சிறகடிக்க ஆசை: அண்ணாமலை குடும்பத்தை உடைக்க நடக்கும் சதி.. முத்து எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வீட்டு மொட்டை மாடியில் டெண்ட் அமைத்து தங்க அதனால் வீட்டிற்குள் கலவரம் ஏற்படுகிறது.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ருதியின் அம்மா பிளான் போடுகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரூமுக்குள் வந்த ரவி ஸ்ருதியிடம் ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எனக்கு உன் கூட இருக்கணும் அவ்வளவு தான் நான் இப்போ சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று ஸ்ருதி சொல்லி ரவியை சமாதானம் செய்கிறார். அதைத் தொடர்ந்து முத்து அப்பா ஹாலில் படுத்து தூங்குகிறார், நான் மட்டும் இப்போ ரூமுக்குள் இருக்கிறோம் என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க அதற்கு மீனா நீங்க ரூமை பூட்டாம இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது.
நீங்கள் தான் ரூமை பூட்டியதும், கட்டிலை கொடுத்ததும் நீங்கதான். ஆனா எல்லாரும் நீங்க செஞ்ச கெட்டதை மட்டும் தான் சொல்லுவாங்க என்று எடுத்து சொல்ல அதற்கு முத்து எனக்கு அடுத்தவங்களை பற்றி கவலை கிடையாது என்று சொல்கிறார். அதற்கு மீனா நீங்க கோபத்தையும் குடியையும் விட்டால் மகான் மாதிரி வாழலாம் என்று அட்வைஸ் செய்ய அதற்கு முத்து நான் நல்ல மனுசனாவே இருந்துட்டு போறேன் என்று பதில் கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து ரவி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி மொட்டை மாடியில் டெண்ட் ரெடி பண்ணி ரவியை எழுப்பி வா அங்க போய் தூங்கலாம் என்று மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நாம இங்கேதான் இன்றைக்கு தூங்கப் போறோம் என்று இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு இருவரும் ரொமான்ஸாக பேசி விட்டு அங்கேயே தூங்கி விடுகின்றனர்.
அடுத்த நாள் காலையில் விஜயா எழுந்து ரூமை பார்க்க அங்கே ஸ்ருதி மற்றும் ரவி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் மொட்டை மாடிக்கு ஒர்க்அவுட் பண்ண வந்த மனோஜ் அங்கு டெண்ட் போட்டு இருப்பதை பார்த்து திருடர்கள் வந்துவிட்டதாக பயந்து கீழே ஓடிவிடுகிறார். கீழே வந்து எல்லோரிடம் மேலே மொட்டை மாடியில் திருடர்கள் டெண்ட் போட்டு இருக்காங்க என்று சொல்ல எல்லோரும் ஆளுக்கு ஒரு ஆயுதமாக எடுத்து அவர்களை அடிக்கப்போகின்றனர்.

அப்போது டெண்ட்க்குள் இருந்து ஸ்ருதியும் ரவியும் வெளியே தலைகாட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அண்ணாமலை உங்களுக்கு தான் ரூம் கொடுத்து இருக்கே எதுக்காக இங்க வந்து படுத்து தூங்கினீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு ஸ்ருதி நான் புதுசா டெண்ட் வாங்குனேன். அதுல படுத்து தூங்க போறேன்னு பிக்ஸ் பண்ணிட்டேன். அப்படி நடக்கலைன்னா இன்னைக்கு எனக்கு தூக்கமே வராது என்று சொல்கிறார்.
இதனால் அண்ணாமலை என்னதான் இந்த பொண்ணு என்று சலித்துக் கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து ரவி இடம் விஜயா திட்டுகிறார் ஸ்ருதிக்கு நீயாவது எடுத்து சொல்லு, இந்த மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தா முத்து இதை வச்சு பெரிய பிரச்சனை பண்ணவான் என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஸ்ருதி டெண்ட் கழட்டி கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா போன் செய்ய, டெண்ட் போட்டு தூங்குணோம் அதை கழட்டிட்டு இருக்கேன் என்று சொல்ல, நடந்த விஷயத்தை முழுசா கேட்காமல் உனக்கு ரூம் கூட கொடுக்கலையா? அந்த அண்ணாமலையே நான் என்ன பண்ண போறேன் பாரு என்று கோபமாக ஸ்ருதியின் அம்மா போனை வைக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications