சிறகடிக்க ஆசை: மனோஜ் கேட்ட கேள்வி.. ரோகிணி மீது சந்தேகப்படும் விஜயா.. முத்து உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் போட்டியில் முத்துவும் மீனாவும் ஜெயித்திருந்த நிலையில் அண்ணாமலையிடம் ரோகிணி மற்றும் மனோஜ் பற்றி முத்து சொன்ன வார்த்தையை கேட்டு விஜயாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வருகிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிறந்த ஜோடியாக முத்து மீனா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேள தாளத்தோடு வீட்டிற்கு வந்ததை பார்த்ததும் விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். அண்ணாமலை இந்த உலகத்திலேயே நீங்க ரெண்டு பேரும் தான் சரியான கணவன் மனைவி. நீங்கதான் ஒருத்தரை ஒருத்தர் நன்றாக புரிஞ்சு வச்சிருக்கீங்க என்று நான் சொன்னேன். அதுதான் இப்போ நிரூபணம் ஆகிறது என்று சொல்ல முத்து தன்னுடைய நண்பர்களோடு டான்ஸ் ஆடுகிறார்.

Television Siragadikka aasai serial vijay tv

ஸ்ருதியும் ரவியும் அவர்களோடு வெஸ்டர்ன் வாசிங்க என்று சொல்லி டான்ஸ் ஆட இதையெல்லாம் பார்த்து விஜயா கடுப்பாகிறார். பிறகு விஜயா இவர்களுக்கு ஆரத்தி எடுக்கக் கூடாது என்று நைசாக கிளப்ப பார்க்க அண்ணாமலை விஜயாவை நிறுத்தி ஆரத்தி எடுக்க சொல்ல, விஜயா ஸ்ருதியை ஆரத்தி எடுக்க சொல்ல அதற்கு ஸ்ருதி நீங்க எடுத்தா தான் நல்லா இருக்கும் என்று சொல்கிறார். அதோடு மீனாவின் அம்மாவையும் கூப்பிட்டு ஆரத்தி எடுக்க சொல்ல விஜயா கோபத்தில் இருக்கிறார்.

பிறகு நீங்க ஏன் ஜெயிக்கவில்லை என்று மனோஜ் ரோகிணியிடம் விஜயா கேட்க, அவர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். அப்போது மனோஜ் அங்க கேள்வி கேட்டவங்களுக்கு சரியா கேள்வி கேட்க தெரியல. அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை பற்றி கேள்வி கேட்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவும் மீனாவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த விஜயா பழமொழி செய்து இவர்களை நக்கல் செய்கிறார்.

Television Siragadikka aasai serial vijay tv

அதற்கு முத்து நாங்கள் இவ்வளவு நாளா வாழ்ந்த வாழ்க்கைக்கு எங்களுக்கு சர்டிபிகேட் கிடைச்சிருச்சு இது போதும் என்று சொல்கிறார். பிறகு அண்ணாமலையிடம் நான் இவ்வளவு காசு ஒரே நாளில் சம்பாதித்தது இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க இது உங்கள் நேர்மைக்கான பரிசு என்று அண்ணாமலை சொல்கிறார். நான் இதில் ஜெயிக்க அதற்கு காரணம் மீனா மட்டும்தான். மீனாதான் தூங்காமல் என்ன கேட்பார்கள் என்று யோசித்துப் பேசிக் கொண்டிருந்தோம் என்று முத்து சொல்ல, விஜயா ரோகிணியிடம் நைட்டெல்லாம் நீங்க எதுவும் ரெடி ஆகலையா என்று கேட்க தூங்கிவிட்டோம் என்று ரோகினி சொன்னதும் நல்ல தூங்குங்க என்று விஜயா கோபப்படுகிறார்.

படிப்பறவு இல்லாதவர்களுக்கும் பொருத்தம் இல்லாதவர்களுக்கும் தான் இந்த பரிசை கொடுக்கிறார்கள் என்று நக்கலாக மனோஜ் பேச, முத்து படிப்பு தேவையில்லை மனசு பொருந்தி இருந்தால் போதும் என்று சொல்கிறார். அண்ணாமலையிடம் தான் வாங்கிட்டு வந்த பணத்தை கொடுத்து சந்தோஷப்படுகிறார். அதோடு அண்ணாமலை இடம் பேசிக் கொண்டிருக்கும்போது மீனா அங்கு வந்து நடுவர்கள் புருஷன் பொண்டாட்டின்னா சண்டை வரணும் அப்படி வரலனா... பொண்டாட்டி புருஷன்கிட்டயும், புருஷன் பொண்டாட்டிகிட்டயும் எதையோ மறைக்கிறாங்கன்னு அர்த்தம் என்று சொன்னாங்க என்று சொல்ல ரோகிணி இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து கிளம்பி கிச்சனுக்குள் சென்று விடுகிறார் .

Television Siragadikka aasai serial vijay tv

அங்கு சென்ற விஜயா நீ எதுவும் மனோஜிடம் மறைக்கிறியா? நீங்க நல்ல புருஷன் பொண்டாட்டியா தான் இருக்கீங்களா? என்று கேட்க, அதற்கு ரோகிணி அங்க அவங்க இங்கிலீஷ்ல சொன்னாங்க இவங்க பாதியை தான் சொல்றாங்க என்று சமாளிக்கிறார். ஆனால் விஜயாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வருகிறது. பிறகு மனோஜும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் நாமதான் சிறந்த ஜோடி. நீ என் வாழ்க்கையில் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய கிப்ட் என்னுடைய பாஸ்ட் லைஃப் தெரிஞ்சு நீ என்னை ஏற்றுக் கொண்டதை நான் லைப்ல மறக்கவே மாட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+