சிறகடிக்க ஆசை: ஸ்ருதியால் விஜயாவிற்கு விழுந்த அடி.. மீனா கொடுத்த அதிர்ச்சி.. முத்து சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஸ்ருதி செய்த செயலால் மனோஜ் மற்றும் விஜயா விற்கு செம அடி கிடைக்கிறது. அதே நேரத்தில் ரோகிணியின் பேச்சைக் கேட்டு மீனாவோடு சேர்த்து ஸ்ருதி மீதும் விஜயா கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதி பேய் போல பேசி மனோஜ் மற்றும் விஜயாவை கதற விடுகிறார். இது என்னுடைய வீடு எங்க வீட்டை விட்டு வெளியே போங்க என்று ஸ்ருதி மிரட்டியதும், ரூம் கதவை திறந்து வெளியே வந்து பார்த்து விஜயா மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்குப் பிறகு இவர்களை பார்த்ததும் ஸ்ருதி மீனாவை இழுத்துக் கொண்டு ஒளிந்து விடுகிறார்.

அதற்குப் பிறகும் தொடர்ந்து ஸ்ருதி பயம் காட்டிக் கொண்டிருக்க விஜயா ரொம்பவே பயந்து விடுகிறார். இதனால் மீனா லைட்டை போட்டு விஜயாவிற்கு தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறார். மீனாவை பார்த்ததும் இது எல்லாம் உன்னோட வேலை தானா? என்று மீனாவை விஜயா திட்ட, ஸ்ருதி இது எல்லாம் நான்தான் பண்ணுனேன். உங்களுக்கு பயம் இல்லைன்னு சொன்னீங்களே அதனால் தான் இப்படி பண்ணுனேன் என்று சொல்கிறார்.

அதற்கு மனோஜ் மற்றும் விஜயா இருவரும் மீனாவையும் ஸ்ருதியையும் திட்டி விடுகின்றனர். மறுநாள் காலையில் முத்து சவாரிக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும் மீனாவிடம் காசை கொடுத்து உண்டியலில் போட சொல்கிறார். இரவெல்லாம் கண்விழித்து கார் ஓட்டியதால் கண்கள் எரிவதாக முத்து சொல்ல, மீனா அவருக்கு எண்ணெய் சூடாக்கி கொண்டு வருகிறார். இன்னொரு பக்கத்தில் ரவிக்கு ஸ்ருதி டி-ஷர்ட் ஒன்று வாங்கி வைத்திருக்க அந்த டி-ஷர்ட் அதே கலரில் என்கிட்ட இருக்கிறது என்று ரவி சொன்னதால் ஸ்ருதி கோபத்தில் வேகமாக வெளியே வர முத்து எண்ணெய்யோடு வரும்போது அவர் மீது மோதிவிடுகிறார்.
எண்ணை தவறி கீழே சிந்தி விடுகிறது. அப்போது தான் இதை கிளீன் பண்ணுவதாக ஸ்ருதி சொல்ல, வேண்டாம் நீங்க போங்க நான் கிளீன் பண்ணுறேன் என்று மீனா உள்ளே செல்ல, அந்த நேரத்தில் விஜயா வந்து வழுக்கி செல்ல அவரை பிடிக்க சென்ற மீனாவும் வழுக்கி விழுகிறார். இதனால் மீனாவும் விஜயாவும் கீழே விழுந்து எடுக்க, எல்லோரும் ஓடி வந்து விடுகிறார்கள்.

முத்து விஜயாவை தூக்க முயற்சி செய்ய, விஜயா முத்து கையை தட்டி விடுகிறார். அதோடு மீனா தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக அவர் மீது குற்றம் சாட்ட அதற்கு ஸ்ருதி என்னால்தான் எண்ணை தட்டி கீழே விழுந்தது என்று சொல்ல, அதை விஜயா நம்பவில்லை. மனோஜ் அதற்கு நேற்று இப்படித்தான் பேய் காட்டி பயம் காட்டினார்கள் என்று சொல்ல விஜயா மீனாவை திட்டுகிறார்.

அதற்கு ஸ்ருதி வந்து நான் தான் சொன்னேனே, எல்லாம் செய்தது நான் என்று.. பிறகு ஏன் மீண்டும் மீண்டும் மீனாவை திட்டனுமா? என்று குரலை உயர்த்தி கத்தி பேச அதை கேட்டு விஜயா, ரோகிணி, மனோஜ் எல்லோரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். மீனா சொல்லிக் கொடுத்துதான் ஸ்ருதி இப்படி எல்லாம் பேசுறாங்க என்று ரோகிணி விஜயா விற்கு ஏத்தி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications