சிறகடிக்க ஆசை: ஸ்ருதியின் அம்மா கண்ட காட்சி.. ரவிக்கு வந்த பிரச்சனை! முத்து கொடுத்த பதிலடி! சந்தோஷத்தில் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் இன்று அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில், ஃபுல்லா பணப் போராட்டமும், பாசப் போராட்டமுமாப் போய்க்கிட்டு இருக்கு. மீனாவுக்கு வண்டி வாங்கித் தர நடக்குற பஞ்சாயத்துல, ரவி ஒருபக்கம் மாமியார், மாமனார் சூழ்ச்சியில சிக்க, ரோகிணி இன்னொருபக்கம் மனோஜ்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காங்க!

முத்துவின் பாசம்
மீனா வண்டி தொலைஞ்சு போனதும், எல்லாரும் அவங்களுக்கு உதவத் துடிக்கிறாங்க. அண்ணாமலை, "உனக்கு வண்டி தேவைப்பட்டால் நானே வாங்கித் தரேன்"னு சொன்னார். உடனே விஜயா, "இன்னும் உங்ககிட்ட அவ்வளவு பணம் இருக்கா?"னு எரிச்சலோட கேட்க, முத்து குறுக்க வந்து, "யாரும் கொடுக்க வேண்டாம் அப்பா, நானே பார்த்துக்கிறேன்"னு சொன்னார்.
உடனே ரவி, "நான் ரூ. 5000 தரேன்டா"ன்னு பாசத்தைக் காட்ட, விஜயாவுக்குப் பொறாமை தாங்கல. "பாரு சுருதி! எப்படி காசை வாரி இறைக்கிறான்னு என்னன்னு கேளு"னு சொல்லி சுருதியைக் கோபப்படுத்தப் பார்த்தாங்க. ஆனா, சுருதி சும்மா விடுவாங்களா? "ஆமா, கரெக்டா நீங்க யார் தந்தாலும் நானும் 5000 தருவேன்"னு சொல்லி விஜயாவை ஷாக் ஆக்கினாங்க!
எல்லோரோட பாசத்தைப் பார்த்ததும், எலெக்ட்ரிக் பைக் வாங்க முடிவெடுத்துட்டு எல்லாரும் கலைஞ்சு போனாங்க. இந்தச் சந்தோஷத்துல முத்து, தன் நண்பனைப் பார்க்கப் போனப்போ, அவன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஓட்டி வர்றதைப் பார்த்தார். உடனே மீனாவுக்குப் புது ஸ்கூட்டி வாங்கணும்னு திட்டமும் போட்டார். முத்துவின் பாசம்ன்னா சும்மாவா!
ரோகிணியின் கண்ணீர்
இன்னொரு பக்கம், ரூமுக்கு வந்த ரோகிணி, மனோஜ் மேல செம கோபமாப் பேசினாங்க. "எனக்கு 50 ஆயிரம் கொடுத்த விஷயத்தை உன் அம்மா கிட்ட சொல்லி ஆகணுமா? அவங்க எப்படிப் பேசுவாங்கன்னு உனக்குத் தெரியாதா?"ன்னு சத்தம் போட, மனோஜ் பாவம், "அந்த 10,000ஐ சமாளிக்கிறதுக்குச் செலவையும் சொல்லிதான் ஆகணும்"னு முழிக்கிறார்.
அப்போ ரோகிணி உண்மையிலேயே கஷ்டப்பட்டுப் பேசுறாங்க. "உனக்காக நான் எதுவுமே பண்ணலையா மனோஜ்? எப்ப பார்த்தாலும் ஷோரூம்லதானே இருக்கேன். மீனாக்காவுக்கு எல்லாரும் ஹெல்ப் பண்றாங்க. ஆனா எனக்காக இந்த வீட்டுல யாரும் பேச மாட்டாங்க, ஹெல்ப் பண்ண மாட்டாங்க! என்னோட மனநிலை எப்படி இருக்கும்?"னு கஷ்டத்தைப் கொட்டித் தீர்க்கிறாங்க. அவங்க சுயநலமா இருந்தாலும், வீட்ல யாரும் சப்போர்ட் பண்ணலையேன்னு அவங்க மனசு வருத்தப்பட்டுட்டு இருக்குறாங்க.
சூழ்ச்சியில் ரவி
இந்த நேரத்துல, ரவியோட வாழ்க்கையில ஒரு பெரிய சிக்கல் உருவாகியிருக்கு. ரவி வேலை செய்யுற ஹோட்டலுக்கு ஸ்ருதியோட அம்மா, அப்பா போறாங்க. "ஸ்ருதி ஹோட்டல் ஓபன் பண்ணியும் ஹோட்டலுக்கு ஏன் வர மாட்டேங்கறீங்க? மாமனார் பணத்துல வரக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?"னு நைசா பேச்சைக் கிளப்புறாங்க.
ரவி, "நான் என்னோட சொந்தக் காசுல உழைச்சு முன்னேறணும்னு நினைக்கிறேன். எங்க அப்பாகிட்டயே பணம் வாங்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"னு சொன்னதும், ஸ்ருதியோட அப்பா கடுப்பாகிறார். "எங்க அப்பா எனக்கு அறிவையும், சம்பாதிக்கிற திறமையையும் கொடுத்திருக்கிறார். அதுவே போதும்!"னு ரவி கம்பீரமாகப் பதில் சொல்றார்.
அவங்க பேசிக்கிட்டு இருக்கிறப்போ, ரவியோட அசிஸ்டென்ட் நீத்து, "நாம அப்ளை பண்ணின கம்பெனி செலக்ட் பண்ணிடுச்சு ரவி"ன்னு சந்தோஷமாச் சொல்லி கை கொடுத்துப் பேசுறாங்க. அதைப் பார்த்த ஸ்ருதியின் அம்மா, அப்பா கோபத்தோட, "அந்தப் பொண்ணு எவ்வளவு மாத்தி வச்சிருக்கான்னு சொல்றது சரிதான். இவங்களப் பிரிச்சு ஆகணும்"னு முடிவெடுத்துட்டுப் போறாங்க. இனி, ரவி - ஸ்ருதி வாழ்க்கையில இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழப்பம் பண்ணப் போறாங்கன்னு மட்டும் நல்லாத் தெரியுது!
ரவி டேஸ்ட்டில் சாப்பாடு
மறுபக்கம், ஸ்ருதி எல்லாருக்கும் ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வரவச்சு பரிமாற, எல்லாரும், "இது ரவியோட டேஸ்ட் தான்!"னு பாராட்ட, ரவி, "நான் சமைக்கல"னு சொல்றார். அப்புறம்தான் தெரியுது, அது ரவியோட அசிஸ்டென்ட் சமைச்சதுன்னு!. உடனே மனோஜ் நீ எதுக்காக அவனுக்கு உன்னுடைய ரகசியத்தை எல்லாம் சொல்லிக் கொடுத்த என்று கேட்கிறார். அதற்கு "தெரிஞ்ச விஷயத்தை நாலு பேருக்குச் சொல்லித்தரது சந்தோஷம் தான்"னு முத்து சொன்னத, மனோஜுக்கு ஒரு மெசேஜ் கொடுத்தது! இப்படியாக இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.
மொத்தத்துல, இந்த வீட்டுல இனிமேல் மீனாவுக்கு புது ஸ்கூட்டி வரும்! ஆனா, ரவி வாழ்க்கையில வரப்போற சிக்கல்கள் இன்னும் அதிகமாகும் போல!
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications