சிறகடிக்க ஆசை: முத்துக்கு தெரிந்த உண்மை! சிந்தாமணியிடம் சிக்கும் ரோகிணி! போனில் கிடைத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவின் அம்மாவின் கடையைப் பறி கொடுத்த துயரத்தை, விஜயாவும் சிந்தாமணியும் பிரியாணியுடன் கொண்டாடுகின்றனர். அப்போது நீ விஜயா உணரிய வார்த்தையை கேட்டு சிந்தாமணி அடுத்த பிளான் போடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்

விஜயாவின் பிரியாணி கொண்டாட்டம்
மீனாவின் அம்மா வைத்திருந்த பூக்கடை மற்றும் கரும்பு மெஷின் அப்புறப்படுத்தப்பட்ட செய்தி தெரிந்ததும், விஜயாவுக்கு அதைவிடப் பெரிய மகிழ்ச்சி எதுவுமில்லை. அவர் பார்வதியின் வீட்டுக்குச் சென்று, சிந்தாமணியை வரவழைத்து, மூவருக்கும் தட்டில் பிரியாணியைப் பரிமாறினார். அப்போது "மீனாவோட அம்மா பூக்கடையைத் தூக்கிட்டாங்க!" என்று விஜயா சிரிப்புடன் சொல்ல, அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைந்தார்.
"நீ அதுக்காகத்தான் பிரியாணி வாங்கிட்டு வந்தியா?" என்று கேட்கும் பார்வதியிடம், விஜயா ஆமாம் என்று பதிலளிக்கிறார். அப்போது, "ஒருத்தவங்க கஷ்டத்துல இருக்கும்போது அதை கொண்டாடுவதற்குப் பிரியாணி சாப்பிடக்கூடாது. அது என்னால சாப்பிடவும் முடியாது!" என்று சொல்லிவிட்டு, அந்த பிரியாணியைத் தொட மறுக்கிறார் பார்வதி.
இந்த நேர்மையான பேச்சால் நெகிழ்ந்துபோன சிந்தாமணி, "நீங்க சந்தோஷமா இருக்கும்போது நானும் உங்க சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கிறேன்" என்று விஜயாவுடன் சேர்ந்து சாப்பிட அமர்கிறார். அப்போது சிந்தாமணி, "முதல்ல அந்தக் கடையைத் தூக்குனாங்கன்னு கேள்விப்பட்ட உடனே நீங்கதான் செஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்" என்று சொல்ல, விஜயா தான் எதுவும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.
மீனாவின் வண்டியை தூக்க சதி
அப்போது விஜயா, "அவங்க வியாபாரத்தைக் கெடுக்கணும்னா, நீங்க மீனாவோட வண்டியை தானே தூக்கணும்!" என்று ஒரு புதிய சதி ஐடியாவை சிந்தாமணிக்குக் கொடுத்து விடுகிறார். விஜயாவின் இந்த கொடூரமான ஐடியா சிந்தாமணிக்கு நல்லதாகத் தோன்ற, அவர் உடனே சமையலறைக்குக் கை கழுவச் செல்கிறார்.
அங்கிருந்தே தனது ஆட்களுக்குப் போன் போட்டு, மீனாவின் பூக்கடை வண்டியைத் தூக்கிடச் சொல்லி உத்தரவிடுகிறார். அதை முடித்ததும், ரோகிணிக்கு போன் செய்து, "நீ சொன்ன விஷயத்தை பண்ணியாச்சு... மீனா வண்டியைத் தூக்கப் போற விஷயத்தையும்" சொல்கிறார். இதற்கு ரோகிணி, "ரொம்ப நல்லது!" என்று மகிழ்ச்சியுடன் சொல்ல, சிந்தாமணி, "அப்புறம் அந்த டெக்கரேஷன் விஷயம் உங்களுக்குத்தான்" என்று உறுதியளிக்கிறார். "சரி, இதுக்கப்புறம் எந்த உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு, செய்கிறேன்" என்று சிந்தாமணி சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.
முத்துவின் திட்டம்
மறுபக்கம், மீனாவின் அம்மா கடையை நினைத்துச் சாப்பிடாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, சத்யா அவருக்கு ஆறுதல் சொல்லிச் சாப்பிட வைக்க முயற்சிக்கிறார். கரும்பு மெஷின் தன் அப்பாவின் நினைவாக வைத்திருந்ததுதான் பெரிய கஷ்டமாக இருப்பதாக மீனாவுக்கு வருத்தம். சீதா வந்து, "போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம், அருண் விசாரிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்காரு, கடையை மீட்டு விடலாம்" என்று ஆறுதல் சொல்கிறார்.
முத்து கார் ஷெட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க, செல்வம் வந்து, "அந்த கார்ப்பரேஷன் ஆபிசர் யார்கிட்டயும் லஞ்சம் வாங்க மாட்டாராம், ரொம்ப ஸ்ட்ரிக்ட்!" என்று சொல்ல, "அப்போ காசு கொடுத்து எதுவும் பண்ண முடியாது, வேற வழியில தான் பண்ணனும்!" என்று இருவரும் பேசுகின்றனர். அப்போது அங்கு வரும் மீனா, "கோவிலில் புதுசா வந்திருக்கும் மேனேஜர் சரி இல்ல, வெளியில வைக்கிற கடையில எல்லாம் காசு வாங்கறாராம், டிபன் வாங்கி கொடுக்கச் சொல்றாராம்" என்று ஒரு தகவலைச் சொல்கிறார். அதைக் கேட்டதும் முத்து, "முதல்ல நம்ம வேலையை அவர்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கணும்" என்று செல்வம் மற்றும் மீனாவிடம் ஒரு திட்டத்தைச் சொல்கிறார்.
இப்படியே சீரியஸ் காட்சிகள் நகரும்போது, மறுபுறம் ஷோரூமில் மனோஜ், ஆர்டரை யாருக்குக் கொடுப்பது என்று ரோகிணியிடம் கேட்கிறார். ரோகிணி, "ஆன்ட்டியோட பிரெண்ட் சிந்தாமணிக்கே கொடுக்கிறேன்" என்று சொல்ல, ஸ்ருதி அங்கு வருகிறார். ஸ்ருதி, "ரெஸ்டாரன்ட்க்கு பிரிட்ஜ், அவன் எல்லாம் தேவைப்படுது" என்று டீலர் விலைக்குத் தனக்கே கொடுக்கும்படி கேட்கிறார். ஒரு பொருள், இரண்டு பொருள்னா பரவாயில்லை, எல்லாவற்றையும் கேட்கும்போது எப்படி கொடுக்க முடியும் என்று மனோஜ் முகம் சுளிக்கிறார். "நீங்க ஹோட்டலுக்கு வந்தா நான் கம்மி பண்ணி தரேன், அவ்வளவு தானே... குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தானே கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டுவிட்டு, வேறு நிறுவனங்களைப் பார்க்கச் செல்கிறார் ஸ்ருதி. இது ரோகிணிக்கும் மனோஜுக்கும் மேலும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அந்த நேரத்தில் ரோகிணிக்கு வந்த ஒரு போன் காலால் அதிர்ச்சியில் இருக்கிறார். அந்தப் போன் காலில் ஸ்ருதியின் அம்மா என்ன பேசினார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications