சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு காலில் விழுந்த அடி.. மீனாவை பாராட்டும் குடும்பத்தினர்.. மனம் மாறிய முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவை முத்து புரிந்து கொள்ள, மீனாவும் முத்துவும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். அதை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு காலில் அடி விழுகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவின் மனதை மாற்றுவதற்காக மீனா சிக்கன் குழம்பு வைத்து அசத்துகிறார். அந்த நேரம் பார்த்து விஜயா தூங்கி எழுந்து சிக்கன் குழம்பு வாசம் வருகிறது என்று வெளியே வந்து ஸ்ருதியிடம் நீதான் குழம்பு வாங்கிட்டு வந்தியா என்று கேட்க, ஸ்ருதி இல்ல கிச்சனில் இருந்து தான் வருது மீனாதான் சமைச்சு இருப்பாங்க என்று சொல்ல, இரண்டு பேரும் போய் பார்க்கின்றனர்.

Television Siragadikka aasai serial vijay tv

மீனாவின் சிக்கன் குழம்பு ருசியை பார்த்து ஸ்ருதி புகழ்ந்து தள்ளுகிறார். விஜயா குறை சொல்ல, விஜயாவை ஆப் செய்து விடுகிறார். பிறகு ஒவ்வொருவராக வந்து சிக்கன் குழம்பு பற்றி பாராட்டி பேச, விஜயா கடுப்பாகிறார். எல்லாரும் அள்ளி அள்ளி வைத்து சாப்பிடுங்கள் என்று விஜயா கோபமாக சொல்ல ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளாமல் சாப்பாட்டை ருசித்து சாப்பிட மீனாவிற்கே சாப்பாடு எதுவும் இல்லாமல் ஆகிவிட ஸ்ருதி உங்களுக்கு சாப்பாடு ஏதாவது ஆர்டர் செய்யவா என்று கேட்க, அதற்கு வேண்டாம் சட்னி இருக்கு அதை வைத்து சாப்பிட்டு விடுகிறேன் என்று மீனா சொல்லி விடுகிறார்.

அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து மீனாவிடம் அல்வாவை கொடுத்து, அக்கா தம்பி பாசத்தை பிரிக்கிறதுக்கு நான் யாரு. இப்பதான் எல்லாம் புரியுது. எனக்கு சத்யாவை பிடிக்காது என்றெல்லாம் இல்லை அவனோட சேர்க்க சரியில்ல அதனாலதான் அவன் மீது எனக்கு கோபம் வருது என்று பேச, இதை எல்லாம் விஜயா கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு பசிக்குது சாப்பிடலாம் என்று கிச்சனுக்கு வர அந்த நேரம் வந்த ரவி இன்னைக்கு அண்ணி சிக்கன் குழம்பு சூப்பரா வச்சிருந்தாங்க சாரிடா எல்லாமே காலி ஆயிடுச்சு என்று சொல்கிறார்.

அதற்கு ரவி என்னடா சொல்றீங்க ஒரு பொட்டு கூட வைக்காமல் இப்படி காலி பண்ணி இருக்கீங்களே என்று முத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கும்போது மீனா இருங்க என்று சென்று உள்ளே சென்று சிக்கன் குழம்பு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து முத்து சந்தோஷப்படுகிறார். நான் உங்களுக்காக அப்பவே தனியா எடுத்து வச்சுட்டேன் என்று சொல்ல, சிக்கன் குழம்பு ஊற்றி முத்து சாப்பிட மீனா அல்வாவை எடுத்துக்கொண்டு விஜயாவிடம் சென்று நீங்கள் அல்வாவ கேட்டீங்களே எடுத்துக்கோங்க என்று சொல்ல விஜயா கோபமாக உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு மனோஜ் நடந்து வந்து கொண்டிருக்கும் போது முத்து போட்டு இருக்கும் கட்டிலில் கால் தடுக்கி விழ காலில் அடிபட்டு விடுகிறது. அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த பார்வதி யாரு இப்படி கட்டிலை நடுவழியில் போட்டு வச்சிருக்காங்க? இப்படி கட்டில் போட்டு வச்சா எப்படி நடக்க முடியும் என்று கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து என்னாச்சு என்று விசாரிக்க, மனோஜ் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது இதற்கு காரணம் அந்த கட்டில் தான்.

என்னைக்கோ கட்ட போற வீட்டுக்கு இப்பவே யாராவது கட்டில் வாங்கிக் கொண்டு வந்து போடுவாங்களா? என்று விஜய் அவரும் திட்ட, அதற்கு முத்து அப்படித்தான் போடுவோம் கண்ணை வைத்து ஒழுங்காக பார்த்து நடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு மனோஜ்க்கு அடிபட்ட காலிலேயே மீண்டும் மிதித்து விட்டு சென்று விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+