சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 1 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் குடும்பத்திற்காக உருப்படியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். தான் இதுவரைக்கும் ரோகிணியால் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேச, அது விஜயாவிற்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை எபிசோடு ஆரம்பத்தில், அண்ணாமலை வீட்டுக்கு வந்த ஸ்வேதா, அந்த மகளிர் குழு பற்றி கேட்டு விசாரிக்க ஆரம்பிக்கிறார். பிறகு அவங்க நினைச்சாங்கன்னா நம்ம வீட்டு முன்னாடி ஒரு போராட்டம் நடத்துவாங்க அப்படி நடக்கும்போது போலீஸ் கூட வரும் அப்புறம் நியூஸ் சேனலில் எல்லாம் நம்ம குடும்பத்தை பத்தி பேசுவாங்க.. அது எவ்வளவு பெரிய விஷயமா மாறும் என்று சொல்லும்போது மனோஜ் ரொம்பவே பயப்படுகிறார். விஷயம் இவ்வளவு பெருசா போயிருச்சா என்று உள்ளுக்குள் பதட்டமாக இருக்கிறார்.
அதுக்குள்ளே ரோகிணி வீட்டு வாசலிலேயே நின்று போராட்டம் நடத்த ஆரம்பித்து விடுகிறார். ரோகினியுடன் மகளிர் மன்றத்தை சார்ந்த சிலரும் சேர்ந்து கோஷம் போட்டதால சூழ்நிலை மோசமா மாறுது. போலீஸும் வந்து விஜயாவை கைது பண்ணுறாங்கன்னு நிலைமை வருது. இதைப் பார்த்த மனோஜ் ரொம்பவே அதிர்ச்சி அடைந்து உடனே அந்த பெண் அதிகாரியை நேர்ல போய் பேசணும் என்று முடிவு பண்ணுறார்.
அடுத்ததாக முத்து, மீனா, மனோஜ் மூவரும் சேர்ந்து அந்த மகளிர் அதிகாரியை சந்திக்க போறாங்க. அங்கே போனதும், "ரோகிணியை அடிச்சு வெளியேற்றிய குடும்பம் நீங்கள்தானே?" என்று அதிகாரி நேரா கேக்கறாங்க. அதுக்கு முத்து அமைதியாக "இரு தரப்போட கதையும் கொஞ்சம் கேளுங்க மேடம்"என்று சொல்றார்.

மனோஜ் எமோஷனல்
அதுக்கப்புறம் மனோஜ்க்கு வாய்ப்பு கிடைக்குது. முத்து முன்பே சொல்லி கொடுத்த மாதிரி, மனோஜ் முழு கதையையும் செண்டிமெண்டாக எமோஷனலுடன் பேச ஆரம்பிக்கிறான். பேசும்போதே கண்கலங்கிடுறார். அதை பார்த்த அந்த அதிகாரியும் அவர் சொல்றதை நம்ப ஆரம்பிக்கிறாங்க. உடனே "இவ்வளவு பொய் சொல்லிட்டாளா?" என்று ரோகிணி மேல் கோபப்படுறாங்க.
அந்த நேரத்துல ரோகிணி அங்கே வருகிறார். வந்த உடனே அந்த அதிகாரி அவளை சரமாரியாக திட்டி, "இனிமேல் உனக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்" என்று சொல்லி அனுப்பிடுறாங்க. நீ சொன்ன கதைகள் எல்லாம் இப்போதான் புரியுது என்று கடுமையா பேசுறாங்க. மீனாவும் அதே மாதிரி கோபத்துல "உன்னை கடவுள் சும்மா விடமாட்டார்" என்று சொல்லி அனுப்புகிறார்.
இதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து நடந்ததை முத்து, மீனா எல்லாருக்கும் சொல்லுறாங்க. அண்ணாமலை முத்துவை பாராட்டுறார். மனோஜிடம் "இனிமேலாவது ரோகிணி பக்கம் போகாதே, இன்னும் மோசமா ஏதாவது பண்ணுவா, நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று எச்சரிக்கை கொடுக்கிறார்.

ரோகிணி சபதம்
இன்னொரு பக்கம் ரோகிணி வீட்டில் தனியா உட்கார்ந்து எல்லா பிளானும் கெட்டுப்போச்சு என்று புலம்பிக்கிட்டு இருக்கிறார். அவளோட அம்மா வந்து என்னாச்சு என்று கேட்கும்போது, "இந்த முத்து, மீனா இருக்கிற வர நான் நல்லா இருக்க முடியாது" என்று கோபத்துல சொல்கிறார்.
- மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக..மதுரை போட்டியிடாத ’சிகப்பு சட்டை’ தோழர்கள்! என்னாச்சு?
- திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளுநர் ஷாநவாஸ்!
- ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார்
- யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி?
- தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம்
அதை கேட்ட அவளோட அம்மாவும் வருத்தமாக "நாளுக்கு நாள் பிரச்சனை பெருசா போயிட்டு இருக்கு, அந்த வீட்டுல உன்னை யாரும் ஏத்துக்க மாட்டாங்க போல" என்று சொல்கிறார். அதை கேட்டதும் ரோகிணி ரொம்ப கடுப்பா, "அவங்க யாரு என்ன ஏத்துக்க? நான் அந்த வீட்டோட மருமகள் தான், மனோஜ் என் கணவர்... இதை யாராலும் மாற்ற முடியாது" என்று சபதம் எடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
மொத்தத்தில் இன்று எபிசோடு ரோகிணிக்கு பெரிய செட் பாக்காக இருந்தாலும், அவர் மனோஜ் குடும்பத்தை இன்னும் விடாமல் பிடிக்க போற மாதிரி கிளைமாக்ஸ் வச்சு முடிஞ்சது.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!













Click it and Unblock the Notifications