சிறகடிக்க ஆசை: மீனாவிடம் ரோகிணி சொன்ன விஷயம்! முத்து கையில் கிடைத்த கிரிஷ்! அம்மா பற்றி சொன்ன உண்மை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களைக் கவர்ந்து வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ஒவ்வொரு நாளும் ஒரு புது ட்விஸ்ட் வச்சுட்டுதான் இருக்காங்க. இப்போ, கிரிஷ் என்ற குழந்தையை மையமாக வெச்சு நகரும் கதையில், இன்னைக்கு ஒரு பெரிய திருப்பம் நடந்திருக்கு. அது என்னன்னு பார்க்கலாமா?. ஆனால் திரிஷா தன்னுடைய அம்மா பற்றி உண்மையை சொல்லுவான் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசியில் வழக்கம்போல ஏமாற்றம்தான் கிடைத்தது.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியின் சூழ்ச்சி

கிரிஷை கடத்திச் சென்றது ரோகிணிதான் என்பதை மீனாவும், முத்துவும் இன்னும் கண்டுபிடிக்கல. ஆனால், அவங்க ஏதாவது சந்தேகப்படும் போது ரோகிணி கில்லாடியாகச் செயல்படுகிறார். இன்னைக்கு, அருண் தங்களுடைய காரை செக் பண்ணாததால் அது பற்றிய முத்துவும் மீனாவும் பேசிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார் அப்போது ரோகிணி மீனாவுக்கு போன் செய்து ஒரு ஃபங்ஷனுக்கு பூ அலங்கார ஆர்டர் கேட்கிறார். பூ டெக்கரேஷனுக்கு எவ்வளவு செலவாகும்னு கேட்க, மீனாவும் ஒரு 50 ஆயிரம் ஆகும்னு சொல்கிறார். அதுக்கு ரோகிணி, "கஷ்டப்படுறவங்கனா கம்மி பண்ணிக்கலாம்னு சொன்னீங்களே"னு பேசி, ஒரு நல்ல மனுஷி மாதிரி நடிக்கிறார்.

அப்புறம், பேச்சு வாக்குல, ரோட்ல ஒரு கார்ல கிரிஷ் மாதிரி ஒரு பையன் ஏறிப்போனதை பார்த்ததா ரோகிணி சொல்ல, மீனாவும் ஏற்கனவே ஒரு காரில் ஏறி போனதை நானும் பார்த்தேன்னு சொல்கிறார். "ஆனா அவனை பிடிக்க முடியலையே"ன்னு மீனா சொல்ல, ரோகிணி, "அவனான்னு தெரியல, அதுக்குள்ள கார் போயிடுச்சு"ன்னு சொல்லி, இந்த விஷயத்தை அப்படியே மழுப்பி விடுகிறார். அதோடு நீங்க கிரிஷை பாக்கலையா என்று கேட்க, அதற்கு மீனா இல்லை என்று சொன்னதும் அப்போ இவங்களுடனும் இல்லை என்று ரோகிணி தன்னுடைய பிரண்டிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்

முத்துவின் சாமர்த்தியம்

இப்படி ரோகிணி ஒருபக்கம் சூழ்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க, இன்னொரு பக்கம் முத்து மீனா வீட்டுக்கு வர்றார். அங்க, அருண் நடந்துக்கிட்டதுக்காக மீனா அம்மா சீதா, முத்துகிட்ட மன்னிப்பு கேட்கிறார். "அதனால என்ன விடுங்க"னு முத்து ரொம்பப் பாசமாப் பேச, அவர் மனசு எவ்வளவு பெருசுனு மீனாவின் அம்மா எமோஷனல் ஆகுகிறார்.

அப்புறம், முத்து மீனாவின் பூக்களை காரில் ஏத்தும்போது, "டயர் பஞ்சர் ஆகிடுச்சு, பூக்களையெல்லாம் டிக்கில வெச்சுடு"னு சொல்றார். மீனாவும் "சரி"னு பூக்களையெல்லாம் டிக்கில வெச்சுட்டு கிளம்புறாங்க. அப்போதான் அந்த பெரிய ட்விஸ்ட் நடக்குது! எல்லாரும் கிரிஷை பத்தி பேசிக்கிட்டு இருக்கும்போது, முத்து டிக்கியைத் திறக்கிறார். அங்க, கிரிஷ் மயக்கமான நிலையில் இருக்கான். அதைப் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் அப்படியே அதிர்ச்சி ஆகிடுறாங்க.

வெளிச்சத்துக்கு வந்த உண்மை

அவசர அவசரமாக எல்லாரும் கிரிஷை தூக்கிட்டு டாக்டர்கிட்ட போறாங்க. ரோகிணி தன்னோட கார்ல மகேஷ்வரியோட அழுதபடியே போறார். "அவன் அம்மா கூட்டிட்டு போயிருப்பாங்களே?"னு மகேஷ்வரி கேட்க, "அவங்க கூட்டிட்டு போயிருக்கவே மாட்டாங்க"னு ரோகிணி பயத்துல உளறுறார். அப்புறம், "பள்ளிக்கூடம்தான் இதுக்கு பொறுப்பு"னு சொல்லி, ஸ்கூலுக்குப் போறாங்க.

டாக்டர்கிட்ட கிரிஷை செக் பண்ணும்போது, அவன் புலம்பிக்கொண்டே, தன்னுடைய அம்மா பேர் "கல்யாணி"னு சொல்கிறான். இந்தப் பேரைக்கேட்டதும், முத்துவுக்கும் மீனாவுக்கும் குழப்பமா இருக்கு. கடைசியில, முத்து கிரிஷை மீனா வீட்டுக்கு அழைச்சிட்டு போய் என்ன ஆச்சுனு கேட்க, அவன் படிச்ச பள்ளிக்கூடப் பெயரை மட்டும் சொல்றான். இதைக்கேட்டு முத்து வேகமா ஓடிவர்றார்.இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இனி வரும் நாட்களில், முத்துவுக்கு உண்மையான வில்லி ரோகிணிதான்னு தெரிஞ்சிருச்சுன்னா, கதை இன்னும் பரபரப்பா இருக்கும்னு ரசிகர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+