சிறகடிக்க ஆசை: உண்மை தெரிந்ததும் தற்கொலை செய்ய துணிந்த ரோகிணி! மீனா கொடுத்த அதிர்ச்சி! கிரிஷ் வேண்டுகோள்
சென்னை : 'சிறகடிக்க ஆசை' சீரியல்ல, மீனா மனசுலக் குடைஞ்சுட்டு இருந்த பெரிய கேள்விக்கு பதிலை, இன்னைக்கு அவங்களேக் கையும் களவுமாப் பிடிச்சிட்டாங்க! ரோகிணிங்கிறது பொய்யானப் பேரு, அவர்தான் கிருஸ் உடைய அம்மா கல்யாணி என்ற உண்மை எல்லாம் தெரிஞ்சுப் போனதுல, குளக்கரையே சண்டைக் களமா மாறிடுச்சு! வாங்க... இன்னைக்கு எபிசோட்ல என்ன நடந்ததுன்னுப் பார்க்கலாம்!
பாட்டி வீட்டுல பிடிச்ச பூதம்
தீபாவளி கொண்டாடக் குடும்பமே முத்துவோட பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க. அங்கக் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுறாங்க. பூஜை ஏற்பாடு நடந்துட்டு இருக்க, ரோகிணிக்கு அவங்க அம்மாட்ட இருந்து போன் வருது. ரோகிணி கிளையன்ட் கால் பண்றாங்கன்னு பொய் சொல்லிட்டு தனியாப் போய் பேசும்போது, அம்மா லட்சுமி ஒரு குண்டா தூக்கி போடுறாங்க!."நம்ம திதி கொடுக்க இருந்த கோவிலை மூடிட்டாங்க. அதனால, இப்போ அதுக்கு பக்கத்துல இருக்குறக் கோவிலுக்கு வந்திருக்கோம்!"ன்னுச் சொல்ல, ரோகிணிக்குத் தலையே சுத்துது. கடைசியாப் பார்த்தா, அவள் இருக்குறக் கோவிலுக்குத்தான் அவங்க வந்திருக்காங்கன்னுத் தெரியுது!

குளக்கரையில் நடந்த சடங்கு
எப்படியாவதுக் குளக்கரைக்கு போயிடுன்னு அம்மா சொல்ல, ரோகிணி "வயிறு சரியில்லை"ன்னுப் பொய் சொல்லிட்டு தனியா வெளியே வந்து, கிரிஷ், அம்மா லட்சுமியோடக் குளக்கரையில அமர்ந்து திதி கொடுக்கிறா. உள்ளேப் பூசாரி, "வீட்டு மருமகள் தான் குளத்துல இருந்து தண்ணி எடுத்துட்டு வரணும்"னுச் சொல்ல, மீனா குடத்தை வாங்கிட்டுப் புறப்படுறா.
குளக்கரைக்குப் போன மீனா, அங்க ரோகிணி, கிரிஷ், லட்சுமி எல்லாரும் உட்கார்ந்துச் சடங்கு பண்ணிட்டு இருக்கிறதை பார்த்துட்டு உறைஞ்சுப் போயிடுறா!. திதி கொடுக்கிற சடங்கு முடிய, மீனா அங்க வந்ததை பார்த்த ரோகிணி அதிர்ச்சி அடைஞ்சுட்டு, நைசாப் பக்கத்துல போறா. "நான் இங்கச் சும்மா வந்தேன். அப்போ அவங்க வந்ததைப் பார்த்ததும் பூஜையிலக் கலந்துகிட்டேன்"ன்னுச் சொல்றா.
இதைக் கேட்ட மீனாவுக்குக் கோபம் உச்சத்துக்குப் போச்சு! ரோகிணிக்குப் பளார்னு அறை விட்டா! "இப்பவும் கூச்சமே இல்லாம நடிக்குறேல்ல!"ன்னுத் திட்டித் தீர்க்கிறா!. அருகில் இருக்கிற லட்சுமி, "வேண்டாம் மீனா, அவள விட்று"ன்னு சொல்ல, மீனா, "இவளவிட நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க. இவ தான் உங்க துபாய்ல இருக்குறப் பொண்ணா?ன்னு கேட்க, லட்சுமி வாயடைச்சுப் போயி நிக்கிறாங்க!
மனசாட்சியே இல்லையா
ரோகிணியோட உண்மை பேர் கல்யாணிங்கிறதும், அவ கிரிஷை மறைச்சுட்டு, குடும்பத்தையே ஏமாத்திட்டு இருந்ததும் மீனாவுக்குத் தெரிஞ்சுப் போச்சு! மீனா அழுதுக்கிட்டே ஆவேசமாக் கேட்குற கேள்விகள் இருக்கே... சும்மா அடிச்சுத் துவைக்குது!
"உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா...? எத்தனைப் பொய் சொல்லிருக்க! எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை அடிச்சேக் கொல்லணும் போல இருக்கு!""என்னை அடி மீனா"ன்னு அழுதுக்கிட்டே ரோகிணி, "நான் சொல்றதக் கொஞ்சம் கேளு"ன்னு கெஞ்ச, மீனா, "வாய மூடு டி!"ன்னு கத்திட்டா!
"மொத்தக் குடும்பமும் இங்க இருக்கும்போதே, இங்க வந்து இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?" "உன் பேர் கூட உண்மையானது கிடையாதுல. அம்மா இறந்துட்டாங்கனு சொன்னியே, அப்ப இவங்க யாரு? உனக்குப் பொறந்த குழந்தையை மறைச்சு, அவனையும் ஒரு அனாதை மாதிரி அலைய வச்சிருக்க! உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி?"ன்னு சரமாரியாகத் திட்டித் தீர்க்கிறா! அதோடு இந்த உண்மையை வீட்டில் எல்லாரிடமும் சொல்ல போறீங்க என்று மீனா கிளம்பும்போது, ரோகிணி நீங்க சொன்னீங்கன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு நாடகம் போட கிரிஷ் அம்மாவை பத்தி எதுவும் சொல்லாதீங்க என்று மீனாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா நான் சொல்லப்போறேன் என்று கிளம்புகிறார்.












Click it and Unblock the Notifications