சிறகடிக்க ஆசை: சிந்தாமணி உளறிய விஷயம்!ரோகிணி பற்றிய உண்மை உடைந்தது! கோபத்தில் விஜயா!
சென்னை: 'சிறகடிக்க ஆசை' சீரியல்ல இன்றைய எபிசோடு முழுக்க முழுக்க பணச் சண்டையும், மாட்டிக்கிட்டு முழிக்கிற படலமுமா இருந்துச்சுங்க! மீனா வண்டித் திருட்டு விவகாரத்துல, ரோகிணி எவ்வளவு பெரிய பலியாடாயிருக்காங்கன்னு பாருங்க!

சிக்கலில் சிந்தாமணி
மீனா வண்டிக்காக முத்து, சிந்தாமணிகிட்ட ரூ. 40,000 பணம் கேட்டார் இல்லையா? அந்தப் பணத்தைக் கொடுக்க மனசில்லை சிந்தாமணிக்கு. உடனே, இந்தத் திருட்டு வேலைக்குப் பின்னாடி இருந்த ரோகிணிக்கு போன் போட்டு, "உன்னாலதான் நான் மாட்டிக்கிட்டேன். முத்து இப்போ 40 ஆயிரம் கேட்குறான், அதை நீதான் கொடுக்கணும்"னு மிரட்டுறாங்க.
"உன்கிட்ட இல்லாத பணமானு ரோகிணி கேட்ட, "பணம் என்கிட்ட இருக்கு, ஆனா இந்தப் பிரச்சனை உன்கிட்ட இருந்துதான் ஸ்டார்ட் ஆச்சு. அதனால நீதான் கொடுக்கணும்!"னு சிந்தாமணி பிடிவாதம் பிடிக்க, ரோகிணி வேறு வழியில்லாம ஒத்துக்கிட்டாங்க. ஆனா, சிந்தாமணி விடல, "நீ எங்க இருக்க? நான் நேர்ல வந்து வாங்கிக்கிறேன்!"னு ஷோரூமுக்கு வரேன்னு சொல்ல, ரோகிணி மாட்டி முழிச்சாங்க.
மனோஜை மடக்கிய ரோகிணி
சிந்தாமணிக்குப் பணம் கொடுக்கணும்னு முடிவெடுத்த ரோகிணி, வீட்டுக்கு வந்து கணவர் மனோஜ்கிட்ட ஒரு நாடகத்தைப் போட்டாங்க. "வித்யாவின் கல்யாணத்துக்கு நாம என்ன செய்றது?"ன்னு கேட்க, மனோஜ், "ஆயிரத்து ஒரு ரூபாய் மொய் வெச்சிடலாம்"னு சொன்னதும் ரோகிணிக்குக் கோபம்! "அவ எனக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள நகை போட்டிருக்கா, நான் மொய்யை மட்டும் வெச்சிட்டு வரணுமா?"ன்னு கோபப்பட்டாங்க.
கடைசியில, மனோஜ் கிட்ட இருந்து ரூ. 50,000 பிடுங்கிட்டாங்க! மனோஜ் பத்தாயிரம் தரக்கூடத் தயங்க, ரோகிணி கோபிச்சுக்கிட்டதும், வேறு வழியில்லாமக் கொடுத்துட்டார். "மீதி 50 ஆயிரத்தை நான் ரெடி பண்ணிப் பார்த்துக்கிறேன்"னு மனோஜ் சொல்லிட்டுப் போனதும், ஷோரூம்க்கு சிந்தாமணி வந்துட்டாங்க. மனோஜ் கேட்டதுக்கு, "பியூட்டி பார்லர் ஆர்டர் பத்தி பேச வந்தேன்"னு சொல்லி, சிந்தாமணி சமாளிச்சுட்டாங்க.
ரோகிணியின் சூழ்ச்சி அம்பலம்
மனோஜ் கொடுத்த 50 ஆயிரத்துல இருந்து 40 ஆயிரத்தை எடுத்து சிந்தாமணிகிட்ட கொடுத்துட்டாங்க ரோகிணி. அப்போ சிந்தாமணி, "அந்த முத்து எப்படித்தான் கண்டுபிடிச்சான்?"னு கேட்க, "அவன் நாள் பூரா வண்டி ஓட்டுறவன், எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கான். அதனாலதான் கண்டுபிடிச்சான். உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்டயாவது சொல்லி இருக்கலாம்"னு ரோகிணி புலம்ப, சிந்தாமணி சும்மா விடுவாங்களா? "என்கிட்ட சொன்னதுனாலதான் உன் பக்கம் பிரச்சனை திரும்பாம இருந்திருக்கு. வேற யார் கிட்டயாவது சொல்லி இருந்தா, உன்னைக் காட்டிக் கொடுத்திருப்பாங்க"னு ரோகிணியை மிரட்டிட்டு போனாங்க.
மறுபக்கம், முத்துவிடம் வந்து சிந்தாமணி 40 ஆயிரம் பணத்தைக் கொடுத்தார். முத்து "இதுக்கு மேல நீங்க பிரச்சனை பண்ண நினைச்சீங்கன்னா, அவங்களுக்கு (அடியாள்களுக்கு) விழுந்த அடி, உங்களுக்கு விழும்"னு மிரட்டி அனுப்பினார்.
விஜயாவை காண்டாக்கிய அண்ணாமலை
மீனா சாமி கும்பிட்டுட்டு வந்தபோது, அண்ணாமலை "உனக்கு வண்டி தேவைப்பட்டால் நான் வாங்கித் தரேன்"னு பாசமா சொன்னார். இதை ஒட்டுக்கேட்ட விஜயா, உடனே குறுக்கப் புகுந்து, "உங்களுக்கு என்ன அவ்வளவு பணமா? அவளுக்கு எதுக்கு நீங்க வண்டி வாங்கித் தரணும்?"னு சண்டையை ஆரம்பிச்சாங்க. அண்ணாமலை, விஜயாவை வாயை அடைச்சதுக்குப் பிறகு, மனோஜும், ரோகிணியும் வந்தாங்க.
விஜயா தன் யோகா கிளாஸுக்காக மனோஜ்கிட்ட பத்தாயிரம் கேட்க, மனோஜ், "என்கிட்ட அவ்வளவு இல்லைம்மா"னு சொல்லி, ரோகிணிக்கு ஐம்பதாயிரம் கொடுத்த விஷயத்தை உளறிட்டார்!
உடனே விஜயாவுக்கு ஆத்திரம் தாங்கல, ரோகிணியிடம் சண்டைக்குப் போக, "வித்யாவோட கல்யாணத்துக்கு நகை போடணும்னுதான்"னு ரோகிணி சமாளிச்சாங்க. அப்போ முத்து வந்து, "இந்தத் திருட்டுக்குக் காரணம் சிந்தாமணிதான். ஆனா, யாரோ ஒருத்தர் சொல்லித்தான் அவர் இப்படிச் செய்திருக்கார்"னு ஒரு குண்டைப் போட, விஜயா முதலில் நம்பல!
ஆனால், சிந்தாமணி கொடுத்த காசுல மீனாவுக்கு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எடுக்க முத்து பேசிக்கிட்டிருக்கார். மொத்தத்துல, ரோகிணியோட சூழ்ச்சி வெளியே தெரியுறதுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு போல!
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications