அரசு பள்ளி மாணவி.. கடனால் ஏற்பட்ட பிரச்சனை.. சிறகடிக்க ஆசை கோமதியின் வாழ்க்கையில் நடந்த சோகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக மீனா கேரக்டரில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து பேசியது தான் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. மதுரையைச் சார்ந்த கோமதி பிரியா வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வந்திருக்கிறது. அதை எல்லாம் தாண்டி தான் இப்போது பலருக்கும் பிரபலமாக மாறி இருக்கிறார்.

பொதுவாக ஒரு பழமொழி உண்டு, கஷ்டப்படுகிறவன் எப்போதும் கஷ்டப்பட்டு கொண்டே இருக்க மாட்டான். அவனுடைய உழைப்பு உறுதியாக இருந்தால் அவனுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் கோமதி பிரியா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. கோமதி பிரியா இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பலருக்கும் பரிட்சயம் ஆகி இருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை பட்டு தான் இவ்வளவு முன்னேறி வந்திருக்கிறார்.

Television Siragadikka aasai serial vijay tv

சீரியலில் இவர் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக நடிக்கிறார். ஆனால் கோமதி பிரியாவின் வாழ்க்கையும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்திருக்கிறது. கோமதி பிரியா மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தான் படித்திருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரியான கோமதி பிரியா நன்றாக படித்துக் கொண்டு வந்திருக்கிறார். அப்போது அவருடைய அப்பா முதலில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து இருக்கிறார். அதில் கொஞ்சம் வருமானம் கிடைக்க தொடங்கியதும் தான் பல வருடங்களாக ஆசைப்பட்ட வீடு ஒன்றை கட்டி முடித்திருக்கிறார்.

கோமதி பிரியா நான்காம் வகுப்பு படிக்கும் போது அவர்களுக்கு புது வீடு கட்டி அவருடைய அப்பா கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு கொஞ்ச நாள் கழித்தது அவருடைய அப்பாவிற்கு சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. ஹோட்டல் பிசினஸ் செய்யலாம் என்று ஹோட்டல் வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் வராததால் ஹோட்டலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கடனும் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டதாம்.

Television Siragadikka aasai serial vijay tv

அதனால் பிரியாவின் அப்பா ஆசையாக கட்டிய வீட்டை விற்றுவிட்டு தன்னுடைய மகள் மற்றும் மனைவிக்காக வைத்திருந்த நகைகளையும் விற்று கடனை அடைத்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் கோமதி பிரியா பள்ளி படிப்பை முடித்தாராம். அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது கோமதி பிரியா வீட்டில் தினமும் செய்தி பேப்பர் படிப்பாராம். அப்போது செய்தித்தாளில் சென்னையில் ஒரு கல்லூரியில் பீஸ் இல்லாமல் படிக்கலாம் என்ற செய்தி கேள்விப்பட்டிருக்கிறார்.

அங்கிருந்தவர்களே பீஸ் கட்டி விடுவார்கள் என்று தெரிந்ததும் அதற்கு முயற்சி செய்திருக்கிறார். அந்த காலேஜில் கோமதி பிரியாவிற்கு சீட்டு கிடைத்துவிட்டது. அந்த காலேஜ் பிரின்சிபல் கோமதி பிரியாவிற்க்காக பல உதவிகளை செய்து இருக்கிறார். கோமதி பிரியாவின் குடும்பத்தின் நிலைமையை தெரிந்து படிப்புக்காக பல உதவி செய்து இருக்கிறார். கல்லூரி படிப்பை சென்னையில் படித்துக் கொண்டிருக்கும்போது பார்ட் டைம் ஆக ஏதாவது வேலை செய்யலாம் என்று முயற்சி செய்திருக்கிறார்.

Television Siragadikka aasai serial vijay tv

அதன் நேரத்தில் விஜய் டிவியில் சின்ன சின்ன கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக வேலை செய்ய இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் இவரும் நடித்து இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் எல்லாம் இவரை பார்த்து இவரும் முகத்தை பார்த்ததும் பாவமான பொண்ணு போல இருக்கிறது என்று பலர் பரிதாபப்படுவார்களாம். அதற்குப் பிறகு கல்லூரி படிப்பை முடித்ததும் இவருக்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது.

அப்போதும் வேலை பார்த்துக்கொண்டு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் கிடைக்கும் பணம் தனக்கு மேலும் உதவியாக இருக்கும் என்று இவர் இரண்டு வேலை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போதுதான் வேலைக்காரன், ஓவியா போன்ற சீரியலில் சின்ன சின்ன கேரக்டர் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு ஐடி வேலையை விட்டுவிட்டு இனி சினிமாவில் நாம் நடிக்கலாம் என்று தைரியமாக முடிவெடுத்து சினிமாவில் முழு நேரமாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

Television Siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் ஒரு சில தெலுங்கு சீரியல்களிலும் இவருக்கு வாய்ப்பு வர அதிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் மூலமாக இன்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கும் கோமதி பிரியா பொருளாதார ரீதியாகவும் இப்போது செட்டில் ஆகி இருக்கிறார்.

அதே நேரத்தில் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கையோடு தொடர்ந்து படிப்பையும் கவனித்து தன்னுடைய கனவையும் கோமதி பிரியா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+