சிறகடிக்க ஆசை: மனோஜ்க்காக ரோகிணி செய்த செயல்.. ஆடிப்போன சிந்தாமணி! அண்ணாமலை கொடுத்த லெட்டர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 30, 2026 episode ) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 30ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜை ஜெயிலிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரோகிணி யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலை செய்து இருக்கிறார். அதே நேரத்தில் சிந்தாமணியின் நாடகமும் மீனாவால் முடிவுக்கு வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial today episode) ஆரம்பத்தில் ரோகிணி பைனான்சியரிடம் மனோஜ்க்காக கெஞ்சி அழுது கொண்டிருக்கிறார். எனக்கு சிந்தாமணி நல்லாவே தெரியும் நீங்க வேணும்னா அவங்க கிட்ட பேசி பாருங்க என்று சொல்லி அழுது கொண்டிருக்கும் போது பைனான்சியர் சிந்தாமணிக்கு போன் பண்ணி ரோகிணி வந்த விஷயத்தை பற்றி சொல்கிறார்.
அதற்கு சிந்தாமணி நீங்க கேஸை வாபஸ் வாங்க வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக வரும். ஆனால் இதை நமக்கு சாதகமாக பயன்படுத்தி ரோகிணியிடம் இருந்து 10 லட்சம் பணம் வாங்கிக்கோங்க, அந்த பணத்தை தந்தால் தான் நான் கேஸை வாபஸ் வாங்குவேன்னு சொல்லுங்க. அவ எப்படியாவது கொண்டு வருவா என்று சொல்கிறார்.

உடனே வட்டிக்காரர் ரோகிணியிடம் வந்து கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் 10 லட்சம் கொடுங்க, அதற்குப் பிறகு யோசிக்கிறேன் என்று சொல்லி விடுகிறார். மறுபக்கத்தில் அண்ணாமலையும் விஜயாவும் வீட்டில் யோசித்தபடி இருக்கிறார்கள். அப்போது முத்துவும் மீனாவும் வீட்டிற்குள் வர விஜயா போன காரியம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

முத்துவின் ஐடியா
அப்போது மீனா ஒரு ஐடியா இருக்கு. அதாவது இந்த சங்கத்தில் இருக்கும் பெண்களுக்கு சிந்தாமணி அதிகமா வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களை மிரட்டி இருக்காங்க... அதனால அவங்களை கம்ப்ளைன்ட் பண்ண சொல்லி சொன்னா சிந்தாமணி மனோஜ் மீது பைனான்சியர் கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லுவாங்க என்று சொன்னதும் விஜயா வழக்கம் போல இதெல்லாம் நடக்கவா போகுது.. என் பையனை எப்படித்தான் கொண்டுட்டு வர போறீங்களோ தெரியல. உங்களை நம்புனதுக்கு நான் சும்மாவே இருந்திருக்கலாம் என்று திட்டிக்கொண்டு இருக்கிறார்.
பீல் பண்ணும் அண்ணாமலை
அப்போது அண்ணாமலையிடம் முத்து நீங்க ஒரு லெட்டர் கொடுக்கணும்பா மனோஜ் கையெழுத்து போட்டதால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல நீங்க எழுதி கொடுக்கணும். அப்படின்னா தான் பெயில் கிடைக்கும்னு வக்கீல் சொல்றாங்க என்று சொன்னதும் அண்ணாமலை மனம் நொந்து பேசிய படி கையெழுத்தை போட்டுக் கொடுக்கிறார். அடுத்ததாக பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி தன்னுடைய முதல் கணவரின் குடும்பத்திடம் போய் பணம் கேட்கிறார்.
அதற்கு அவர்கள் என் தம்பிக்கு வர வேண்டிய சொத்தை நாங்க கிரிஷ் பெயரில் மாற்றிக் கொடுக்கிறோம். ஆனால் இப்போதைக்கு எங்களால 10 லட்சம் தர முடியாது, வேணும்னா அஞ்சு லட்சம் கொடுக்கிறோம் என்று சொன்னதும் ரோகிணி சரி என்று சொல்லி அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சிந்தாமணியை வந்து பார்க்கிறார்.

மீனா கொடுக்கும் கம்ப்ளைன்ட்
இதற்கிடையே மீனா முத்துவின் கார் செட்க்கு தன்னுடன் பூக்கட்டும் பிரண்ட்ஸ் எல்லாரையும் வர வைத்து இருக்கிறார். அங்கு வட்டி அதிகமாக வசூலிப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எல்லோரும் சிந்தாமணியிடம் தான் எங்க வீட்டு பத்திரமே இருக்கு நாங்க வட்டி மட்டும் தான் அவங்களுக்கு கொடுத்துட்டு இருக்கோம் அவங்க ரொம்ப மிரட்டுறாங்க என் சொல்ல, உடனே மீனா இதையெல்லாம் எழுதி போலீசில் கம்ப்ளைன்டா கொடுப்போம் என்று கம்ப்ளைன்ட் எழுதிக் கொண்டிருக்கிறார்.
சிந்தாமணியின் பிளான்
இந்த விஷயம் சிந்தாமணிக்கு அவருடைய ஆட்கள் மூலமாக தெரிகிறது. அந்த நேரத்தில் சிந்தாமணியை பார்ப்பதற்காக பணத்துடன் ரோகிணியும் வந்து நிற்கிறார். உடனே சிந்தாமணி பைனான்ஸியருக்கு போன் செய்து நீ ஸ்டேஷனுக்கு போய் ரோகிணிக்காக கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லு என்று சொல்லிக் கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications