சிறகடிக்க ஆசை: விஜயாவின் மனமாற்றம்.. முத்து சொன்னது நடந்து விட்டது! பயத்தில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ரோகிணியின் 40 லட்ச ரூபாய் ஆர்டரால், விஜயாவின் பாசப் பார்வை முழுவதும் இப்போது ரோகிணி பக்கமே திரும்பிவிட்டது. விஜயாவின் இந்தத் திடீர் பாச மாற்றம், இன்று அவர் எடுத்த அதிரடி முடிவால், முத்துவின் கணிப்பைச் சரியாக நிரூபித்து, வீட்டையே கலகலப்பாக மாற்றியது.
விஜயாவின் மனமாற்றம்
வீட்டுக்குள் பார்வதி கதை சொல்லிக் கொண்டிருக்க, வாசலில் வந்த விஜயாவும், அவருடையத் தோழி சிந்தாமணியும் அதைப் பார்த்துக் கடுப்பாகி நிற்கின்றனர். பிறகு உள்ளே வந்த விஜயா, சிவனைப் பார்த்து "இன்னைக்கு கிளாஸ் கிடையாது, நீங்க போங்க" என்று அனுப்பி வைக்கிறார்.

சிந்தாமணியின் கலாய்
விஜயாவின் கடுப்பைப் பார்த்து, சிந்தாமணி, "என்ன ஆச்சு மாஸ்டர், இவங்க பழகுறது உங்களுக்குப் பிடிக்கலையா?" என்று கேட்கிறார். விஜயா ஆமாம் என்று சொல்ல, சிந்தாமணி காமெடியாக, "வேணும்னாச் சிவனைப் பரலோகத்துக்கு அனுப்பிடலாமா?" என்று கேட்கிறார். அதெல்லாம் வேண்டாம், இவங்களைப் பழக விடாமல் இருந்தாலே போதும் என்று விஜயா சமாளிக்கிறார்.
பிறகு பார்வதி அங்கே வர, விஜயா திடீரெனப் பாசத்துடன், "என் மருமகள் இவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்கா!"என்று பேச ஆரம்பிக்கிறார்.
கோடீஸ்வர கனவு
ரோகிணி பண்ணது பெருமையான விஷயம் என்றும், "அவ இப்பவே இல்ல ஜாதியில பாதி ஆயிட்டா. கண்டிப்பா அவங்க கோடீஸ்வரனா மாறிடுவாங்கன்னு எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு" என்றும் விஜயா பூரிக்கிறார். அப்போது ரோகினிக்கு கிடைத்த ஆர்டர் மற்றும் மீனாவுக்கு கிடைத்த ஆர்டரை பற்றி சொன்னதும் சிந்தாமணி மீனாவின் ஆர்டரை கெடுக்க மனதிற்குள்ளே பிளான் போடுகிறார்.
ரோகிணிக்கு நல்லது செய்ய நினைத்த விஜயா, பார்வதியிடம் ஜோசியக்காரரிடம் நாள் நல்லா இருக்கிறதா கேட்டு வரச் சொல்கிறார். நல்லா இருக்குன்னு பார்வதி சொன்னதும், விஜயா அதிரடியாக, "அவங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யணும்" என்று முடிவெடுக்கிறார்.
சிந்தாமணியின் உதவி
"அவங்களுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சா என்ன?" என்று சிந்தாமணி கேட்க, "அவ பொய் சொன்னதால பிரிச்சு வச்சுட்டேன். இப்ப நானே அதைச் சரி பண்ணிடுவேன்" என்றுச் சொல்லி, டெக்கரேஷன் பொறுப்பைச் சிந்தாமணியிடம் ஒப்படைக்கிறார் விஜயா. மனோஜ் ரூமில் சிந்தாமணி பூ டெக்கரேஷன்களைச் செய்து முடிக்க, விஜயா வந்து "சூப்பரா இருக்கு சிந்தாமணி" என்றுப் பாராட்டுகிறார். இதைக் கேட்டு, முத்து வந்து எட்டிப் பார்க்க, அண்ணாமலை "என்னத்துக்குடா போயிப் பார்த்துட்டு இருக்க?" என்று கேட்கிறார். ரவியும், ஸ்ருதியும் வந்து பார்க்கின்றனர்.
முத்துவின் கிண்டல்
"இதெல்லாம் எதுக்காக இருக்கும்?" என்று யோசிக்க, "அவங்க இத்தனை நாளா பொய் சொல்லிட்டாங்கன்னு பிரிச்சு வச்சிருந்தாங்க. இப்ப 40 லட்சம் வரப் போகுதுன்னு ஒண்ணு சேர்த்து வைக்கிறாங்க" என்று முத்து கிண்டல் அடிக்கிறார். அதோடு மனோஜ் வந்தால் எப்படி நடந்து கொள்வான் என்று முத்து நடித்துக் காட்ட, ஸ்ருதிக்குச் சந்தேகம் வருகிறது.
சவால்
ஸ்ருதி, "உங்களுக்கு எப்படி இப்படித் தெரியும்? அப்படிப் பேசலன்னா 500 ரூபாய் பெட்" என்று கேட்கிறார். "நீங்க சொல்ற மாதிரி மனோஜ் பேசினால் நான் உங்களுக்கு 500 ரூபாய் தரேன். இல்லன்னா நீங்க எனக்கு 500 ரூபாய் தரணும்" என்று சவால் விடுகிறார் முத்து.
மனோஜ் வருகை மனோஜ், ரோகிணி வீட்டுக்கு வர, சுருதி "இங்கப் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி எல்லாம் போடலையா?" என்று கேட்கிறார். குழப்பத்துடன் இருவரும் ரூமை எட்டிப் பார்க்க, ரோகிணி வெட்கப்படுகிறார். மனோஜுக்குப் புரியாமல் இருக்க, பிறகு காதில் சொன்னவுடன் அவரும் சந்தோஷப்படுகிறார். விஜயா வெளியில் வந்து, "நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். நீங்க இந்த வீட்டோட மொத மருமக! நீதான் முதல் வாரிசு பெத்து கொடுக்கணும்" என்றுச் சொல்கிறார். உடனே முத்து பேசியது போலவே மனோஜ் பேச, ஸ்ருதி, ரவியிடமிருந்து 500 ரூபாய் வாங்கி முத்துவுக்குக் கொடுக்கிறார்.
விஜயா, அவர்களைப் "போய் ஃபிரெஷப் ஆகிட்டு வாங்க" என்றுச் சொல்லி அனுப்பி வைக்கிறார். கடைசியில், அண்ணாமலை விஜயாவைக் கூப்பிட்டு பேசுகிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications