சிறகடிக்க ஆசை: சீதா பணத்தை திருடியவரை கண்டுபிடித்த முத்து.. சரியான ஆக்ஷன் காட்சி! உண்மை உடைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிரபலமான சீரியல் 'சிறகடிக்க ஆசை'யில், சீதா கொண்டு சென்ற 5 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற விவகாரம், குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. சீதா திருடியிருக்கக்கூடும் என்று மனோஜ் உள்படச் சிலர் பேச, முத்துவும், மீனாவும் மட்டுமே அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இன்று (அக்டோபர் 24, 2025) எபிசோடில், முத்து மேற்கொண்ட துப்பறியும் நடவடிக்கை, அந்த 5 லட்சத்தை யார் திருடினார்கள் என்ற உண்மையை உடைத்து, சீதாவின் கண்ணீரைத் துடைத்தது. பணம் திருடுபோன விஷயத்தைச் சீதாவின் மீனா வீட்டில் வந்து சொல்ல, வழக்கம் போல் விஜயா, "சீதா தான் பணத்தை எடுத்திருப்பா" என்று சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே மீனா, "என் தங்கச்சி ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது" என்று பதிலடி கொடுக்கிறார். இந்தச் சண்டையில் மனோஜ் விஜயாவுக்கு சப்போர்ட் பண்ணி மீனாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்திப் பேச, முத்துவுக்குக் கோபம் வருகிறது.

Siragadikka aasai serial vijay tv

ஸ்ருதியின் ஆதரவு

ஸ்ருதி, "சீதா எனக்குக் கூடப் பிறந்தவங்க இல்ல. ஆனா மீனா சொல்லும்போது சீதா அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு எங்களுக்கே தெரியும். ஆனா நீங்க ஏன் இப்படிப் பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்று ஸ்ருதி பேசியது மனோஜுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆட்டோ டிரைவர் கண்ணீர் மல்க "அந்தப் பொண்ணு அப்படிப் பண்ணிருக்காது" என்று அழுததை நினைத்து அண்ணாமலைக்குச் சந்தேகம் வருகிறது.

"ஆட்டோக்காரர் எதற்கு அப்படி அழவேண்டும்?" என்று யோசித்த அண்ணாமலை, முத்துவைக் கவனமாகச் செயல்படச் சொல்கிறார். மீனா, "சீதா ரொம்பப் பாவம், நீங்க தான் ஏதாவது பண்ணனும்" என்று முத்துவைக் கேட்டுக்கொண்டார்.

ஆட்டோ டிரைவர் வீட்டில் அரங்கேறிய நாடகம்

மீனாவின் வார்த்தை முத்துக்குத் தைரியம் கொடுக்க, உடனடியாக செல்வத்திற்குப் போன் செய்து நடந்த விஷயத்தைச் சொல்லி, ஆட்டோக்காரர் வீட்டுக்கு விசாரிக்கச் செல்கின்றனர். முத்துவும் செல்வமும் ஆட்டோ டிரைவர் மணியின் வீட்டிற்குக் கதவைத் தட்டிச் செல்கின்றனர். முத்து நைசாகப் பேச்சுக் கொடுக்க, மணியின் மனைவி, "அவங்க தங்கச்சி கல்யாணத்துக்கு அஞ்சு லட்ச ரூபா வெளிய கடன் வாங்கி இருந்தாரு. வட்டி கட்ட முடியாம மிரட்டிட்டு இருந்தாங்க" என்று உண்மையைச் சொல்கிறார்.

முத்து பேசிக்கொண்டிருக்கும் போதே கடன் கொடுத்த சத்யாவும் ஆட்களும் அங்கே வந்து மிரட்ட, அதே நேரம் ஆட்டோ டிரைவர் மணி, திருடிய பணத்துடன் வேகவேகமாக வந்து முத்துவிடம் கொடுக்கப் போகிறார். பணப் பையை வாங்கிய முத்து, "இதில் 5 லட்சம் பணம் இருக்கும்னு தெரியும், அது பேங்கில் இருந்து எடுத்ததா இல்ல பேங்குக்குப் போகும்போது எடுத்ததா?" என்று மிரட்டிக் கேட்க, மணி உண்மையை ஒப்புக்கொள்கிறார்.

முத்துவின் மனிதநேய தீர்ப்பு

முத்துவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட மணி, "தயவுசெஞ்சு போலீஸ்ல புடிச்சுக் கொடுக்காதீங்க, இல்லனா நாங்க கடல்ல தான் போய் விழணும்" என்று கெஞ்சுகிறார். முத்து, மணி மற்றும் அவரது மனைவியின் நிலையை உணர்ந்து, ஒரு மனிதநேய முடிவை எடுக்கிறார்.

"எப்பவுமே திருடிப் பணத்தைக் கட்டினால் சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்காதீங்க. உழச்சுக் கட்டினால் தான் மனசுல சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும்" என்று மணிக்குப் பாடம் சொன்னார். "நீ கார் ஓட்டுவீங்க இல்ல, நான் ஏதாவது சவாரி வந்தால் சொல்றேன், நீ போயிட்டு வாங்க. உங்க மனைவி பூ கட்டுவீங்களா, என் பொண்டாட்டி பூ கட்டி டெக்கரேஷன் பிசினஸ் பண்றா, ஆள் பத்தலனா கூப்பிடுறேன். நீ வந்து உழச்சுக் கடனை அடைங்க" என்று உதவி செய்து, சத்யாவிடம் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்.

பின்னர், முத்து அந்தப் பணத்தை ஹாஸ்பிடலில் கொடுத்துவிட்டு, "திருடனை புடிச்சு அடிக்கும்போது அவன் தப்பிச்சு ஓடிட்டான்னு சொல்லிடலாம்" என்று ஒரு பிளான் போட்டு, சீதா வேலையைத் திரும்பப் பெற உதவுகிறார். திருடனால் ஏற்பட்ட ஒரு குடும்பத்தின் சோகத்தை சீதா மீண்டு வர உதவிய முத்துவின் மனிதநேயம், பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+