சிறகடிக்க ஆசை: கையில் குழந்தை.. முத்து பகிர்ந்த சந்தோஷம்.. விஜயா கேட்ட கேள்வி.. அதிர்ச்சியில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து தான் கையில் ஒரு குழந்தையை வாங்கிய தருணத்தை பற்றி வீட்டில் சொல்ல விஜயா எதிர்பார்க்காத கேள்வியை கேட்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே இன்றைய எபிசோட்டில் ரோகிணி இரண்டாவது குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் விஷயம் மீனா மற்றும் சீதாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இதை கேட்டு மீனா அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த விஷயத்தை பற்றி மீனா இனி வீட்டில் சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம் போல இதையும் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வைக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே ஒருமுறை ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லி வீட்டில் மீனா வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த முறை ரோகிணிக்கு இது இரண்டாவது குழந்தை என்ற விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைப்பதற்காக தான் அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் முத்துவிடம் ரோகிணி பற்றி சொன்னால் முத்து உண்மைகளை தோண்ட தொடங்குவார்.
ஏற்கனவே ரோகிணியின் மீது முத்துவிற்கு அதிகமான சந்தேகம் இருக்கும் நிலையில் இனி குழந்தை விஷயத்தை வைத்து முத்து உண்மைகளை கண்டுபிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து சவாரிக்கு போயிருந்த நிலையில் அங்கு பிறந்த குழந்தையை முத்துவின் கையில் கொடுத்ததால் அந்த மகிழ்ச்சியை வீட்டில் வந்து பகிர்கிறார்.
அந்த குழந்தையை கையில் வாங்கிய போது அந்த குழந்தை மெல்ல மெல்ல கண் திறந்து என்னை பார்த்தது. அந்த குழந்தைக்கு நெற்றியில் நான் ஒரு முத்தம் கொடுத்தபோது உடம்பில் பால் வாசம் வீசியது அதை என்னால் மறக்க முடியாது.. சந்தோஷமா இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு விஜயா இதையெல்லாம் கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த வீட்டில் ஒரு குழந்தை சத்தம் கேட்கிறதுக்கு இன்னும் வழி இல்லையே என்று கோபப்படுகிறார்.
ஏற்கனவே ரோகிணி மற்றும் மனோஜ் இனிப்பு கொண்டு வந்து விஜயாவிடம் கொடுக்க விஜயா ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். ஆனால் ரோகிணி பிசினஸில் தங்களுக்கு லாபம் கிடைத்ததாக சொல்ல, அதற்கே விஜயா கோபத்தில் இருக்கும் நிலையில் இப்போது முத்து குழந்தை பற்றி சொன்ன வார்த்தையை கேட்டு மேலும் கோபப்படுகிறார்.
அதே நேரத்தில் விஜயா கோபப்படுவதை பார்க்கும் போது அடுத்ததாக இந்த வீட்டில் மூன்று பேரில் யாராவது ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications