Siragadikka Aasai: அருணுக்கு விழுந்த அடி! காப்பாற்றிய முத்து.. மீனாவிடம் சிக்கிய கிரிஷ்- ரோகிணி! அதிர்ச்சியில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்தது. அதே நேரத்தில் ரோகிணி கிரிஷை தனியாக அழைத்து அடித்து சித்ரவதை செய்கிறார். அதே நேரத்தில் கிரியை மீனா பார்த்து இருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் , மனோஜ் நாயின் ஓனருக்கு போன் பண்ண, அவர் ஜீனோ என்னை விட்டு போய்விட்டதாக சொல்லுகின்றார். இதனால் ஜீனோ செத்துவிட்டதாக மனோஜ் அழுது புலம்புகின்றார். மேலும் அண்ணாமலை இந்த வருடம் மட்டும் அனேகமானோர் நாய் கடித்து இறந்ததாகச் சொல்லி மேலும் பயமுறுத்துகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணிக்கு வந்த ஃபோன் கால்

அதன் பின்பு வீட்டுக்கு வந்த முத்து மனோஜ் ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஜீனோவின் ஓனருக்கு மீண்டும் போன் பண்ணி விவரத்தை கேட்க, அவர் நாய் காணாமல் போய் உள்ளதாக சொல்கின்றார். அதன்பின்பு மனோஜ் சற்று நிம்மதி அடைகிறார். அந்த நேரத்தில் ரோகிணிக்கு மகேஷ் போன் பண்ணி க்ரிஷ் மீண்டும் அடம்பிடிப்பதாகவும் அவரை எங்கேயாவது கூட்டிப் போய் சமாளிக்குமாறும் சொல்லுகின்றார்.

மீனா பார்த்த காட்சி

இன்னொரு பக்கம் மீனா செல்லும் வழியில் சத்யாவை சந்திக்கின்றார். இதன்போது அவருடைய பிசினஸ், கல்யாணம் பற்றி பேசிவிட்டு செல்லும் போது அங்கு க்ரிஷை ஒருவர் அழைத்துச் செல்வதை பார்க்கிறார். இதை தொடர்ந்து அவர் க்ரிஷை பின் தொடர்ந்து ஓடிச் செல்ல, காருக்குள் இருந்த ரோகிணி மீனா ஓடி வருவதைப் பார்த்து விடுகின்றார். இதனால் காரை வேகமாக எடுத்துச் சென்று விடுகின்றனர்.

அருணுக்கு விழுந்த அடி

மறுபக்கம் மோட்டார் பைக்கில் மூன்று பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றார்கள். இதனை பார்த்த அருண் அவர்களை பின்தொடர்ந்து அவர்களை பிடிக்க, அந்த ரவுடிகள் அருணை அடித்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த முத்து அருணை காப்பாற்றுகிறார். அருண் நெற்றியில் அடிபட்டு இருக்கிறது இது அதனால் முத்து அருணை ஹாஸ்பிடலுக்கு கூப்பிடுகிறார். ஆனால் அருண் அவருக்கு நன்றி சொல்லாமல் சென்று விடுகின்றார்.

கோபத்தில் ரோகிணி

மறுபக்கத்தில் மீனா மீது இருக்கும் கோபத்தால் ரோகிணி கிரிஷை அடித்து சித்திரவதை செய்கிறார். அதை பார்த்து பதறிப்போன வித்யா ரோகிணியை தடுக்க அதற்கு ரோகிணி கோபப்பட்டு கிரிஷை திட்டிக் கொண்டிருக்கிறார். கிரிஷ் நான் உன் கூடவே வந்துடுறேன் அம்மா என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+