சிறகடிக்க ஆசை: ரோகிணி கொண்டு வந்த பையில் வந்த ட்விஸ்ட்! விஜயாவுக்கு மரண பயம்! முத்து ஆக்‌ஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் முழுக்கப் பாசம், சண்டை, சமாதானம்னு எமோஷனல் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. திருடுபோனப் பணத்தை மீட்டுத் தந்தது முத்துதான் என்று சீதாவுக்குத் தெரிய வர, அவங்க உடனே மீனாவிடம் மன்னிப்பு கேட்டார்கள். முத்துவுக்கும் போன் பண்ணி அழுதபடிப் பேச, முத்துவோ, "நீயும் மீனாவும் சந்தோஷமா இருங்க அதுபோதும் எனக்கு" என்று சொல்லிவிட்டார். சீதா-மீனா மீண்டும் சேர்ந்ததால், அவங்க அம்மா சந்திராவுக்கும் மகிழ்ச்சி.

இந்நிலையில், இன்றைய எபிசோட் முழுக்க ஒரே ஒரு விஷயம் தான் ஹைலைட்ங்க... அது என்னன்னா, வீட்டுக்குள் வந்த பாம்பு! அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial vijay tv

ஷோரூமில் நடந்த களேபரம்

மனோஜ் வேலை பார்க்கும் ஷோரூமுக்கு ஒரு பாம்பாட்டி வராரு. தன் மகன் காலேஜில் சேர்ந்திருக்கிறான், அவனுக்கு ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்க வந்திருப்பதாகச் சொல்லி, அங்கிருக்கும் பொருட்களையெல்லாம் பார்க்கச் செல்கிறார்.

பையில் புகுந்த பாம்பு

அப்போது, அவர் தன் தோளில் வைத்திருந்த கூடையை ஒரு ஓரமாக வைத்துச் செல்ல, அதிலிருந்த பாம்பு வெளியே வந்து, கடையில் இருந்த ஒரு பையிற்குள் புகுந்துவிடுகிறது. ரோகிணி, அந்தப் பைக்குள் என்ன இருக்கிறது என்றுகூடப் பார்க்காமல், அதை எடுத்துக் கொண்டு மனோஜ் உடன் வீட்டிற்கு கிளம்பிப் போகிறாங்க. வீட்டிற்கு வந்ததும் விஜயாவிடம் பேசிவிட்டு இருவரும் ரூமிற்குள் போகிறார்கள்.

படுக்கையில் பை

அப்போது ரோகிணிக்கு போன் வர, அதை எடுக்கப் போன அவங்க, கையில் இருந்த பையை நேராகப் பெட்டில் போட்டுவிடுகிறார்கள். அவ்வளவுதாங்க! அந்தப் பையில் இருந்த பாம்பு மெதுவா வெளியே வந்து, ஒவ்வொரு ரூமாகச் சுற்ற ஆரம்பிக்குது. ஹாலில் வைத்திருந்த பாலைக் குடித்ததை கூட யாரும் கவனிக்கலை!

விஜயாவுக்கு வந்த மரண பயம்

இறுதியாக, அந்தப் பாம்பு விஜயாவின் ரூமிற்குள் சென்றுவிடுகிறது. இரவில் தூங்குவதற்காக ரூமிற்குள் சென்ற விஜயா, அங்கே பாம்பைப் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து கத்துகிறார். பின்னர், வழக்கம் போல ஹீரோவாக முத்து ரூமுக்குள் சென்று, அந்தப் பாம்பை ஒருவழியாகப் பையில் பிடித்துவிடுகிறார்.

வசமாக மாட்டிய ரோகிணி

இந்தக் குழப்பமெல்லாம் முடிந்த பிறகு, மனோஜுக்கு ஷோரூமில் இருந்து போன் வருகிறது. காலையில் கடைக்கு வந்திருந்த பாம்பாட்டி, பாம்பைக் காணவில்லை என்று தேடி வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகுதான், மனோஜின் ஷோரூமில் இருந்துதான் அந்தப் பாம்பு வீட்டிற்கு வந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. அந்தப் பாம்பு இருந்த பையைத் தூக்கி வந்த ரோகிணியை விஜயா விடவில்லை. "பையில் என்ன இருக்குனு பார்க்காமலா எடுத்துட்டு வருவ?" என்று கத்திக் கொண்டிருக்கிறார்.

மொத்தத்துல, இன்றைய எபிசோடை பாம்பை வைத்தே ஓட்டிவிட்டார்கள். இனி வரும் எபிசோடுகளில் ரோகிணிக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+