Siragadikka Aasai : விடைபெறும் நேரம் வந்துவிட்டது! மனோஜ் போட்ட போஸ்ட் ! சிறகடிக்க ஆசையில் இனி கதை இதுவா?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பெரிய வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலை பற்றிய பேச்சு தான் இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அடுத்தபடியாகப் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது மனோஜ் கேரக்டர் தான். இந்த ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ஸ்ரீ தேவா. இவருக்கு என்று இப்போ ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ் கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமானது. இவரை சீரியலில் ரொம்பப் படித்தவராகக் காட்டுனாலும், முட்டாள் குணம் கொண்டவராகச் சித்தரிப்பதனால்தான் எல்லா சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழிப்பார். அதனாலேயே இந்தக் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீனாவுக்கு தெரிந்த ரோகிணியின் ரகசியம்
இப்போ சீரியலில் ரொம்பவே பரபரப்பாகப் போயிட்டு இருக்கிற விஷயம் என்னன்னா, மனோஜின் மனைவி ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், அவருடைய குழந்தைதான் **கிரிஷ் என்றும் மீனாவுக்கு தெரிய வந்ததுதான்.
ரோகிணியின் கெஞ்சல்
இந்த ரகசியம் வெளியே வரக்கூடாது என்று ரோகிணி, மீனாவிடம் ரொம்பவே கெஞ்சுகிறார். தன்னுடைய பழைய வாழ்க்கையில் நடந்த கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லி, மனோஜின் குடும்பத்தை ஏமாற்றியதற்கான நியாயத்தையும் பேசியிருக்கிறார். இதைக் கேட்ட மீனாவுக்கு, ரோகிணி மேல இரக்கம் வந்தாலும், ஒரு குடும்பத்தை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்று குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
மனோஜின் ரியாக்ஷன்
இப்போதைய சூழலில், ரோகிணி தன்னுடைய சுயநலத்துக்காக மீனாவுக்கு ஆதரவாகச் சில விஷயங்களைச் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால், ஒரு விஷயம் நிச்சயம். தன்னைப் பாதுகாக்க ரோகிணி என்ன வேணும்னாலும் செய்வாரு என்ற கருத்தும் இருக்கிறது.
ஆனால், எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரே விஷயம் என்னன்னா, ரோகிணி ஏற்கெனவே திருமணம் ஆனவர், கிரிஷ் தன்னோட மகன் இல்லைங்கிற உண்மை மனோஜ்க்குத் தெரியவரும்போது, அவர் எப்படி முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான். ஒருவேளை அவருக்கு உண்மை தெரிஞ்சா, இந்த சீரியலின் கதையே தலைகீழா மாறும் என்பதில் சந்தேகம் இல்லை!
ஸ்ரீ தேவாவின் பதிவு
இப்படி சீரியலில் பரபரப்பு ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும்போது, மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அதோடு சேர்த்து ஒரு கவிதை ஒன்றையும் பதிவு இட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், தன்னுடைய பழைய கண்ணாடிக்கு விடை கொடுப்பதாகவும், புதிய கண்ணாடியுடன் வருகை பற்றியும் ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவு இட்டிருக்கிறார்.
அந்த பதிவில், இரண்டு வருடங்கள் 450 எபிசோடுகள் நான் உன் முகத்தில இருந்த கண்ணாடி. உன் முகத்தின் முதல் பாதுகாவலன். இன்று உன்னை விட்டு விடைபெறுகிறேன்.. கேமரா ஆன் ஆன தருணத்தில் இருந்து நீ சொன்ன ஒவ்வொரு டயலாக்கும், நீ சொதப்பிய தருணங்களும் நீ சோதிக்கப்பட்டதும் நீ சிந்திய கண்ணீரும் எல்லாத்தையும் என் லென்ஸிலேயே ரெகார்ட் ஆகி இருக்கு. நீ விழுந்த நாளும் பார்த்தேன் அதுக்கு மேல் உன் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். நீ மேலே எழுந்த நாளும் பார்த்தேன் உன்னை நான் நம்புகிறேன்.
உன் பயணத்தின் தொடக்கமே இது பிரிவு எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் என் கடைசி வார்த்தை கண்ணாடி உடையலாம் ஆனால் ஹீரோயின் பார்வை உடைய கூடாது. கண்ணாடி மாறலாம் ஆனால் நீ நடிக்கும் போது உன் கண்களில் தீ மாறக்கூடாது. ஆல் த பெஸ்ட் நண்பா. இப்போ நான் ஓய்வெடுக்கிற நேரம் வந்துருச்சு ஒரு புதிய ஹீரோவுக்கு வழி கொடுக்கிற பழைய ஹீரோ மாதிரி போ மனோஜ் புதிய கண்ணாடியோட வர்ற உன் அடுத்த பிரேம் எல்லாரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யட்டும். இப்படிக்கு உன் மீது அக்கறை கொண்ட உன் பழைய கண்ணாடி என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மனோஜ் கதாபாத்திரத்துக்குக் கிடைக்கப் போகிற இந்த புதிய தோற்றம், கதையில் ஏதாவது பெரிய திருப்புமுனையைக் கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications