சிறகடிக்க ஆசை: மனோஜ் வாங்கி வந்த பரிசு.. அதிர்ச்சியில் விஜயா.. காலில் விழுந்த ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 16ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவும், மீனாவும் தாங்கள் ஜெயித்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனோஜ் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜூம் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது என்னோட பெஸ்ட் வைஃப் நீ தான், நாம தான் பெஸ்ட் கப்பிள்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் வேற பொண்ணோட லிவிங் ல இருந்தேன்னு தெரிஞ்சும் என்னை ஏத்துக்கிட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டே.. இப்போ நான் பிசினஸ்மேனாக இருக்க நீ தான் காரணம்.

Siragadikka aasai serial

நமக்குள்ள சண்டையே வரல என்பதுக்காக நமக்குள்ள ஏதோ சொல்லாம மறைச்சிருக்கோம்னு சொல்றாங்க. அப்படி எல்லாம் இல்ல, நான் எதுவும் உன்கிட்ட மறைக்கல ஆனா நீ... என்று சொல்ல, ரோகிணி அப்போ நான் எதுவும் மறைக்கிறேனானு கேட்கிறாயா என்று கேட்க, இல்லை நீ என்னிடம் எதுவுமே மறைக்க மாட்ட என்று எனக்கு தெரியும் என்று மனோஜ் சொல்ல ரோகிணி குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.

மறுபக்கத்தில் ஸ்ருதியும் ரவியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நாம பேசிக்கிட்டதை நீ அப்படியே மறந்துட்ட நான் எனக்கு குழந்தை பெத்துக்கறதுல விருப்பம் இல்லைன்னு சொன்னேன். ஆனா நீ மூணு குழந்தை பெத்துக்கலாம்னு சொல்ற. நான் குழந்தை பெத்துக்கிற மெஷினா? கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டா நீ சொன்னதெல்லாம் கேட்பேன்னு நினைச்சியா? என்று சண்டை போட, ரவி சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial

மற்றொரு பக்கத்தில் மீனாவும் முத்துவும் தாங்கள் புதியதாக வாங்கிய கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயா தண்ணி எடுப்பதற்காக வர அவரை பார்த்ததும் முத்து பாட்டு பாடி மீனாவுடன் டான்ஸ் ஆட விஜயா கோபத்தில் ஓடிவிடுகிறார். பிறகு ரூம் கட்டுவது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் பார்த்து விடலாம் என்று சொல்கின்றனர்.

அடுத்த நாள் காலையில் முத்து மேஸ்திரியை கூட்டிட்டு வந்து வீடு கட்டுவது தொடர்பாக பேசனும் என்கிட்ட பேசிக் கொண்டிருக்க, இதையெல்லாம் விஜயா ஒட்டு கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததும் நமக்கு ரூம் கட்டுவதற்கு பணம் இல்லைன்னா அம்மாவோட நகையை அடகு வைத்துவிடலாம் என்று முத்து சொல்ல அதைக் கேட்டு விஜயா ஓடி விடுகிறார்.

Siragadikka aasai serial

பிறகு அடுத்த நாள் காலையில் முத்து சொன்னது போல ஒரு மேஸ்திரியை கூட்டிட்டு வந்து இடத்தை பார்க்க அவர் 4 லட்சம் செலவாகும் என்று இருக்கிற ஒரு லட்சம் பணத்தை வைத்து ஆரம்பித்தால் அப்புறம் அப்படியே வேலை இருந்து விடும் அதனால் இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிச்சுட்டு அப்புறமா வீடு கட்ட தொடங்குங்கள் என்று அவர் சொன்னதும் முத்துவும் மீனாவும் வருத்தப்படுகின்றனர். அந்த நேரத்தில் மனோஜ் ரோகிணிக்கு தாலி செயின் வாங்கிட்டு வருகிறார்.

அதை பார்த்து ரோகிணி இன்ப அதிர்ச்சி அடைகிறார். அப்போது வழக்கம் போல விஜயா முத்துவை குத்தி காட்டி பேசுகிறார். சிலர் சபதம் எல்லாம் போட்டாங்க ஆனா தாலி சரடு கூட அவங்களால வாங்க முடியல ஆனா என் மகன் மனோஜ் சொன்னது மாதிரியே ரோகிணிக்கு செயின் வாங்கிட்டு வந்துட்டான் என்று சொல்ல ரோகிணி கழுத்தில் தாலியை கட்டி விடுங்கம்மா என்று மனோஜ் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுக்க, விஜய்யா பதறிப் போகிறார்.

Siragadikka aasai serial

பிறகு சாமி முன்பு வைத்து மனோஜ் ரோகினிக்கு தாலி கட்ட ரோகிணியும் மனோஜூம் விஜயா மற்றும் அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். தொடர்ந்து மனோஜும் விஜயாவும் முத்துவை குத்தி காட்டுவது போல பேச அதற்கு மீனா என்னுடைய புருஷன் சொன்ன சபதம் எல்லாம் செய்து முடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா என்ன சொன்னார் என்பது பற்றி எபிசோடில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+