நான் நாகர்கோவில்காரன்.. அப்பா ஜீப் ஓட்டுவாரு.. “சிறகடிக்க ஆசை” ஷூட்டிங்கில் நடந்த கஷ்டம்- செல்வம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிகர் பழனியப்பன் நடித்து வருகிறார். இவர் தனக்கு சிறகடிக்க ஆசை சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் டாப் 10 சீரியலிலும் முதலிடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறார்கள். அதிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் கூட அவர்களுடைய கேரக்டரின் படி ரசிகர்கள் அவர்களை அழைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கதாநாயகனின் பிரண்டாக நடிக்கும் செல்வத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் புகைப்படங்களாக மற்றும் வீடியோக்களாக எடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில் நான் இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
அது எல்லாமே குப்பை படம் போல தான் இருக்கிறது. நான் நடித்த படங்கள் பெரிய அளவில் எனக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. சம்பளம் வேண்டும் என்பதற்காக எந்த கேரக்டர் என்றாலும் ஓகே என்று நான் நடித்து விட்டேன். அது மட்டும் அல்லாமல் நூறுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். திருமதி செல்வம் சீரியலில் நான் கதாநாயகனின் அப்பாவிற்கு பிரண்டாக நடித்திருந்தேன்.
அந்த சீரியலை இயக்குனர் குமரன் தான் இயக்கி இருந்தார். அவர் தான் சிறகடிக்க ஆசை சீரியலையும் இயக்குகிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் பிரண்டு கேரக்டருக்கு ஆடிஷன் நடக்கிறது என்று என்னுடைய நண்பர் பாலாஜி சொன்னார். நான் கதாநாயகன் பிரண்ட் என்றால் நமக்கு கேரக்டர் செட்டாகுமா என்று முதலில் போகாமல் இருந்தேன். மீண்டும் மீண்டும் என்னுடைய நண்பன் எனக்கு போன் போட்டு என்னை திட்டினார் அதனால் சரி என்று நானும் கிளம்பி வந்தேன்.
அங்கு குமரன் சாரை பார்த்ததும் நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். அவர் ஒரு நிமிடம் என்னை பார்த்தார் பிறகு நீ தான் கதாநாயகனின் பிரண்ட் என்று சொல்லிவிட்டார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதற்கு பிறகு கதாநாயகன் டிரைவர் அவருடைய பிரண்டு நீயும் டிரைவர் என்று சொன்னார். அப்போதான் எனக்கு பயமே வந்தது. காரணம் எனக்கு கார் ஓட்ட தெரியாது.
என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவில்தான். என்னுடைய அப்பா அங்கு மலையில் கூட ஜீப் ஓட்டுவார். ஆனால் நான் கார் கூட ஒட்டியது கிடையாது. நடிக்க சொன்னால் என்னால் நடிக்க முடியும் கார் ஓட்ட சொன்னால் எனக்கு தெரியாது. ஆனால் இந்த கேரக்டருக்காக கார் ஓட்டி படிக்க வேண்டும் என்று நினைத்து கார் ஓட்ட கற்றுக் கொண்டேன். ஆனாலும் பெரிய அளவில் கார் ஓட்டவில்லை. அதற்கு முன்பு எனக்கு சூட்டிங் வந்து விட்டது.
முதலிலே நான் காரில் சேஸ் பண்ணுவது போன்று தான் காட்சிகள் இருந்தது. அப்போ சூட்டிங் ஸ்பாட்டில் சிறகடிக்க ஆசை நடிகர்கள் எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் முன்பு எனக்கு கார் ஓட்டுவதற்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இப்ப கொஞ்சம் கொஞ்சம் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு எனக்கு நல்ல பிரபலம் கிடைத்திருக்கிறது. இப்போ வெளியே எங்கே போனாலும் செல்வம் என்று என்னை எல்லோரும் கூப்பிடுகிறார்கள்.
என்னிடம் முத்து உங்க கூட வரலையா? என்று கேட்கிறார்கள். இது எல்லாமே எனக்கு மக்கள் கொடுத்த மரியாதை தான். அதுபோல இனியாவது நல்ல திரைப்படங்களில் நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இப்போதைக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் வந்திருக்கிறது என்று அந்த பேட்டியில் பழனியப்பன் பேசி இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் லொள்ளு சபா போன்ற பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications