சிறகடிக்க ஆசை: குற்றவுணர்ச்சியில் மீனா, உண்மையை நீயே சொல்லு! ரோகிணியை வெடவெடக்க வைத்த முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரிந்துபோன மீனா, தற்போது தன் கணவர் முத்துவால் எதிர்பாராதப் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்! ரோகிணியை மாட்டிவிடத் துடித்த மீனாவே, இப்போது உண்மையை பூட்டி வைக்கத் திணறுவது தான் இன்றைய எபிசோடின் பெரும் திருப்பம்!

மீனாவுக்கு தெரிந்த ரகசியம்
ரோகிணி தான் கல்யாணி என்ற உண்மையும், இத்தனை நாட்களாக அவர் குடும்பத்தை ஏமாற்றி வந்ததையும், கிரிஷின் அம்மாவும் ரோகிணி தான் என்கிற பெரிய ரகசியமும் மீனாவுக்குத் தெரிந்துவிட்டது. இந்த உண்மைகளை உடனடியாகக் குடும்பத்தினரிடம் சொல்லியே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நின்ற மீனாவை, ரோகிணி எமோஷனல் பிளாக்மெயில் செய்து, உண்மையைச் சொல்ல விடாமல் தடுத்துவிட்டார். இதையடுத்து, ரோகிணி மற்றும் மீனா இருவரும் பூஜையில் கலந்துகொண்டனர்.
முத்துவின் விருந்தாளிகள்
தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்திருந்த அண்ணாமலை குடும்பத்தினருக்கு வீட்டில் விருந்து ஏற்பாடு நடக்கிறது. இதற்காக இலை வாங்கிவர முத்து வெளியே செல்கிறார். அப்போது முத்து, ரோகிணியின் மகனான கிரிஷையும், அவரதுப் பாட்டி லெட்சுமியையும் எதிர்பாராத விதமாகப் பார்க்கிறார். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கிரிஷின் தாத்தாவுக்குத் திதி கொடுக்க வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதைக்கேட்ட முத்து, அவர்களைத் தனது வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டேச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி அழைக்கிறார். அவர்களும் வேறு வழியின்றி ஓகே சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்கள்.
மீனா குழப்பம்
ரோகிணி ஏமாற்றியதை பற்றிய யோசனையிலேயே இருந்த மீனா, சமையலில் கோட்டைவிட்டு, அப்பளங்களை எல்லாம் கருகவிட்டுப் பொரித்துத் தருகிறார். அதைப் பார்த்த ஸ்ருதி, "என்ன ஆச்சு மீனா?" என்று கேட்க அதற்கு மீனா சமாளிக்கிறார். நீங்க குளத்துக்கு தண்ணி எடுக்க போயிட்டு வந்ததுல இருந்து தான் ஒரு மாதிரி இருக்கீங்க அங்க ஏதாவது பேயை பாத்தீங்களா என்று ஸ்ருதி கேட்க, அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வந்ததும் இவங்க ஒரு மாதிரி தானே இருக்காங்க என்று ரோகிணியிடமும் ஸ்ருதி கேட்க அதற்கு ரோகிணி இல்ல அவங்க நல்லா தான் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கு விருந்தாளி வந்திருப்பதாக முத்து அறிவிக்கிறார்.
ரோகிணி அதிர்ச்சி
யாராக இருக்கும் என்று ஆவலோடுப் பார்த்த மீனா, கிரிஷையும் அவரதுப் பாட்டியையும் உள்ளேப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறாள்! ஆனால், இதைப் பார்த்த ரோகிணி வெடவெடத்துப் போகிறார். உடனே மீனாவிடம் ஓடிச் சென்ற ரோகிணி, "முத்துவுக்கு எதுவும் தெரிஞ்சிருக்காதுல்ல?" எனக் கேட்கிறார். அதற்கு மீனா, "அவருக்கு உண்மை தெரிஞ்சிருந்தால், இந்நேரம் நீ வெளியப் போயிருப்ப!" என்று சொல்கிறார்.
மீனாவின் குற்றவுணர்ச்சி
அப்போது கிரிஷும் அவரது பாட்டியும் வீட்டிற்கு வந்திருப்பதால், உண்மையை தனக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கும் மீனாவுக்குக் குற்றவுணர்ச்சி அதிகமாகிறது. உண்மையை மறைக்கிறோமே என்றக் குற்ற உணர்ச்சி தனக்கு உறுத்துவதாகவும், இப்போது அவர்கள் இங்கேயே வந்துவிட்டதால், "அவர்களின் முகத்தைக் கூட என்னால பார்க்க முடியல" என்றும் மீனா கூறுகிறார். உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என ரோகிணி கெஞ்சுகிறார்.
மீனாவின் நிபந்தனை
அதற்கு மீனா, "இப்ப கூட ஒன்னும் இல்ல, எல்லார்கிட்டயும் நீயே உண்மையைச் சொல்லிடு" என நிபந்தனை வைக்கிறார். ரோகிணியோ, "நான் கண்டிப்பா எல்லார்கிட்டயும் ஒரு நாள் உண்மையைச் சொல்கிறேன். தயவு செஞ்சு இப்ப வேண்டாம்" என மீண்டும் கெஞ்சுகிறார்.
பிறகு எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்படுகிறது. அப்போது வழக்கம் போல விஜயா கிரிஷை தப்பு பண்ணின போது சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்திருக்கணும் என்று குத்தலாக பேச அதற்கு பாட்டி பதிலடி கொடுக்கிறார். கிரிஷின் பாட்டியும், கிரிஷும் விருந்தாளியாக வந்திருக்கும் நிலையில், ரோகிணியின் உண்மையை மீனா உடைப்பாரா அல்லது குற்றவுணர்ச்சியோடு அமைதியாக இருப்பாரா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்!
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications