சிறகடிக்க ஆசை: ரோகிணி தான் கல்யாணி.. மீனாக்கு தெரிந்த உண்மை, ஆதாரத்தை பார்த்த முத்து.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இப்போதைக்கு ஒரே பதட்டமா இருக்கிறவர் நம்ம ரோகிணி தான்! கல்யாணிங்கிற ரோகிணியோட உண்மை முகம், முத்து, மீனாவுக்குத் தெரிய வரப் போகுதான்னு ஒரு பக்கம் டென்ஷன் ஏறிட்டே இருக்கு. இன்னைக்கு எபிசோடுல என்ன நடந்ததுன்னு, வாங்க சுவாரஸ்யமாப் பார்க்கலாம்!

கோயிலுக்கு வந்து மிரட்டிய இரண்டு பேர்கள்
வித்யாவோட கல்யாணத்துக்குக் கோயிலுக்கு வந்த ரோகிணி, அங்க ஒரு ஃப்ரெண்டை பார்க்கிறாங்க. அந்த ஃப்ரெண்ட் ரோகிணி கிட்ட, "உங்க அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே"ன்னு கேட்கிறாங்க. அதுக்கு ரோகிணி, "அவங்க இந்தக் கல்யாணத்துக்கு வந்தா, அப்புறம் என்னோட கல்யாண வாழ்க்கையே முடிஞ்சிடும்!"னு சொல்லி டென்ஷனாகிறாங்க.
ஆனா, ரோகிணி பயந்த மாதிரியே நடந்துச்சு! அங்கே கொஞ்ச நேரத்துல ரோகிணியோட அம்மா வந்து நிக்கிறாங்க! அவங்க வந்ததுமே பதறிப்போன ரோகிணிக்கு, அடுத்த ஷாக் காத்திருந்துச்சு. அதே கல்யாணத்துக்கு, ரோகிணியோட முதல் கணவரான சேகரோட சொந்தக்கார பொண்ணு ஒருத்தங்க வந்து நிக்கிறாங்க!
முத்து - மீனாவுக்கு தெரிய வந்த ரகசியம்
அவங்களை பார்த்த ரோகிணி, "ஐயோ... இவங்க முத்து, மீனா முன்னாடி ஏதாவது சொல்லிட்டா, பெரிய பிரச்சனை ஆகிடுமே"ன்னு பயத்துல உறைஞ்சுபோறாங்க. அந்தச் சொந்தக்கார பொண்ணு, தன் கணவர்கிட்ட, "அது சேகரோட மனைவி கல்யாணி தான்!" ன்னு ரகசியமாச் சொல்றாங்க! ஆனா, இந்த விஷயம் முத்து - மீனா காதுக்குப் போச்சான்னு தெரியல.
இதற்கிடையில மனோஜ் வந்து, "ஷோ ரூமுக்கு போக லேட் ஆகிட்டு"ன்னு ரோகிணி கிட்டப் பேசிக்கிட்டு இருக்காரு. அதே நேரத்துல, சேகரோட சொந்தக்கார பொண்ணு ரோகிணி கிட்ட போய், "உங்க குழந்தை எப்படி இருக்கான்?"னு கேட்கிறாங்க! ரோகிணிக்கு வந்த டென்ஷனைச் சொல்ல வார்த்தையே இல்லை!
கோபமான ரோகிணி, அந்தச் சொந்தக்காரப் பொண்ணைப் பார்த்து, "எதுக்காக அடுத்தவங்க குடும்பத்துல பிரச்சனையை பண்ண பார்க்கிறீங்க?"ன்னு சண்டைக்குப் போறாங்க.
மீனாவுக்கு வந்த சந்தேகம்
இந்தச் சலசலப்பு ஒருபக்கம் நடக்க, முருகனோட கல்யாணத்துக்கு முத்துவும் மீனாவும் சேர்ந்து தாலி எடுத்துக் கொடுக்கிறாங்க. பிறகு ரோகிணியோடு போட்டோ எடுக்க வேண்டும் என்று வித்தியா சொன்னதால் மீனா வந்து ரோகிணியை கூப்பிட வருகிறார். அப்போது சேகரின் உறவுக்கார பெண் ரோகினியிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்கிறார். உடனே ரோகினி மீனாவிடம் வித்தியாவின் சித்தியை அனுப்பிட்டு வரேன் என்று சொல்லி விடுகிறார். இதனால் மீனா வித்யாவிடம் சென்று உங்கள் சித்தியை அனுப்பிட்டு வருவாங்களாம்ன்னு சொல்ல எனக்கு சித்தியே கிடையாது என்று வித்யா சொன்னதும் மீனாவுக்கு சந்தேகம் வருகிறது.
அடுத்து, வீட்டுக்கு போன பிறகு மீனா, கல்யாண போட்டோவைப் போன்ல பார்த்துக்கிட்டு இருக்கும்போது, முத்து கிட்ட, "அந்தப் பார்லர் அம்மா (ரோகிணி) யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கா?"னு கேட்கிறாரு. அதுக்கு மீனா, "நான் இந்தப் பொண்ணை (சேகர் சொந்தக்காரப் பெண்) கல்யாணம் நடக்கும்போதும் பார்த்தேன். அவங்களைப் பார்க்கச் சந்தேகமா இருக்கு"ன்னு சொல்றாங்க.
மீனா சந்தேகம் வந்த நேரத்துல, முத்து அதே போட்டோவைப் பார்க்கிறாரு. அந்தப் போட்டோவுல ரோகிணியோட அம்மாவையும் பார்க்கிறார்! என்னங்கடா நடக்குதுன்னு அதிர்ச்சி அடைஞ்ச முத்து, மீனாவிடம், "போட்டோவுல இருக்கிறவங்க யாரு?"ன்னு கேட்க, அதற்கு மீனா இது கிருஷ் உடைய பாட்டி தான் ஆனா அவங்க இந்த கல்யாணத்துக்காக வந்தாங்களா? கோவிலுக்கு சாமி கும்பிட வந்தாங்களானு தெரியலையே என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரோகிணி பதட்டத்தோட உடனே தன் அம்மாவுக்கு போன் எடுத்துப் பேசுறாங்க!
இப்போ முத்துவுக்கு ரோகிணியோட அம்மாவைப் பார்த்ததுல வந்த சந்தேகம், கல்யாணி ரகசியத்தை உடைக்குமா? இல்லைன்னா, ரோகிணி எப்படியாவது சமாளிச்சிடுவாங்களான்னு காத்திருந்து பார்க்கலாம்! இன்றைய எபிசோடு ஒரே பரபரப்புதான்!












Click it and Unblock the Notifications