சத்யாவை பற்றி தெரிந்ததும் முத்து செய்த செயல்.. கதறி அழுத மீனா.. பாட்டி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயாவிடம் இருந்து பணத்தை திருடிட்டு போனது சத்யா தான் என்று உண்மை முத்துவிற்கு தெரிய வந்திருக்கிறது.
அதே நேரத்தில் முத்துவிற்கும் சத்யாவிற்கும் நடந்த சண்டையில் முத்து சத்யாவை அடித்து விடுகிறார். அதனால் மருத்துவமனையில் சேர்ந்து இருக்கிறார். ஆனால் உண்மை தெரியாத மீனா முத்துவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலையும் மீனாவும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது போன் அடிக்கிறது என்று மீனா போனை எடுத்துப் பார்க்க அங்கு முத்துவின் பாட்டி பேசுகிறார். அவரிடம் மீனா பேசிவிட்டு இருக்கும்போது அங்கு வரும் முத்துவிடம் போனை கொடுத்துவிட்டு மீனா கிச்சன் வேலை சமையல் வேலையை பார்க்க போய் விடுகிறார்.
அப்போது முத்து பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை மருத்துவமனைக்கு சென்ற விஷயத்தை பற்றி உளறிவிடுகிறார். பிறகு சாதாரண செக்கப் தான் என்று சமாளித்து விடுகிறார். அதாவது முத்து கல்யாணம் பண்ணிய புகைப்படங்களை அனுப்பியது குறித்து பாட்டி பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.
பிறகு நாம எல்லாம் பொங்கல் பங்ஷனுக்கு எடுத்த புகைப்படத்தை பெருசாக வீட்டில் பிரேம் போட்டு வை என்று சொல்ல அதற்கு அங்கு வரும் விஜயா இங்கே ஏற்கனவே போட்டோவ நிறைஞ்சிருக்கு இதுல அந்த போட்டோ எல்லாம் அவ்வளவு பெருசா எல்லாம் வைக்க முடியாது என்று சொல்ல அதற்கு அண்ணாமலை அதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் அதுதான் இந்த வீட்டில் பெருசா இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து முத்து தன்னுடைய திருமண போட்டோக்களை பிரிண்ட் போடுவதற்காக ஒரு ஸ்டுடியோவிற்கு போகிறார். அங்கு அந்த போட்டோவில் விஜயா இருப்பதை பார்த்த ஸ்டூடியோகாரன் இது யாரு என்று முத்துவுடன் கேட்டு அதற்கு முத்து என்னுடைய அம்மா தான் என்று சொல்ல, இந்த அம்மாவிடமிருந்து பணத்த ரெண்டு பேரு புடிங்கிட்டு போனாங்க அந்த சிசிடிவி புட்டேஜ் என்கிட்ட இருக்கு என்று வீடியோவை காட்டுகிறார்.
அதில் சத்யா அவருடைய நண்பன் சிட்டியோடு சேர்ந்து விஜயாவிடம் இருந்து பணத்தை பிடிங்கிட்டு போவதை பார்த்ததும் முத்து அதிர்ச்சி ஆகிறார். பிறகு ஸ்டுடியோக்காரரிடம் இந்த வீடியோவை டெலிட் செய்தது யாருக்கும் கொடுக்காத என்று சொல்லிவிட்டு மீனாவின் அம்மா வீட்டுக்கு போகிறார். அங்கு சத்யா எங்கே என்று விசாரிக்க அதற்கு அவர் அம்மா சத்தியா முன்ன மாதிரி இல்ல இப்ப ரொம்ப திருந்திட்டான்.
நல்லபடியா காலேஜுக்கு போயிட்டு இருக்கான் என்று சொல்ல அவர்களிடமும் எந்த உண்மையையும் சொல்லாமல் முத்து அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார். பிறகு காலேஜுக்கு போய் சத்யாவை அவருடைய நண்பர்களுடன் விசாரிக்க அவர்கள் இப்ப இரண்டு மூன்று மாதமாக சத்யா ஒழுங்கா காலேஜுக்கு வருவது கிடையாது. அவன் சிட்டி என்கிற ஒரு பிரண்டோட தான் சுத்திட்டு அலையுறான் என்று அவருடைய நண்பர்கள் சொல்லிக் கொடுக்க முத்து அங்கிருந்து கிளம்புகிறார்.

மறுபக்கத்தில் சிட்டி மற்றும் அவருடைய ஆட்களோடு சக்தியாகவும் வந்து செல்வம் பணம் கட்டாததால் செல்வத்தை மிரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் முத்து என்னுடைய நண்பனை அடிப்பியா என்று சிட்டியை போட்டு அடிக்கிறார். கூடவே சத்யாவும் வந்து தடுக்க சத்தியாவையும் முத்து அடிக்க இருவருக்கும் கைகலப்பு ஆகிறது.

அப்போது சத்யா பிரண்டு மேல கைய வச்சா மச்சானு கூட பார்க்க மாட்டேன் என்று சொல்ல சத்யா முத்துவை அடிக்க, அதற்கு முத்து சத்யாவை போட்டு அடித்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான வீடியோவில் சத்யா மருத்துவமனையில் இருக்க மீனா முத்துவுக்கு போன் பண்ணி சத்யா பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டான் மருத்துவமனையில் சேர்த்து இருக்கோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications