சிறகடிக்க ஆசை: அருணிடம் சீதா கேட்ட கேள்வி! முத்து செய்த செயல்! வன்முறையை கையில் எடுத்த கிரிஷ்
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான தொடரான 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவின் புத்திசாலித்தனம், அருணின் வன்மம், மற்றும் கிருஷ்-ஷின் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் எனப் பல விறுவிறுப்பான திருப்பங்கள் அரங்கேறின. முத்து தன் மீது தப்பு இல்லை என்று அருண் பற்றிய உண்மை குணத்தை அனைவரிடமும் அறிய வைத்திருக்கிறார். அதனால் சீதா மற்றும் அதனுடைய பிரச்சனை வெடிக்கிறது.

உண்மையை வெளிக் கொண்டு வந்த முத்து
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் முத்து, தான் ஆளை வைத்து அடிக்கவில்லை என்று அருண் வாயிலிருந்து உண்மையை வரவழைத்து, அதை சீதா மற்றும் மீனாவிடம் தெரியப்படுத்துகிறார். அருண் செய்த துரோகம் வெளிவந்ததும், சீதா மற்றும் மீனா இருவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். "நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல" என்று மீனா கோபத்துடன் அருணிடம் கேட்க, அருண் அமைதியாக நிற்கிறார்.
சீதா, "நான் எங்க அக்காவோட முகத்துல எப்படி முழிப்பேன்?" என்று கண்ணீருடன் சண்டை போட்டு, மனம் உடைந்த நிலையில் மீனாவைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார். மீனா சீதாவை சமாதானப்படுத்துகிறார். அப்போது முத்து "நீ எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? எனக்கும், அருணுக்கும் பிரச்சனை இருக்கிறது அதனால் அவன் என்ன பழிவாங்க இப்படி பண்ணிக்கிட்டு இருக்கிறான். ஆனா அவன் உன்ன சந்தோசமா தான் வச்சிருக்கான் நீ எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்" என்று சொல்கிறார். மேலும், "நீ மீனாவுக்கு மட்டும் தங்கச்சி கிடையாது, நானும் உன்னை அப்படித்தான் பார்க்கிறேன். இதையெல்லாம் நீ வீட்டில் போய் சண்டை போட்டுக்கிட்டே இருக்காத. அருண் கூட சந்தோஷமா வாழணும்" என்று இருவரும் பேசி சீதாவை சமாதானப்படுத்தி அனுப்புகின்றனர்.
அருணின் மன்னிப்பும், தொடரும் வன்மமும்
மறுபக்கம், அருணின் அம்மா, சீதா ஏன் சோகமாக இருக்கிறார் என்று அருணிடம் கேட்கிறார். அருண் எதுவும் சொல்லாமல் ரூமுக்குச் செல்ல, அவர் சமாதானப்படுத்தும்படி அறிவுறுத்துகிறார். ரூமுக்கு வந்ததும், அருண் சீதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். "உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னோட அன்பு அளவுக்கு அதிகமாக எனக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்கணும்னு நினைக்கிறேன். உன் அக்காவுக்கும் முத்துவுக்கும் உன் மீது அதிக அன்பு இருக்கு, அதுக்காகத்தான் இப்படிப் பொய் சொல்லிட்டேன்" என்று சொல்லி சீதாவைச் சமாதானப்படுத்துகிறார்.
ஆனால், அவரது மனம் இன்னும் மாறவில்லை. மனதுக்குள், "முத்து, உன்னை சும்மா விடமாட்டேன். உன்னை சீதாவோட குடும்பத்திலிருந்து பிரிச்சுக் காட்டுவேன்" என்று மீண்டும் வன்மத்துடன் சபதம் எடுக்கிறார்.
கிருஷின் பயம்
இன்னொருபுறம், பள்ளியில் அம்மாக்கள் வந்து அங்கிருக்கும் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர், கிருஷ்-ஷின் அம்மா மட்டும் வராமல் இருக்கிறார். இதனால் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கிருஷ் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பையன் வந்து உனக்கு அம்மா இல்லையா? நீ தான் அம்மா இருக்குன்னு எங்க கிட்ட பொய் சொல்லிட்டு இருக்க, 'லையர்' (பொய்யன்) என்று ஒரு பையன் சொன்னதும், கோபத்தில் அவனைத் தள்ளிவிடுகிறார். இதனால், கிருஷ் முட்டி போட வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறார். "எனக்கு அம்மா இல்லை, என்னை பார்க்க யாரும் வர மாட்டாங்க" என்று சொன்னதால் தான் இப்படி நடந்து கொண்டதாக கிருஷ்-ஷ் சொல்கிறார்.
"இப்போது நீ செய்ததை போலீஸில் சொல்லியாச்சு. அவர்கள் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க" என்று ஆசிரியர் சொல்ல, கிருஷ் பயத்தில் அழுகிறார். அப்போது, அதே பள்ளிக்கு வரும் மீனா, மேனேஜரைச் சந்தித்து, பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மேனேஜர் 'தினமும் 10 முழம் மல்லி பூவும், ஒரு ரோஜா மாலையும்' வேண்டும் என்று சொல்ல சரி என்று சொல்லிவிட்டு மீனாவும் அங்கிருந்து கிளம்பி போகிறார்.
பின்னர், மேனேஜர் கிருஷ்-ஷைப் பார்த்து, "இப்போது நீ பள்ளியில் இரு. மாலையில் போலீஸ் வருவார்கள்" என்று சொல்ல, கிருஷ் மேலும் பயத்தில்அழுது கொண்டே மன்னிப்பு கேட்கிறார் பிறகு இந்த ஒரு முறை மட்டும் உனக்கு மன்னிப்பு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கீழே போக சொல்கிறார் அப்போது மீனா பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். ஆனால் கிரிஷ் மீனாவை பார்க்கவில்லை. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications