ஸ்ருதியிடம் மீனா கேட்ட கேள்வி.. குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த சத்யா.. முத்துக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் முத்துவும் மீனாவும் ஸ்ருதி மற்றும் ரவியை மீண்டும் வீட்டிற்கு வர வைக்க வேண்டும் என்று அவர்களை நேரடியாக சந்தித்து பேசுகின்றனர். அதே நேரத்தில் மேலும் சில சுவாரசியமான காட்சிகளும் இன்று நடந்தது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதி டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் மீனா அவரை பார்க்க வந்திருப்பதாக சவுண்ட் இன்ஜினியர் போன் போட்டு சொல்கிறார். பிறகு வெளியே வந்த ஸ்ருதியிடம் மீனா கண்ணீரோடு நீங்க ஏன் வீட்டுக்கு வர மாட்டேங்கறீங்க என்று கேட்க, அதற்கு ஸ்ருதி ஏன் என்று உங்களுக்கு தெரியாதா? என்று திருப்பி கேட்கிறார்.

உங்க ஹஸ்பண்ட் என் அப்பாவை அடிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினையே இல்லை என்று சொல்ல, அதற்கு மீனா அவர் அடிச்சது தப்புதான். அதை நான் நியாயப்படுத்த விரும்பல, ஆனா உங்க அப்பா என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினார் தெரியுமா? என்று கேட்க, அதற்கு ஸ்ருதி நீங்க செயினை எடுத்து பார்த்ததை தப்பா புரிந்து இருப்பாரு, அதை நீங்க எடுத்து சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும் என்று சொல்ல, மீனா அங்கு என்ன நடந்தது என்பதை எல்லாவற்றையும் சொல்கிறார்.
அதோடு உங்க அப்பா காலில் விழுந்து கூட நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி உங்க ஹஸ்பண்ட் பண்ணின தப்புக்கு நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்று கேட்க, அதற்கு மீனா என்னாலதான அவர் அடிச்சாரு. அதனால நானே மன்னிப்பு கேட்கிறேன். நீங்க நம்ம வீட்டுக்கு வரணும் மாமா ரொம்ப ஆசைப்படுறாரு நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு தான் அவர் நினைத்துக்கொண்டு இருக்கிறார். நல்ல முடிவா எடுங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

மறுபக்கத்தில் முத்து ரவியை சந்தித்து என் வீட்டுக்கு வர மாட்டேங்குற? மாமியார் வீட்டுக்கு போனா வந்தமான்னு இருக்கணும். அங்கேயே தங்கிட்டியா? என்று கேட்க, அதற்கு ரவி நான் மாமியார் வீட்டில் இல்லை என்று சொல்ல, அப்போ நீ எங்க இருக்க என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது ரவியோட வேலை செய்பவர் இவன் இங்கேதான் வேலை பாக்குறவங்கக்கூட தங்கிக்கிறான், ஏற்கனவே அஞ்சு பேரு ஒரு சின்ன ரூமில் தங்ககியிருக்கோம். அவங்க கூட இவனும் தங்கிக்கிறான்.
எங்களுக்கு இடமே போதவில்லை என்று சொல்ல, அதை கேட்டு முத்து ஃபீல் பண்ணுகிறார். அதற்கு முத்து உனக்கு வீடு இருக்கு நீ எதுக்கு வெளியே தங்கனும்? நீ வீட்டுக்கு வாடா உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா என்று சொல்ல, அதற்கு ரவி ஸ்ருதி வராம நான் அங்க வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு முத்து அப்பா நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாரு. அதுக்காக வீட்டுக்கு வா... நீ யோசித்து முடிவு எடு என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார்.
அடுத்த கட்டத்தில் மீனா தன்னுடைய வீட்டில் நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு சத்யா உன் வீட்டுக்காரர் என்ன பெரிய ரவுடியா எல்லாரையும் போட்டு அடிக்கிறார். அவர் பண்ணின தப்பு தானே அவர் போய் மன்னிப்பு கேட்கணும். அப்போ தான் ஸ்ருதி உங்க வீட்டுக்கு வருவாங்க என்று சொல்லி தரக்குறைவாக பேசுகிறார். அதற்கு மீனாவின் அம்மா இத்தனை பிரச்சனைக்கு காரணமே நீதான்.
நீ அவர் பைக்கை திருடுனதை சொல்லி தானே இப்ப வரைக்கும் மீனாவை அசிங்கப்படுத்துறாங்க அந்த வீட்டில.. என்று திட்ட அதற்கு சத்தியா பணம் இல்லாம தான் அந்த வீட்டில் அசிங்கப்படுத்துறாங்க.. ஏன் யாரும் தப்பே பண்ணலையா? நான் இந்த ஒரு தப்பு தானே பண்ணுனேன். அதுக்காக இப்ப வரைக்கும் அதை சொல்லிக்கிட்டே இருப்பாங்களா? நம்மகிட்டயும் பணம் இருந்தா இவங்க இதெல்லாம் சொல்ல மாட்டாங்க.
நானும் சீக்கிரமா பணம் சம்பாதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து கோபமாக கிளம்பி போக, மீனா, அம்மா, தங்கச்சி எல்லாருமே இவனுடைய நடவடிக்கை சரியில்லை என்று புலம்பி கொண்டிருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் டப்பிங் பேசி முடித்ததும் பசிக்குது என்று ஸ்ருதி ரவி வேலை பார்க்கும் ரெஸ்டாரண்டுக்கு போன் போட்டு சிக்கன் ப்ரைட் ரைஸ், சிக்கன் லாலிபாப் என்று ஆர்டர் செய்கிறார். அதைக் கேட்டு ரவியின் நண்பன் ரவியிடம் உன்னை பத்தி ஸ்ருதி எதுவுமே விசாரிக்கல என்று சொல்ல ரவி பீல் பண்ணுகிறார். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications