சிறகடிக்க ஆசை: விஜயா போட்ட நாடகம்! அசிங்கப்படுத்திய அருண்! பதிலடி கொடுத்த மீனா, சந்தேகத்தில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ஒரு குடும்பத்தில் இருக்கும் பாசம், சூழ்ச்சி என அனைத்தையும் கலந்து கட்டி ஒரு விருந்தாகப் பரிமாறியது. மீனா தனது புதிய தொழிலை ஆரம்பிப்பது, அண்ணாமலையின் ஆசிர்வாதம் என ஒரு பக்கம் பாச மழை பொழிய, இன்னொரு பக்கம் விஜயாவின் ரத்த தான முகாம் பின்னணியில் ஒரு சுயநலம் இருப்பது அம்பலமானது.

மீனாவின் புதிய தொழில்
இன்றைய எபிசோடில் மீனா தனது புதிய பொக்கே தொழிலை ஆரம்பிப்பதிலிருந்து தொடங்குகிறது. அண்ணாமலை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார் மீனா. அவரும் மனதார ஆசிர்வாதம் செய்ய, மீனாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் போன் வருகிறது. போனில் பேசிய நபர், "உங்க பொக்கே ரொம்ப சூப்பரா இருந்தது, எனக்கு ரெண்டு பொக்கே வேணும். என்ன ரேட்?" என்று கேட்கிறார். மீனா, "500 ரூபாய், 1000 ரூபாய் என இரண்டு விதமாகச் செய்து தருகிறேன்" என்று சொல்ல, "பெரிசுலையே எனக்கு ரெண்டு செஞ்சு கொடுத்துடுங்க. நான் உங்களுக்கு 2000 ரூபாய் காசு அனுப்பிட்டு இருக்கிறேன்" என சொல்கிறார். மீனாவும் சந்தோஷமாக, "கண்டிப்பா செஞ்சு தர்றேன் சார்" என்று சொல்கிறார்.
அப்போது, முத்து, "இப்பதானே நீ பொக்கேயை காமிச்ச, அதுக்குள்ள எப்படி தெரிஞ்சது?" என்று கேட்க, மீனா, "நான் தான் என்னோட ஐடியில் அந்தப் பொக்கேயை போட்டு, நம்பரையும் போட்டுவிட்டேன்" என்று சொல்ல, முத்து ஆச்சரியமாகப் பார்க்கிறார். உடனே, ரவியும் 500 ரூபாய் கொடுத்து, "எனக்கு ஒரு சின்ன பொக்கே ரெடி பண்ணி கொடுங்க" என்று சொல்ல, மீனா காசு வாங்க மறுக்கிறார். ஆனால், ஸ்ருதி, "ரவிகிட்ட இருந்து காசு வரதே பெருசு, வாங்கி வச்சுக்கோங்க" என்று சொல்லி வாங்கி கையில் கொடுக்கிறார்.
மீனா அந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு போய் அந்த நபரிடம் கொடுக்க, அவர், "போனில் பார்த்ததைவிட நேரில் சூப்பரா இருக்கு" என்று பாராட்டுகிறார். அத்துடன் நிற்காமல், "இன்னொரு ரிட்டயர்மென்ட் ஃபங்ஷன் ஒன்னு இருக்கு, அன்னைக்கு நாலு பொக்கே தேவைப்படும்" என்று சொல்ல, மீனா "நீங்க ஆன்லைன்ல கூட ஆர்டர் பண்ணிக்கலாம் சார், நான் கரெக்டா எடுத்துட்டு வந்து விடுவேன்" என்று சொல்ல, அவரும் "சரிமா" என்று சொல்கிறார்.
மீனா ஆர்டரை கொடுத்துவிட்டு வரும் வழியில், அருண் மற்றும் சீதா வண்டியில் வருவதைக் கவனித்து இருவரும் பேசிக்கொள்கின்றனர். "என்னக்கா இந்த பக்கம்?" என்று அருண் கேட்க, "ஃபுரூட் பொக்கே ஆர்டர் இருந்தது, அதைக் கொடுக்க வந்தேன்" என்று மீனா சொல்கிறார். "ஆமாக்கா, நல்ல ஐடியா. சுருதி போட்டு இருந்தாங்க, நானும் பார்த்தேன்" என்று சீதா பேசிக் கொண்டிருக்க, அருண், "ஆமாங்க, உங்க பிசினஸ்ல நீங்க வளர்ந்துகிட்டே போறீங்க. உங்க வீட்டுக்காரர் முத்து மாதிரி இல்லாம நீங்க ரொம்ப நல்ல ஐடியாவா யோசிச்சு இருக்கீங்க" என்று முத்துவை தாழ்த்திப் பேச, மீனாவின் முகம் மாறுகிறது.
"அவர் என்ன பண்ணப் போறார், அவர் வாழ்க்கை அவ்வளவுதான், அதுல என்ன முன்னேற்றம் இருக்கப் போகுது?" என்று அருண் பேசித் தீர்க்க, மீனா, "முதல்ல அவர் கார் டிரைவரா தான் இருந்தாரு, இப்போ அவர் சொந்தமா ரெண்டு கார் வச்சிருக்கார். இதுக்கு மேலயும் சொல்ல மாட்டேன், டிராவல்ஸ் வைக்கும் அளவுக்கு அவர் உயர்ந்து வருவார்" என்று சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார். உடனே சீதா, "இப்ப எதுக்கு நீங்க எங்களோட மாமா வேலையைப் பத்தி கேட்குறீங்க? டிரைவரா இருந்து எங்க மாமா நல்லாதான் சம்பாதிக்கிறார்" என்று சொல்லி அருணை அழைத்துச் சென்று விடுகிறார்.
வீட்டுக்கு வந்த மீனா, சம்பாதித்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க, முத்து வருகிறார். "என்ன மீனா கலெக்ஷன் பார்த்துக்கிட்டு இருக்கியா?" என்று கேட்க, "ஆமாங்க, இன்னைக்கு எவ்வளவு லாபம் வந்துச்சுன்னு பார்த்துட்டு இருக்கேன்" என்று சொல்கிறார். அப்போது, முத்துவும் தான் சம்பாதித்த பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு, இருவரும் மாற்றி மாற்றி உண்டியலில் போட்டுவிட்டு, "அடுத்த வருஷம் நேத்திக்கு நம்ம தனியா ரூம் கட்டியிருப்போம், அதுல இருப்போம்" எனச் சொல்லி முத்து, மீனாவின் பக்கத்தில் போக, விஜயா, "யாருமில்லையா?" என்று கேட்க, இருவரும் அமைதியாகி விடுகின்றனர்.
விஜயாவின் ரத்த தான முகாம்
பிறகு ஹாலில் வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார் விஜயா. "என்ன விஷயம்?" என்று அண்ணாமலை கேட்க, "நாளைக்கு எல்லோரும் பார்வதி வீட்டுக்கு வரணும்" என்று சொல்கிறார். "என்ன விஷயத்துக்காக?" என்று அண்ணாமலை கேட்க, "ரத்த தானம் கொடுக்கறதுக்கு" என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். மனோஜ் மட்டும், "உனக்கு சப்போர்ட் பண்ண வரேன், நான் ரத்தம் கொடுக்க மாட்டேன், ஏற்கனவே எனக்கு கம்மியா தான் இருக்கு" என்று சொல்ல, முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோர் வர சம்மதிக்கின்றனர். விஜயா, "எல்லாரும் வாங்க, நான் பண்ற ரத்ததான முகாம்ல என் குடும்பத்துல இருக்கிறவங்களை கலந்துக்கலனா என்னை என்ன நினைப்பாங்க" என்று சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார்.
மறைந்திருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த முத்து, அண்ணாமலையிடம், "அம்மாவுக்கு என்ன ஆச்சுப்பா, மரம் நடறாங்க, அன்னதானம் போடுறாங்க, இப்போ ரத்த தான முகாம் நடத்துறாங்க" என்று சொல்ல, "எனக்கே ஆச்சரியமா தான் இருக்குது, ஆனா காரியம் இல்லாம எதுவும் செய்ய மாட்டா" என்று அண்ணாமலை சொல்கிறார். "அதை நான் கண்டுபிடிக்கிறேன்" என முத்து நினைக்கிறார்.
மறுநாள் காலையில், பார்வதி வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் செய்ய, விஜயாவின் குடும்பத்தினரும் அங்கு இருக்கின்றனர். பிறகு ஒரு கேமரா மேன் வந்துவிட, விஜயா, "ஆரம்பிச்சு விடலாமா?" என்று சொல்லி, அவர்களை அழைத்துச் செல்கிறார். அங்கு மீடியாவை வரவைத்து, தான் செய்த நல்ல விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுகின்றார். இறுதியில், "எனது ரத்தத்திலேயே நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்பது ஊறி உள்ளது" என்று சொல்லி, பெருமையாக மீடியாக்களுக்குப் பேட்டி கொடுக்கின்றார். இதைப் பார்த்து முத்துவும் அண்ணாமலையும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்!












Click it and Unblock the Notifications