சிறகடிக்க ஆசை: மீனாவிடம் வசமாக சிக்கும் விஜயா! முத்து கண்டுபிடித்த உண்மை! அடுத்ததாக மாட்டும் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக இருந்தது. மனோஜின் சதித்திட்டத்தை முறியடிக்கும் மீனாவின் புத்திசாலித்தனம், விஜயாவின் சுயநலம், மற்றும் குடும்ப சண்டைகள் எனப் பல சுவாரசியமான காட்சிகள் நிறைந்திருந்தன.

மனோஜை சிக்க வைத்த ராணி
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் செய்த தவறை வெளிக்கொண்டு வர, ராணி ஒரு புதிய திட்டத்தைப் போடுகிறார். அவர் தனது பையில் ஒரு சிறிய கேமராவை மறைத்து வைத்து, மனோஜ் உடன் பேசுகிறார். "எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வாங்கித் தர வேண்டும்" என்று ராணி கேட்க, அதற்கு மனோஜ், "அதெல்லாம் முடியாது" என மறுக்கிறார். உடனே ராணி, "இந்த வீடியோவை நாங்கள் அனைவருக்கும் அனுப்பி விடுவோம்" என்று மிரட்டுகிறார். அதிர்ந்துபோன மனோஜ், வேறு வழியின்றி வாஷிங் மெஷினை கொடுத்து அனுப்புகிறார்.
விஜயாவின் சுயநலம்
மறுபுறம், விஜயா தனது யோகா வகுப்பிற்கு அனைவரும் வந்ததும், தான் ஒரு நல்ல மனிதர் போல காட்டிக்கொள்ள முயல்கிறார். அவர், கிரிஷ் வீட்டில் இருந்த விஷயத்தையும், அவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடிவெடுத்தபோது, தான் தலையிட்டுத் தடுத்ததாகவும், அதற்காகத் தனது இரண்டாவது மகன் துணையுடன் பள்ளிக்குச் சென்று கெஞ்சியதாகவும் கதை கதையாகப் பேசுகிறார். உண்மையில், இந்த உதவியை முத்துவும் மீனாவும் செய்திருந்தனர். விஜயாவின் பேச்சைக் கேட்ட எல்லாரும் கைதட்டிப் பாராட்டுகின்றனர்.
இந்த நேரத்தில், மீனா அங்கே நுழைகிறார். விஜயாவின் பொய்யைக் கேட்டதும், எதுவும் சொல்லாமல் கைதட்டியபடியே உள்ளே வருகிறார். "ஆமாம், எங்க அத்தைக்கு ரொம்ப நல்ல மனசு. இவங்களைப் போல இருந்தால் இந்த உலகத்தில் எவ்வளவு நல்லது நடக்கும்!" என்று விஜயாவை மறைமுகமாகப் புகழ்வதுபோல் கிண்டல் செய்கிறார். "ஒரு சிலர் அந்தப் பையன் சீர்திருத்தப் பள்ளிக்கு போகணும்னு ஆசைப்பட்டாங்க, ஆனா எங்க அத்தைக்கு அது மாதிரி எண்ணம் கிடையாது" என்று சொல்லி விஜயாவின் சுயநலத்தை வெளிப்படுத்துகிறார். "இங்கெல்லாம் சில பேர் சொந்த மகனையே சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பணும்னு சொல்லுவாங்க, ஆனா எங்க அத்தை அப்படி கிடையாது" என்று மறைமுகமாக விஜயாவுக்குப் பதிலடி கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
கிரிஷ் பாட்டி செய்த பிரச்சனை
மீனா வெளியே சென்றதும், சிந்தாமணி விஜயாவிடம் வந்து, "உங்க இரண்டாவது மருமகள் என்ன சொல்லிட்டுப் போனா தெரியுமா?" என்று கேட்டு, "டான்ஸ் கிளாஸை மூடினதுபோல, இதையும் எப்ப மூடப் போறாங்களோ தெரியலைன்னு சொன்னா" என்று பொய் சொல்கிறார். ஆனால், மீனா அப்படிப்பட்டவர் இல்லை என்று பார்வதி சொல்ல, "அவள் ஒருவரிடம் ஒரு மாதிரி பேசுவா" என்று சிந்தாமணி தொடர்ந்து விஜயாவின் கோபத்தைத் தூண்டுகிறார். கோபமடைந்த விஜயா, "அவ திமிரை அடக்குகிறேன்" என்று சவால் விடுகிறார்.
மறுபக்கம், முத்துவிடம் விஜயா பேசிய விஷயங்களை மீனா சொல்கிறார். "அம்மா இப்படித்தான் கொஞ்ச நாளா பண்ணிக்கிட்டு இருக்காங்க, ஏதோ ஒரு விஷயம் இருக்கு அதை கண்டுபிடிக்கணும்" என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, முத்துவுக்கு ஒரு அவசர போன் கால் வருகிறது. அதில் மீனாவின் அம்மா சந்திரா பதட்டத்துடன், "சீக்கிரம் வீட்டுக்கு வாங்க, கிரிஷ் பாட்டி வந்து அவனை கூட்டிட்டுப் போகணும்னு கத்தி ரகளை பண்ணிக்கிட்டு இருக்காங்க" என்று சொல்கிறார். முத்துவும், மீனாவும் உடனடியாகக் கிளம்பிச் செல்கின்றனர். அங்கு சென்றதும் கிரிஷின் பாட்டியிடமா, "இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க?" என்று கேட்டு முத்துவும் மீனாவும் அவருடன் வாக்குவாதம் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications