மதுரை பொண்ணு.. சிறகடிக்க ஆசை மீனவா இது? பிறந்தநாளில் போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் ரசிகர்களின் மனதை கவர்ந்த கோமதி பிரியா தன்னுடைய பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது அதிகமான லைக் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.
கோமதி பிரியாவின் சொந்த ஊர் மதுரை தான். ஆனால் சென்னைக்கு வேலைக்கு வந்து இடத்தில் மாடலிங் மூலமாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இப்போது நடிகையாக மாறி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களையும் தாண்டி இப்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறி இருக்கும் கோமதி பிரியா பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தில் தொடர்ச்சியாக பல மாதங்களாக இடம் பிடித்துக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்களுக்கு பேவரைட் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் ஒன்பது மணி எப்போது ஆகும் சிறகடிக்க ஆசை சீரியல் போடுவாங்களே என்று ஆர்வத்தோட காத்திருக்கும் பெருசுகள் முதல் பொடிசுகள் வரை ஏராளமானோர் தேடுவது மீனா தான்.
மீனா படபடன்னு பேசினாலும் வேலையில் இவளை மிஞ்ச யாரும் இல்லையே என்று சொல்ற மாதிரி தான் பலருடைய மனதை கவர்ந்து கொண்டிருக்கிறார். வீட்டு வேலையும் பார்த்து பூக்கடையும் பார்த்து போதாக்குறைக்கு விஜயா மாமியாரின் ஏச்சு பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு மீனா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுல வேணும்பா என்று சொல்ற மாதிரி கருத்து பேசுவதிலும், கணவனை மட்டும் அல்லாமல் குடும்பத்தையே உள்ளங்கையில் வைத்து தாங்குவதிலும் மீனாவுக்கு நிகர் மீனாதான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கூட இதே போல தான் இருந்து வருகிறாராம். கோமதி பிரியாவின் வீட்டில் இவர்தான் மூத்தவராம்.
அதுபோல படிப்பில் படு சுட்டுயாக இருந்த கோமதி பிரியா ஸ்காலர்ஷிப் உதவியோடு தான் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். பிறகு கல்லூரியில் படிக்கும்போதும் அங்கும் அவருக்கு கல்லூரி முதல்வர் ஸ்காலர்ஷிப் கொடுத்து படிக்க வைத்து சென்னையில் வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு மாடலிங் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வர இவரும் அங்கே போயிருக்கிறார்.

ஆனால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதும் இந்த பொண்ணு ரொம்ப அமைதியான பொண்ணா இருக்கே இவரெல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் கேள்வி கேட்க அதற்கு தன்னுடைய திறமையின் மூலமாகவே கோமதி பிரியா பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பிறந்த நாளில் கோவிலில் சாமி கும்பிட்டு வெளியே வந்து புடவையில் எளிமையாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications