ரோகினியை சந்தேகப்படும் அண்ணாமலை.. மனோஜ்க்கு கிடைத்த அதிர்ச்சி.. முத்து எடுத்த முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

அதில் மனோஜ் வேலை பார்க்க பார்க்கிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஷோரூமுக்கு ஸ்ருதி மற்றும் ரவி சென்று மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் ரோகினியின் அப்பா இதுவரைக்கும் வரவில்லையே என்று ரோகினி மீது அண்ணாமலை சந்தேகப்படுகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

siragadikka aasai serial December 27th episode Annamalai suspects Rohini

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மீனா கிச்சனில் எல்லா வேலைகளையும் செய்து அசதியாக இருக்க அந்த நேரத்தில் அங்கு வரும் முத்து எல்லா வேலைகளையும் நீதான் பண்ணிட்டு இருக்கியா? அவங்க எல்லாரும் சாப்பிட்ட தட்ட கூட கழுவி வைக்க மாட்டாங்களா என்று கோபப்பட, அதற்கு மீனா நீங்க அமைதியாக இருங்க நான் பாத்துக்குறேன் என்று சமாதானம் செய்கிறார்.

siragadikka aasai serial December 27th episode Annamalai suspects Rohini

பிறகு உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று மீனா கேட்க, அதற்கு முத்து நான் வெளியே சாப்பிட்டு விட்டேன். எனக்கு சுடுதண்ணி மட்டும் வச்சு கொடு என்று சொல்ல, சரி என்று முத்துவை அனுப்பி வைத்துவிட்டு பாத்திரமெல்லாம் கழுவி வைத்து விட்டு சுடுதண்ணி எடுத்துக் கொண்டு ரூமிற்கு செல்ல அப்போது நீ என்ன சமைச்ச நீ என்ன சாப்பிட்ட என்று முத்து மீனா விடம் கேட்கிறார்.

அதற்கு வீட்டில் ஒவ்வொருவருக்கும் என்னவெல்லாம் சமைத்தேன் என்று சொல்ல, அதை கேட்டு கோபமான முத்து "நீ உனக்கு என்ன பண்ணுன" என்று மீண்டும் கேட்க, "வேலை பண்ணினேன்" என்று மீனா சொல்லிவிட்டு காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும் டயர்டா இருக்கு என்று படுத்து விடுகிறேன் என்று சொல்லி படுத்து விடுகிறார். அதற்கு முத்து நீ இப்படி அவங்க என்ன சொன்னாலும் மறுக்காமல் வேலை செஞ்சுகிட்டு இருந்தா ஒன்னு இந்த வீட்டு வேலைக்காரி ஆகிடுவாங்க.

siragadikka aasai serial December 27th episode Annamalai suspects Rohini

அப்பாகிட்ட பேசி முதல்ல வேலைக்கு ஒரு ஆள் வைக்கணும் என்று கூறுகிறார். அடுத்ததாக ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் மனோஜ் வேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறேன் என்று சொன்ன ஷோரூம்க்கு கார் வாங்க போகின்றனர். அங்கு மனோஜ் என்று யாருமே வேலை செய்யவில்லை என்று அங்கு இருந்தவர்கள் சொல்கின்றனர்.

இதனால் ரவி மனோஜ்க்கு ஃபோன் பண்ணி ஷோரூமில் இருக்கும் விஷயத்தை சொல்லி அங்கு நடந்ததையும் சொல்கின்றார். அதை கேட்டு அதிர்ச்சியான மனோஜ் பிறகு அப்படி யார் சொன்னது போனை அவங்ககிட்ட கொடு என்று சொல்ல ரவியும் வேலை செய்பவர்களிடம் ஃபோனை கொடுக்க அவரிடம் மனோஜ் இங்கிலீஷில் பேசி பில்டப் கொடுத்து அவரை மிரள வைக்கிறார்.

siragadikka aasai serial December 27th episode Annamalai suspects Rohini

அதைத் தொடர்ந்து ரவியிடம் அடுத்த வாரம் புது கார் வருது அப்போ வாங்கிக்கோ என்று சமாளித்து அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த மனோஜ் விஜயாவிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு விஜயா சீக்கிரம் ஒரு வேலைக்கு போடா என்று திட்டுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி வந்து என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

அதற்கு விஜயா ஆஃபீஸில் நடந்த கதைய சொல்லிட்டு இருந்தான் என்று சமாளிக்கிறார். பிறகு ரவி மற்றும் இவ்வளவு நாளா ஒரு விஷயத்தை மறைத்துவிட்டான் என்று சொல்ல, மனோஜ் பதறி என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு ரவி அவனுக்கு ஆபீஸ்ல அப்படி ஒரு மரியாதை இருக்கு என்று பெருமையாக சொல்கிறார். அதைக் கேட்டு ஸ்ருதி அவருக்கு இருக்கிற திறமைக்கு தனியா ஒரு ஷோரூம் வைக்கலாம் என்று பில்டப் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

siragadikka aasai serial December 27th episode Annamalai suspects Rohini

அதற்கு விஜயா ஆமா ரோகினி ஓட அப்பா வந்தால் இவன் திறமையை பார்த்து தனியாக வைத்துக் கொடுத்து விடுவார் என்று கூறுகிறார். அப்போது வீட்டுக்கு வரும் முத்து என்ன உங்க அப்பா இன்னும் இந்த பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்க அதற்கு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அதற்கு அண்ணாமலை எனக்கும் இந்த சந்தேகம் அடிக்கடி வருகிறது. கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சு இன்னும் உங்க அப்பா வரவே இல்ல. ஒரு போன் கூட பேசல என்று கேட்க ரோகினி ஷாக் ஆகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+