சிறகடிக்க ஆசை: ரோகிணியின் ஏமாற்று வேலையை கண்டுபிடித்த விஜயா! அண்ணாமலை சொன்ன விஷயம், முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார். ஆனால் ரோகிணி மீண்டும் பொய் சொல்ல விஜயா அவரிடம் வசமாக சிக்குகிறார். அதே நேரத்தில் முத்துவும் முக்கியமான முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.
நேற்றைய எபிசோடில் சத்யா தன்னுடைய பாஸ் மகள் ரேகாவை சீதா வேலை பார்க்கும் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருந்தார். அவருக்கு வயிறு வலி என்பதால் டாக்டரிடம் ரேகா பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சீதா சத்யாவிடம் இந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன அவ்வளவு பெரிய நெருக்கமா! என்று கேட்க, அதற்கு சத்யா அப்படியெல்லாம் இல்லை என்னோட பாஸ் மகள் அவ்வளவுதான் என்று சொல்கிறார்.

அப்படியே இருந்தா சரிதான் வேற எதுவும் வச்சிக்காத என்று சீதா அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரேகா வந்ததும் கதையை மாற்றி விடுகிறார். மறுபக்கத்தில் முத்து மீனாவின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நண்பர்கள் எல்லாரும் முத்து ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை போட்டால் சரியாகிவிடும் என்று சொல்ல முத்துவும் மாலை அணிந்து மீனா வீட்டிற்கு வருகிறார்.
மீனாவின் அம்மாவிடம் வந்து தான் மாலை போட்டு இருப்பதால் பூஜை வைக்கணும் வீட்டில் வைக்க எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க அதனால கார் ஸ்டாண்டில் பூஜை போட போறேன் என்று சொன்னதும், அவங்க நம்ம வீட்டிலேயே வச்சிருக்கலாமே என்று சொல்ல, வேண்டாம் நான் ஸ்டாண்டில் வைத்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக வரணும் என்று சொல்கிறார். கூடவே மீனாவையும் கூட்டிக்கொண்டு வருமாறு ஜாடை மாடையாக சொல்லிவிட்டு போகிறார்.
பிறகு மீனாவை பார்க்க அவருடைய வீட்டிற்கு அண்ணாமலை வருகிறார். அவர் மீனாவிடம் நீ முத்து குடித்திருக்கிறான் என்பதற்காக மட்டுமே வரல. பின்னணியில் வேற ஏதோ காரணம் இருக்கு என்னவென்று துருவி துருவி கேட்க அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா அவரு குடிச்சாரு என்பதற்காக மட்டும்தான் நான் வந்தேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க, சரி அவன் குடித்தான் என்பதற்காக வந்த சரி ஆனா இப்போ அவன் மாலை போட்டு திருந்திட்டான். அதனால மீண்டும் வீட்டுக்கு வந்துரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அவரிடம் உண்மையை சொல்ல முடியவில்லை என்று மீனா வருத்தத்தில் இருக்கிறார். அப்போது ரோகிணி மீனாவுக்கு போன் போட்டு பேசுகிறார். அதற்கு ரோகிணியிடம் தன்னுடைய கோபத்தை மீனா காட்டுகிறார். உன்னால என்னுடைய நிம்மதியே போச்சு இப்ப எதுக்கு போன் பண்ண என்று கேட்க நான் உங்களை பார்த்து பேசணும் என்று ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார்.
மீனாவும் அங்கே போய் ரோகிணியை தீட்டிக் கொண்டிருக்கும் போது, நீங்க உண்மையை உங்க அம்மாவிடம் சொல்லிட்டீங்களா என்று ரோகிணி கேட்க அதற்கு கோபமான மீனா நீ இவ்வளவு சுயநலமா இருப்பியா? என்று திட்டி விட்டு எங்க அம்மாவிடம் இன்னும் சொல்லல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அந்த வழியாக ஆட்டோவில் போன விஜயா இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார்.
இவளுக ரெண்டு பேரும் நமக்கு எதிரா ப்ளான் போடுறாளுகளா என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டிற்கு வந்த ரோகிணியிடம் எங்க போயிட்டு வர என்று விஜயா கேக்க, ரோகிணி ஏதேதோ கதையை அளந்து விடுகிறார். மீனாவே சந்தித்ததை மட்டும் சொல்லாமல் மறைக்கிறார். இதனால் கோபமான விஜயா எதுக்காக இப்படி பொய் சொல்லிட்டு திரிகிற என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications