சிறகடிக்க ஆசை: மனோஜ் ஆபிசுக்கு வந்த ஜீவா! அதிர்ச்சியில் ரோகிணி, உண்மையை கண்டுபிடித்த முத்து!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா அப்செட்டாக இருப்பதற்கான காரணத்தை முத்து கண்டுபிடித்து இருக்கிறார். அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அதேபோல மனோஜ் உடைய ஆபீசுக்கு அவருடைய முன்னாள் காதலியான ஜீவா வருகிறார். இதனால் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் கடந்த கால ரகசியங்களை தெரிந்து கொண்டு மீனா அதை பற்றி குடும்பத்திடம் சொல்ல முடியாமல் குழப்பத்திலேயே இருக்கிறார். தன்னை பற்றிய விஷயங்களை வீட்டிற்கு சொல்லிவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரோகிணி மிரட்டியதால் முத்துவிடம் கூட உண்மையை சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மீனா வீட்டில் இருந்து பூ கொடுக்க போகிறார். அப்போது அங்கு அவர் மாறி மாறி பேசுவதை பார்த்து அவருடைய தோழிகள் உனக்கு என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு மீனா ஒன்னும் இல்ல என்று சொல்லிவிடுகிறார். அவர்களிடமும் உண்மையை மறைப்பதால் அங்கு வந்த முத்துவிடம் அவர்கள் மீனாவை பற்றி சொல்கிறார்கள். உங்களுக்குள் எதுவும் சண்டையா? நீங்க எதுவும் மீனாவை திட்டினீங்களா என்று கேட்க, மீனா ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து ஒரு மாதிரி தான் இருக்கா என்று முத்துவுக்கும் சந்தேகம் வருகிறது. சரி நான் அதை பற்றி கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு முத்து அங்கிருந்து கிளம்புகிறார்.
அதை அடுத்து செல்வத்திடம் மீனா பற்றி பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கும் போது ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து மீனாவின் நடவடிக்கையை சரி இல்லை எப்பவும் எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறா. எதையோ என்கிட்ட மறைக்கிறா என்று முத்து சொல்ல, அதற்கு செல்வம் அப்போ கண்டிப்பா அங்கதான் ஏதோ நடந்திருக்கு, உங்க ஊரில் ஒரு சாமியார் மீனாவை பார்த்து ஊரை விட்டு போயிடுனு சொன்னதா சொன்னியே அதை நினைச்சு மீனா அப்சட்டா இருக்கலாம் எனக்கு தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கிறார். அவரிடம் மந்திரித்த கயிறு ஒன்றை வாங்கி தருகிறேன் அதை கட்டி விட்டால் சரியாயிடும் என்று செல்வம் சொன்னதும் முத்துவும் சரி என்று சொல்கிறார்.
பிறகு வீட்டிற்கு வந்து முத்து மீனாவிடம் நீ ஏன் இப்படி இருக்க உன்னை பத்தின உண்மை எனக்கு தெரிஞ்சிடுச்சி நீ என்கிட்ட மறைத்தாலும் ஊரில் என்ன நடந்தது என்று எனக்கு புரியுது என்று சொன்னதும், மீனா ஷாக் ஆகிறார். அப்போது தன்னைப் பற்றிய உண்மையைத்தான் முத்து கண்டுபிடித்து விட்டாரோ என்று ரோகிணியும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். பிறகு முத்து சாமியார் சொன்னதை நினைத்து தானே நீ அதிர்ச்சியா இருக்க என்று கேட்க, ஒரு ரோகினி நிம்மதி அடைகிறார்.
இதற்கு இடையில் மனோஜ் தன்னுடைய புதிய பிரான்ச்க்கு பிஏ இன்டர்வியூ எடுக்கிறார். அதில் ஜீவா என்ற பெண்ணை பிஏவாக அப்பாயின்மென்ட் பண்ணுகிறார். அப்போது வந்த ரோகிணி எதற்காக நீ இவ்வளவு அவசரப்படுற என்று கேட்க, நமக்கு பிஏ ஒருவர் வேண்டும். நாம கோடீஸ்வரராக போறோம் நீயும் ஹாஸ்பிடல் செக்கப் என்று பிஸியா இருப்ப என்று மனோஜ் தன்னுடைய கனவுகளை சொல்லிக்கொண்டே போக, ரோகிணி நானே அந்த மீனா எப்போ உண்மையை சொல்ல போறாளோ என்ற பயத்திலேயே இருக்கிறேன். இவன் வேற இப்படி பேசிக் கொண்டு இருக்கானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications