சிறகடிக்க ஆசை: அருண் சூழ்ச்சியை முறியடித்த முத்து.. கையில் கிடைத்த ஆதாரம்! மனம் மாறும் சத்யா! மாட்டிவிட்ட மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. முத்து எவ்வளவு உதவி செய்தாலும் கடைசியில் அருண் பேச்சைக் கேட்டு ஆடிய சீதாவிற்கு புது பிரச்சனையும் வந்தது. அதாவது 5 லட்சம் ரூபாய் பணத்தை சீதா தொலைச்சதுல ஆரம்பிச்ச அந்தப் புயல், இப்போ ஒரு வழியாக அடங்கியிருக்கு. அதுக்குக் காரணம், முத்துவோட அதிரடி ஆக்ஷன் தான்!

Siragadikka aasai serial vijay tv

என்ன நடந்தது

ஆஸ்பத்திரி மேனேஜர் கொடுத்த 5 லட்சம் ரூபாயை சீதா பேங்கில் டெபாசிட் செய்ய ஆட்டோவில் போனபோது, மர்ம நபர்கள் அதைப் பறிச்சுட்டுப் போயிட்டாங்க. பணம் போன டென்ஷனில் மேனேஜர், சீதாவைத் திருடிப் பட்டம் கட்டி, வேலையை விட்டே நிறுத்திவிட்டார். ஆனா, மீனாவும், முத்துவும் மட்டும்தான் சீதாவுக்கு உறுதுணையா இருந்தாங்க.

முத்துவின் ராஜ தந்திரம் வொர்க் அவுட்

முத்துவுக்கு அந்த ஆட்டோ டிரைவர் மேல வந்த சந்தேகம் சும்மா இல்லீங்க. விசாரிச்சுப் பார்த்தப்போ, அந்த டிரைவர் தான் தன் தங்கச்சி கல்யாணக் கடனை அடைக்க, ஆள் வைத்துப் பணத்தைத் திருடினார் என்ற உண்மை தெரிஞ்சது.

அந்த டிரைவர், "என்னை போலீஸ்ல மாட்டி விட்டுடாதீங்க, நாங்க கடலில் தான் போய் விழணும்"னு முத்து காலில் விழுந்து கெஞ்சினதும், முத்து மனசு இளகிப் போயிடுச்சு. அந்தப் பணத்தை அவர் வாங்கிக்கிட்டு, "வழிப்பறிக் கும்பலைப் பிடிச்சு பணத்தை வாங்குனேன், ஆனா அவங்க தப்பிச்சு ஓடிட்டாங்க"ன்னு சொல்லி, 5 லட்சம் ரூபாயை போலீசிடம் ஒப்படைக்கிறார்.

மேனேஜருக்குக் குட்டு

அப்புறம் ஆஸ்பத்திரிக்குச் சென்று, பணம் கிடைச்ச விஷயத்தைச் சொன்ன முத்து, "எல்லார் முன்னாடியும் வச்சு அந்தப் பொண்ணு மேல திருட்டுப் பழியைப் போட்டிருக்கீங்க. நேர்மையாக இருப்பவர்கள் மேல தான் ஈஸியா பழியைத் தூக்கிப் போட்டுவிடுகிறீர்கள்" என்று மேனேஜரை நச்சென்று கேட்கிறார். மேனேஜரும் மன்னிப்புக் கேட்டு, "இனிமேல் நீ இங்கத் தொடர்ந்து வேலை பார்க்கலாம்" என்று சீதாவுக்கு வேலையைத் திரும்பக் கொடுக்கிறார்.

அருணுக்கு பல்பு

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த அருண் மனசுக்குள்ளேயே குமுறுகிறார். "நாம எப்படியாவது சீதாவை காப்பாற்றிடலாம்னு பார்த்தா, கடைசி நேரத்துல வந்து இந்த முத்து நல்ல பேர் வாங்கிட்டு போயிட்டானே!"ன்னு அருண் தன்னோட ராஜ தந்திரங்கள் வீணானதுக்காகச் சோகத்தில் இருக்கிறார். இப்படி முத்து செய்ததால, சீதாவுக்கு அவரோட அருமை தெரியாமலே இருந்தது. அப்போதான் ஒரு ட்விஸ்ட்!

டிரைவரின் மனமாற்றம்

மறுநாள் முத்துவுடன் ஆட்டோ டிரைவர் பேசுவதைப் பார்த்த சீதா, "தேவையில்லாம எதுக்கு இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்று கேட்கிறார். உடனே அந்த ஆட்டோ டிரைவர், அன்னைக்கு நடந்த எல்லா உண்மையையும் உடைச்சுச் சொல்லி விடுகிறார். "அன்னைக்கு உங்ககிட்ட இருந்து பணத்தை ஆள் வச்சு பிளான் பண்ணி திருடியது நான் தான். வேற யாராவது இருந்திருந்தா என்னைத் ஜெயிலுக்கு அனுப்பிருப்பாங்க. இந்தத் தம்பி தான் என் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு என்னைக் கேஸில் சிக்காமல் தப்ப வைத்தார்" என்று மணி கண்ணீர் மல்கச் சொல்கிறார்.

இந்த உண்மையைக் கேட்டதும் சீதாவுக்கு முத்து மேல இருந்த கோபம் எல்லாம் பறந்து போயிடுச்சுங்க. முத்து, எவ்வளவு பெரிய மனசுக்காரர் என்று உணர்ந்து, அவர் மேல் பாசம் பொங்க ஆரம்பிக்கிறாங்க. அதைத்தொடர்ந்து முத்து சத்யாவிடம் இப்படி மிரட்டி பணம் வாங்குவது தப்பு என்று புரிய வைக்கிறார். சத்யாவை வேலைக்கு சேர்த்து விட்டது அருண் தான் ஆனால் அந்த இடத்தில் இருந்து வந்து விடும்படி முத்து சொல்கிறார் இதனால் சத்யா என்ன முடிவெடுக்க போகிறார் என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.

இனி வரும் எபிசோடுகளில் சீதா, முத்துவுடன் எப்படி அன்பாகப் பழகப் போகிறார், விஜயா குடும்பத்தில் என்ன களேபரம் நடக்கப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+