சிறகடிக்க ஆசையில் இனி நடக்கப் போவது இதுதானா? முத்து போலீஸ் ஸ்டேஷனில்.. கே.ஆர் விஜயா யாரோடு பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகர்களோடு நடிகை கே. ஆர். விஜயா மற்றும் வடிவுக்கரசி சில தினங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் இந்த சீரியலில் விஜயாவாக நடிக்கும் நடிகை அணிலா தனியாக கே ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசியை சந்தித்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே சில வாரங்களாகவே கவரிங் நகையை மனோஜ் மாற்றி வைத்த விஷயம் தான் வீட்டில் பூகம்பமாக வெடிக்கும் என்பது ரசிகர்கள் யூகித்ததுதான். அதுபோலத்தான் இப்போது நடந்திருக்கிறது.

மீனாவின் நகைகளை மீனா பாட்டிக்கு நகை எடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு மனோஜ் சிலரிடம் நான்கு லட்சம் கள்ள நோட்டை வாங்கிவிட்டு பொருட்களை கொடுத்து ஏமாந்து போனதால் அதை சரி செய்வதற்காக மீனாவின் நகைகளை விற்றிருந்தார். ஆனால் திடீரென மீனாவும் முத்துவும் தன்னுடைய நகையை கேட்டதும் மனோஜ் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகையை வாங்கி வைத்திருந்தார்.
அந்த நகையை கொண்டு போய் நகைக்கடையில் கொடுத்த முத்து மற்றும் மீனாவை அவர்கள் போலீசில் பிடித்துக் கொடுக்க போயிருந்தனர். பிறகு உண்மையை முத்துவும் மீனாவும் புரிந்து கொண்டதும் முத்து இந்த விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்ல போறேன் என்று சொல்ல அதை மீனா தடுத்து இருந்தார். தியாகிப்போல மீனா செய்த செயல் எப்படியோ அவருக்குத்தான் ஆப்பாக வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
வழக்கம் போல இந்த பிரச்சனை இப்போது வெடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதில் விஜயா இவங்க தந்த நகையை தான் நான் கொடுத்தேன். மீனாவின் வீட்டில் தான் அப்போ கவரிங் நகைகளை கொடுத்திருப்பாங்க என்று மீனா மீது பழியை போட்டு விடுகிறார். இதில் முத்து உண்மையை கண்டுபிடிக்க போகிறாரா? அல்லது ஸ்ருதி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம் என்று சொல்லி இருக்கும் நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மறுபக்கத்தில் மீனாவின் தம்பி சத்யா மீது பழிவிழ அவர் முத்துவை பழிவாங்க வேண்டும் என்று அடுத்த பிரச்சனையை தொடங்க போகிறாரா? என்று பல்வேறு கோணத்திலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படியான நிலையில் மனோஜ் கம்ப்ளைன்ட் கொடுத்த போலீஸ்காரரோடு முத்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுபோல சில தினங்களுக்கு முன்பு சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்க்கு வந்த கே ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசியை சந்தித்தது குறித்து மனோஜ் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ முத்து பாட்டியின் பிறந்தநாளுக்கு கே ஆர் விஜயாவும், வடிவுக்கரசியையும்தான் அவருடைய தோழியாக கூட்டிட்டு வரப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஆனால் இன்றைய எபிசோடில் பாட்டியின் தோழிகளை முத்து கூட்டி வந்திருக்கிறார் ஆனால் அது கே.ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி இல்லை. இதனால் ரசிகர்கள் மேலும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் விஜயாவாக நடிக்கும் நடிகை அனிலா, வடிவுக்கரசி மற்றும் கே ஆர் விஜயாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இதனால் விஜயா தொடங்கி இருக்கும் பரதநாட்டிய கிளாசுக்கு இவர்கள் இருவரும் கெஸ்ட் ஆக வரப்போகிறார்களா? என்ற சந்தேகமும் வருகிறது. அதே நேரத்தில் விஜயா மீண்டும் பழையபடி சந்தோசமாக இருப்பதை பார்க்கும்போது கவரிங் நகை விஷயத்தில் விஜயா மாட்டியிருக்க மாட்டார் என்று தெரிகிறது. இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications