Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணியை ரவுண்டு கட்டிய விஜயா.. முத்து கேட்ட கேள்வியில் அதிர்ச்சியான மீனா! உண்மை வெளிவருமா?

Subscribe to Oneindia Tamil
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 8ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு விஜயாவால் புது பிரச்சனை வருகிறது. அதோடு வழக்கம் போல மீனா உளறிய வார்த்தையை ரோகிணி பிடித்துக் கொள்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிரிஷை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிளான் போடுவதற்காக மீண்டும் பார்வதி வீட்டிற்கு விஜயா ரோகினையை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அங்கு வந்த சிந்தாமணியும் சேர்ந்து அந்த பையனை எப்படியாவது வெளியேத்தணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது இதைக் கேட்டு கடுப்பான பார்வதி திட்டிவிட்டு போகிறார்.
பிறகு விஜயா ரோகிணியிடம் இனி நீ கிரிஷ் கூட பேசவே கூடாது, அந்த பையன் கதவை தட்டுனா திறக்க கூடாது. நீ கதவை பூட்டி வச்சுக்கோ என்று சொல்ல, ரோகிணி பயத்தோடு சரி ஆன்டடி என்று சொல்கிறார்.
பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது சிந்தாமணி அந்தப் பையனோட அம்மா கல்யாணி விபத்துல இறந்துட்டாங்கன்னு சொல்லுறாங்க, அப்போ அந்த பையனை பிரிய முடியாம ஆவியா கிரிஷ் உடம்பில் ஏறி இருக்குமோ? என்று கேட்டதும் விஜயா பயப்படுகிறார்.
ஆனாலும் அந்த பையன் கிட்ட பேசக்கூடாது என்று விஜயா கண்டிஷன் போடுகிறார். அடுத்ததாக ரோகிணி தன்னுடைய தோழிகளை சந்தித்து மீனாவிடம் சிக்கி கொள்வதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்த மீனா வேற எப்ப வீட்டுல சொல்ல போறான்னு தெரியல.. அவளுக்கு தெரியாம இருந்திருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்ல, அதற்கு வித்யா அவங்களுக்கு தெரிஞ்சதால தான் நீ இப்ப வரைக்கும் அந்த வீட்டுல இருக்க இல்லன்னா உன் நிலைமையே வேற மாதிரி ஆகி இருக்கும் என்று சப்போர்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கு வந்த மீனா கிரிஷ் விஷயத்தில் என்னதான் பண்ண போற என்று ரோகிணியிடம் கேட்க, என்ன செய்வது என்றே தெரியவில்லை மீனா ஆன்ட்டி ஒரு பக்கம் சிந்தாமணியோட சேர்ந்து திட்டம் போடுறாங்க, ஆவி அது இதுன்னு சிந்தாமணி விஜயாவை பயமுறுத்துறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மீனா அந்த சிந்தாமணி அப்படித்தான் நல்லவேளை என் மேல ஆவி போயிடுச்சுன்னு சொல்லாம போனாங்களே என்று பெருமூச்சு விடுகிறார்.
இதை பாயிண்டாக பிடித்துக் கொண்ட ரோகிணி கிரிஷை வீட்டில் ஏற்றுக் கொள்ள புது திட்டம் போடுகிறார். அதற்கு மீனா நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ தயவுசெய்து உண்மையை சீக்கிரமா சொல்லிடு என்று சொல்கிறார். பிறகு வீட்டில் ரவி ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரவி கோவா செல்வதற்கு பெர்மிஷன் வாங்குகிறார். ஆனாலும் நீத்து இல்லை யார் வந்தாலும் நம்ம நம்பிக்கையை உடைக்க முடியாது, நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்கிறார்.
இதை அடுத்து வீட்டிற்கு வந்த முத்து நீயா நானாவில் கணவன் மனைவியாக கலந்து கொள்ள வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதன் தலைப்பு "கணவன் மனைவிக்குள் ரகசியம் இருப்பது சரி, தவறு” என்றும் தலைப்பை சொல்கிறார். நாம் சரி என்ற தலைப்பில் பேசலாம், இந்த தலைப்பில் ஆட்கள் கிடைப்பதே கஷ்டமாக இருப்பதாக நண்பர் சொன்னதாக முத்து மீனாவிடம் சொன்னார்.
உடனே மீனா ரோகிணி சம்பவத்தை மறைப்பதால் பதற்றம் அடைந்து வேண்டாம் வேண்டாம் என்று சொல்கிறார். இதை பார்த்து முத்து உனக்கு ஏன் வேர்க்குது என்று கேட்கிறார். இதனால் உண்மையை சொல்ல முடியாமல் மீனா குற்ற உணர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+