சிறகடிக்க ஆசை: மன்னிப்பு கேட்ட மீனா அம்மா.. கோபத்தில் முத்து இப்படி பேசிட்டாரே.. விஜயா செய்த சதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து சத்யாவிற்காக கோவிலுக்கு போகக்கூடாது என்று சொன்னதையும் மீறி மீனா கோவிலுக்கு போயிருக்கிறார். அதை வைத்து விஜயா புது ப்ளான் போடுகிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா வருத்தமாக இருப்பதை பார்த்து ஸ்ருதி நீங்க கோவிலுக்கு போங்க முத்து வேலைக்கு போயிட்டு இரவு தானே வீட்டுக்கு வருவாரு. அதற்குள் நீங்க வந்துருங்க, இப்போ அவர் பேச்சை கேட்டு நீங்க கோயிலுக்கு போகாமல் இருந்தீங்கன்னா இவருக்காக நீங்க உங்க சொந்தங்கள் எல்லாவற்றையும் இழக்க வேண்டியது இருக்கும். அவர் நீங்க சொன்னதை எல்லாம் அப்படியேவா செய்றாரு?

Siragadikka aasai serial

அவருக்கு பிடித்ததை தானே அவர் செய்றாரு. நீங்க மட்டும் எதற்காக அவருக்காக உங்க குடும்பத்தை விட்டுக் கொடுக்கணும் என்று சொல்லி மீனாவின் மனதை மாற்றி கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார். இதை பார்த்த விஜயா அப்போ ஒரு பிரச்சனை இருக்கு என்று சந்தோஷப்படுகிறார். கோவிலில் மீனாவின் அம்மா மீனா வரவில்லையே என்று வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கும்போது மீனா அங்கு வர எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

Siragadikka aasai serial

பிறகு மீனா சத்யாவிற்கு வாழ்த்து சொல்லி கூழ் காய்ச்ச தொடங்குகின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த முத்து மீனா மீனா என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க விஜயா நீ டேங்க் மேல ஏறி கத்தினாலும் மீனா வரமாட்டா என்று நக்கல் செய்கிறார். அவ உன் பேச்சையும் மீறி கோயிலுக்கு போய் இருக்கா என்று சொல்ல, அதை முத்து நம்ப மறுக்கிறார். அதற்கு விஜயா நீ கோபப்பட்டு என்கிட்ட எதுக்கு கத்துற? பொய் கோவில்ல பாரு உன் பொண்டாட்டி உனக்கு இங்க உன் காதுல பூவை சுத்திட்டு அங்க அவ தம்பிக்காக கூழ் ஊத்த போய் இருக்கா.

அவளை பார்த்தா தான் உனக்கு அவளோட அருமை புரியும் என்று சொல்ல, முத்து கோபமாக கிளம்பி கோவிலுக்கு போகிறார். அங்கு கோயிலில் மீனா எல்லோருக்கும் கூழ் ஊத்திக் கொண்டிருக்கும் போது முத்து கையில் கூழ் வாங்கி தம்பி பாசமா புருஷன் பாசமா என்று எனக்கு இருந்த சந்தேகம் இப்போது தெரிந்து விட்டது. நான் இவ்வளவு சொல்லியும் நீ இங்க வந்து இருக்க என்று கோபமாக பேசிவிட்டு கிளம்புகிறார்.

Siragadikka aasai serial

மீனாவின் அம்மா மாப்பிள நாங்க ஏதாவது தப்பு பண்ணி இருந்தா எங்களை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்டும் முத்து மதிக்காமல் கிளம்பி போய்க்கொண்டே இருக்கிறார். பிறகு மீனா வீட்டிற்கு வந்து அண்ணாமலை இடம் கூழ் குடிக்க கொடுக்கிறார். விஜயாவிடம் கொடுக்க விஜயா நக்கலாக பேசுகிறார். பிறகு மீனாவிடம் முத்து வீட்டிற்கு வந்தது பற்றியும் தான் முத்துவிடம் ஏற்றிவிட்டது குறித்தும் சொல்ல மீனா நீங்க தான் அந்த நல்ல விஷயத்தை பண்ணிடீங்களா? ரொம்ப நல்லது என்று சொல்லிவிட்டு முத்துவுக்காக காத்திருக்கிறார்.

Siragadikka aasai serial

பிறகு முத்து இரவு நான் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது நீங்க தான் இப்போ கொஞ்ச நாளா குடிக்கவே இல்லையே எதுக்காக இன்னைக்கு குடிச்சீங்க என்று மீனா பிரச்சனை செய்ய, என் பொண்டாட்டி என் பேச்சை மீறி நடக்க மாட்டா என்று நினைத்து இருந்தேன் ஆனால் நீ உனக்கு நான் இரண்டாம் பட்சம் தான் என்று காட்டிவிட்ட.... உன் தம்பிக்காக என்னை தூக்கி எறிஞ்சிட்டியே அவனை பத்தி தெரியும் போது தான் உனக்கு என்னோட அருமை புரியும் என்று புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+