சிறகடிக்க ஆசை: சிட்டியால் மீண்டும் சத்யாவோடு மோதும் முத்து.. ரோகிணி ரகசியம் அம்பலமாகுமா? முக்கிய திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 17 தேதி ஆம் வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருககிறது. அதில் சிட்டியோடு சுற்றிக் கொண்டிருக்கும் சத்யாவிடம் நேருக்கு நேராக முத்து மீண்டும் மோதுகிறார். இதனால் இனி முத்துவிற்கு அடுத்த பிரச்சனை வர இருக்கிறது என்று தெரிகிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. முத்துவும் மீனாவும் தம்பதிகளுக்கான போட்டியில் முதல் பரிசை பெற்று இருக்கின்றனர். இதனால் விஜயா கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் தம்பதிகளுக்குள் சண்டைகள் வரவேண்டும் அப்படி சண்டைகள் வரவில்லை என்றால் புருஷன் பொண்டாட்டியிடமும், பொண்டாட்டி புருஷனிடமும் எதையோ மறைத்து கொண்டிருக்கிறார்கள் என்று போட்டியில் நடுவர்கள் சொன்னதை முத்து வீட்டில் சொன்னதை கேட்டு விஜயாவிற்க்கு ரோகினி மீது சந்தேகம் வந்திருக்கிறது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ரோகிணி மனோஜை ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு கூப்பிட்டு இருந்த நிலையில் அப்போதும் விஜயா ரோகிணியின் பழைய வாழ்க்கையை தோண்ட தொடங்கி இருந்தார். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் முத்துவும் மீனாவும் தாங்கள் ஜெயித்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல மனோஜ் மற்றும் ரோகிணி பேசிக்கொண்டிருக்கையில் நான் இதுவரைக்கும் எந்த விஷயத்தையும் உன்னிடம் மறைத்ததே இல்லை ஆனால் நீ... என்று மனோஜ் ரோகிணியிடம் கேட்க, ரோகிணி அப்போ நான் எதையாவது மறைச்சிருக்கேனா என்று நீ கேட்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். அதுபோல ஸ்ருதி மற்றும் ரவி இடையே குழந்தை விஷயத்தில் மீண்டும் சண்டை வந்திருக்கின்றது.

இந்த நிலையில் முத்து சவாரிக்கு போயிருந்த நிலையில் அங்கு கஸ்டமர் அவருடைய பேக்கை காரில் வைத்துவிட்டு போய்விடுகிறார். அப்போது அந்த வீட்டிற்கு முத்து பேக்கை கொண்டு போகும்போது அங்கு சிட்டி முத்துவின் கஸ்டமரிடம் 50,000 கொடு எனக்கு நிறைய வீட்டுக்கு போக வேணும் வேலை இருக்கு என்று மிரட்டி கொண்டு இருக்க அப்போது அங்கு வந்து முத்து ஏன் நிறைய வீட்டில் போய் பிச்சை எடுக்க போறியா என்று சிட்டியை போட்டு அடித்து விரட்டி இருக்கிறார்.
அதோடு சிட்டியோடு இருந்த சத்யாவிடம் நான் மீண்டும் சொல்றேன் நீ இவன் கூட சுத்திக்கிட்டு இருக்காத. இவனால உனக்கு பெரிய பிரச்சனை வரப்போகுது என்று சொல்ல அதற்கு சத்தியா அதை நானே பார்த்துக்கொள்கிறேன் உங்க அட்வைஸ் எனக்கு தேவை இல்லை என்று திமிராக பேசுகிறார். இதனால் அடுத்ததாக சத்யாவிற்கு ஏதாவது பிரச்சனை வருவது போன்று தான் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி ஏதாவது தப்பு செய்துவிட்டு அதில் சத்யாவை சிக்க வைப்பாராக இருக்கும். அப்போது முத்து வந்து சத்யாவை காப்பாற்றுவார், அதற்கு பிறகு தான் சத்தியா முழுமையாக முத்துவை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோகிணி சிட்டி இடம் கடன் மேல் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் விஷயம் சத்யாவிற்கு தெரியும் நிலையில் சத்தியா திருந்திய பிறகு ரோகிணி பற்றி வீட்டில் போட்டுக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி பார்த்தால் சத்யாவிற்கு பிரச்சனை வந்தால் அடுத்து ரோகிணிக்கும் பிரச்சனைதான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications