விஜயா, ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த பாட்டி.. கலங்கி நின்ற முத்து.. அண்ணாமலை சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் முத்துவின் பாட்டி வீட்டு மருமகள்களிடம் யார் முதலில் குழந்தை பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு தன்னுடைய சொத்தை எழுதி வைக்கப் போவதாக கூறி இருக்கிறார்.

அதுபோல விஜயா மற்றும் ரோகினிக்கு பாட்டி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December 30th episode grandmother shocked Rohini

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் பாட்டி எல்லோருக்கும் தான் வாங்கி வந்த பொருளை கொடுத்துக் கொண்டிருக்க அப்போது விஜயா எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா அத்தை என்று கேட்க அதற்கு பாட்டி நீ என் பிள்ளையை ஒழுங்கா பார்த்து இருந்தா உனக்கு பட்டுப்புடவையே வாங்கி கொடுத்திருப்பேன் ஆனால் நீதான் அவனை சரியா பாத்துக்கலையே என்று திட்டுகிறார்.

அதை தொடர்ந்து மனோஜ் எங்களுக்கு எதுவும் இல்லையா என்று கேட்க அதற்கு நான் என்ன வெளிநாட்டில் இருந்தா வந்து இருக்கிறேன். நானே என் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டதும் பதறி அடித்துக் கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்து எங்கே என்று கேட்க அதற்கு மீனா அவர் உங்க கிட்ட பேச மாட்டேன்னு ரூம்ல இருக்காரு என்று சொன்னதும் அவனை எப்படி வெளியே கொண்டு வரணும் என்பது எனக்கு தெரியும்.

நீ அந்த கதவை மட்டும் திறந்துவிடு என்று சொல்ல, அதே போலவே மீனாவும் செய்கிறார். உடனே பாட்டி முத்துவுக்கு தெரிகிற மாதிரி எல்லோருக்கும் சீம்பாலை எடுத்து கொடுக்க அதை பார்த்து முத்து வெளியே ஓடி வருகிறார். பிறகு முத்துவிடம் இனிமே நீ எதுவும் என்கிட்ட மறக்கக்கூடாது என்று சொல்ல, அதற்கு முத்து அப்பா தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

siragadikka aasai serial December 30th episode grandmother shocked Rohini

அதனால் தான் சொல்லல இனிமே எதையும் மறைக்க மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு மீனா சாப்பாடு ரெடியா எல்லாரையும் சாப்பிட வர சொல்லிட்டியா என்று விஜயா கேட்க அதற்கு அண்ணாமலை ஏன் அதையும் நீ செய்ய மாட்டியா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா உங்க அம்மா தான் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க, நீங்களும் திட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? என்று கோபப்படுகிறார்.

கூடவே இந்த மீனாதான் எல்லாத்தையும் பத்த வைத்திருக்கிறா என்று சொல்ல, அதற்கு மீனா பாட்டி போன் பண்ணி ரவிக்கு பொண்ணு பார்த்த விஷயத்தையும், பிறகு பாட்டி அவமானப்படக்கூடாது என்பதற்காக தான் நான் அப்படி சொன்னேன் என்று காரணத்தை சொல்ல, அதற்கு பாட்டி நீ நல்ல மருமகளா நடந்துக்கல. ஆனா மீனா நடந்துகிட்டா, அவகிட்ட இருந்து கத்துக்கோ என்று திட்டுகிறார்.

பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார பாட்டி மீனவையும் உட்கார சொல்கிறார். அதற்கு விஜயா எல்லாரும் ஒண்ணா உக்கார்ந்து சாப்பிடனும்னா சேர் போதாது என்று சொல்ல, அதற்கு எல்லாரும் ஒண்ணா உட்காந்து தான் சாப்பிடணும் வேற சேர் எடுத்துப் போடு என்று சொல்லி மொத்த பேரும் ஒன்றாக சாப்பிடுகின்றனர். அப்போது பாட்டி எனக்கு மூணு பேர புள்ளைங்க மூணு பேத்திகள் எல்லோருடனும் இருக்கிறது சந்தோஷமா இருக்கிறது.

siragadikka aasai serial December 30th episode grandmother shocked Rohini

இப்படியே எல்லோரும் சீக்கிரம் குழந்தையும் பெத்து கொடுங்க, யார் முதல்ல நல்ல விஷயம் சொல்றீங்களோ அவங்களுக்கு நம்ம பரம்பரை சொத்தை எழுதி தருவேன் என்று சொல்ல, விஜயா ஷாக் ஆகிறார். பிறகு பாட்டி எல்லாரையும் பொங்கலுக்கு ஊருக்கு வரணும் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

siragadikka aasai serial December 30th episode grandmother shocked Rohini

கூடவே அண்ணாமலை நீ மலேசியாவில் பிறந்த பொண்ணு இதெல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்ல. ஊர்ல பொங்கல் செலிப்ரேஷன் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொல்ல, ஆமாம் அங்கிள் எனக்கும் அதெல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருக்கு என்று ரோகிணி சமாளிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+