வரப் போகுதுன்னு சொன்னதும் மழை வந்துச்சு. கல்யாணமே ஆகாமல் இருந்த ஒருப் பெண்ணிடம் 'தாலி கட்டிக்கோ'ன்னு சொன்னான். அவன் சொன்ன 10 நாள்லயே அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சு" எனப் பாட்டி கூறியதால், மீனா மேலும் பதற்றமடைந்தார்.
'என்ன நடக்கப் போகிறதோ' என்கிற பீதியிலேயே அவர் இருக்க, இரவில் அந்தச் சாமியாடி திடீரென வீட்டுக்கே வந்துவிட்டார். வீட்டின் பின்புறம் வந்து அவர் சத்தம் போட்டதைக்கேட்டு அனைவரும் சென்று பார்க்கின்றனர். அங்குக் கத்திக்கொண்டே நிற்கும் அந்த நபர், எல்லாரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால், ரோகிணியைப் பார்த்து மட்டும் முறைத்ததால், அவள் ஷாக் ஆகிப் போகிறாள்! பின்னர், மீனாவைக் கைகாட்டி, "போயிடு, ஊரை விட்டே போயிடு!" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
இதனால் மீனாவுக்கு மேலும் பயம் வந்துவிட்டது. 'அந்தச் சாமியாடி சொன்னது எல்லாமே நடக்குமோ?' என்று அவர் கவலைப்படுகிறார். மறுபுறம், ரோகிணி அவரது அப்பாவுக்குத் திதி கொடுப்பதாக இருந்த கோவிலில், ஊரில் ஒரு சாவு விழுந்ததால், அருகில் உள்ள வேறொரு கோவிலுக்கு ரோகிணியை வரச் சொல்லி இருக்கிறார் லெட்சுமி.
திட்டமிட்டபடி திதி கொடுக்க முடியுமா? ரோகிணியின் இரகசியம் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த மர்மமானச் சாமியாடி யார்? அவருக்கும் மீனாவுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது ரோகிணியின் இரகசியம் அவனுக்குத் தெரியுமா? இந்த மிரட்டலுக்குப் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications