சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் வசமா மாட்டிய ரோகிணி! வம்பு இழுக்கும் அருண்! முத்து செய்த செயல்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 28ம் தேதிக்கான எபிசோடில் கோபமாக இருக்கும் மீனாவை சமாதானப்படுத்துவதற்காக முத்து முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மீனாவும் ரோகிணியும் பேசுவதை பார்த்து விஜயா கோபத்தில் இருக்கும்போது ரோகிணி அவரிடமே பொய் சொல்லி மாட்டிக் கொள்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் உண்மையை தெரிந்த மீனா அதை தன்னுடைய கணவர் முத்துவிடமும் மாமனார் அண்ணாமலையிடமும் சொல்லாமல் மறைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அந்த நேரத்தில் முத்து குடித்துவிட்டு வர அதையே காரணமாக வைத்து சண்டை போட்டு மீனா அம்மா வீட்டிற்கு போய் இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் மீனாவை பார்க்க வேண்டும் என்று ரோகிணி போன் செய்து கூப்பிட்டதால் மீனாவும் ஒரு ஹோட்டலுக்கு போய் இருந்தார். அங்கு உங்க அம்மாவிடம் என்ன பற்றிய உண்மையை சொல்லிட்டீங்களான்னு கேட்ட ரோகிணியை மீனா திட்டி விட்டு வெளியே வந்தார். அப்போது இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை விஜயா பார்த்து கோபத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த ரோகிணியிடம் விஜயா எங்க போயிட்டு வர என்று கேட்க, அதற்கு ரோகிணி நான் பார்த்துட்டு வரேன் என்று சமாளிக்கிறார். இதனால் கோபமான விஜயா வேற எங்கேயும் போகலையா? யாரையும் பாக்கலையா? என்று துருவி துருவி கேட்டாலும் ரோகிணி பொய்யே சொல்கிறார். இதனால் நீ மீனாவை பாத்துட்டு வந்ததை நான் பார்த்தேன் என்கிட்டயே பொய் சொல்லுறியா என்று விஜயா கோபப்பட்டு திட்ட அதற்கு நான் கிளைன்ட் பார்ப்பதற்கு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு போனே அங்க மீனா பூ கொடுப்பதற்காக வந்தாங்க என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து போகிறார்.
பிறகு விஜயா இந்த வீட்டில் இருந்து யாரும் என்னை மீனாவை பார்த்து பேசக்கூடாது அப்படி பேசுறது தெரிஞ்சா நான் வேற மாதிரி இருப்பேன்னு மிரட்ட, அதற்கு உங்க கண்டிஷனுக்கு என்னால ஒத்துக்க முடியாது நான் மீனாவை பாக்கணும்னு தோணுச்சுன்னா கண்டிப்பா போய் பார்ப்பேன். உங்களுக்கு வேற மாதிரி ஆகணும்னா இப்பவே மாறிக்குங்க என்று சொல்லி விட்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் முத்து இளநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த அருண் முத்துவை வம்பு இழுப்பது போல, பேசிக்கொண்டே இருக்க முத்து கோபமாகி அவரை அடிக்க போகிறார் அப்போது செல்வம் சமாதானம் செய்து முத்துவை அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து முத்து பூஜை செய்யும் இடத்தில் இன்னும் வீட்டிலிருந்து யாரும் வரலையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்தியா அவருடைய அம்மா மீனா எல்லோரும் அங்கு வருகின்றனர்.
மீனாவை பார்த்ததும் முத்து இளநீர் கொடுக்க, அதற்கு சத்யா, செல்வம் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர். அப்போதும் மீனா முத்துவை குறை சொல்வது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications