முத்து மீது மீனா கம்ப்ளைன்ட்! அவமானப்படுத்திய ஸ்ருதி.. அண்ணாமலை எடுத்த முடிவு.. உடைந்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். அதில் முத்து தான் சத்யாவை அடித்து இருக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் மீனா கோபப்பட்டு அண்ணாமலையிடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். அதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது.

அதே நேரத்தில் வீட்டில் எல்லோரும் முத்துவை அசிங்கப்படுத்த அதற்கு முத்து உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December February 17th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா சத்யாவிடம் என்ன நடந்துச்சு என்ற உண்மையை சொல்லு என்று மிரட்ட அதற்கு சத்தியா ஆமா நான் சிட்டி கிட்ட தான் வேலை பார்க்கிறேன். அவர் வட்டிக்கு பணம் கொடுத்து இருக்கான் அதை நான் கம்ப்யூட்டர்ல என்ட்ரி பண்றேன். அப்போ மாமா ஃப்ரெண்ட் செல்வம் சிட்டியிடம் கடன் வாங்கி இருந்தாரு. அதுக்கான பணத்தை நான் வாங்க போயிருந்த போது மாமா என்னை அடிச்சிட்டாரு.

siragadikka aasai serial December February 17th episode full update

அப்போ அவரு குடிச்சிருந்தாரு என்று பொய் சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர் அப்போது சீதா அவர் திருந்தவே மாட்டாரா? அவர் எல்லாம் என்ன மனுஷன் என்று சொல்ல அதற்கு மீனாவில் அம்மாவும் அவரை போய் நான் புள்ள மாதிரி பார்த்தேன் ஆனால் அவர் என்ன வேலை பண்ணியிருக்காரு என்று புலம்ப அதை கேட்டு மீனா கோபமாக அங்கிருந்து கிளம்பி முத்துவின் கார் செட்டுக்கு போகிறார்.

siragadikka aasai serial December February 17th episode full update

அங்கு செல்வத்திடம் நீங்க ஏன் அண்ணே என்கிட்ட உண்மைய சொல்லல. சின்ன பையன் சத்தியா அவனை எதுக்கு அடிச்சிங்க என்று கேட்க அங்கிருந்த முத்து வெளிய வந்து உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, அதற்கு மீனா நீங்க எதுக்கு என் தம்பியை அடிச்சீங்க என்று கோபப்படுகிறார். அப்போது செல்வம் உண்மையை சொல்லவர, முத்து தடுத்து நிறுத்த அதற்கு மீனா நான் என் புருஷன் கிட்ட பேசிட்டு இருக்கேன் யாரும் இடையில் வரவேண்டாம் என்று செல்வத்தை அமைதியாக இருக்க சொல்கிறார்.

அதற்கு முத்து அதான் சொல்லிட்டால்லா நீ தூரமா போ என்று அனுப்பி வைக்கிறார். பிறகு மீனா கேட்கும் கேள்விகளுக்கு முத்து திமிராக பதில் சொல்லிக் கொண்டிருக்க அதனால் கோபமான மீனா இனிமே உங்க கிட்ட பேசவே முடியாது, திருத்தவே முடியாது என்று அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து அண்ணாமலை இடம் எல்லா விஷயத்தையும் சொல்கிறார்.

siragadikka aasai serial December February 17th episode full update

அப்போது வீட்டுக்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை ஏன் இப்படி பண்ண என்று கேள்வி கேட்க அதற்கு முத்து முதலில் உண்மையை சொல்ல வருகிறார். பிறகு வேண்டாம் என்று அதை மறைத்து விடுகிறார். ஆனால் வீட்டில் எல்லோரும் ஆளாளுக்கு கேள்வி கேட்டு முத்து மீது பழியை போடுகின்றனர். அதற்கு முத்து அவன ஒரு கை உடைத்ததோடு விட்டுட்டேன் என்று சந்தோசப்படுங்கள் என்று சொல்ல அதற்கு மீனா வேண்டாம் மாமா அவரை எதுவும் கேட்காதீங்க,

அவரை எதுவும் கேள்வி கேட்கக்கூடாது என்று கோபப்படுகிறார். பணம் காசு இல்லாதவங்க என்ன பண்ணாலும் அமைதியாக தான் இருக்கணும் என்று சொல்கிறார். அப்போது ஸ்ருதி இவர் மேல தான் தப்பு இருக்கும். பொறுக்கி மாதிரி வேலை பார்க்கிறார் என்று திட்ட அதற்கு முத்து ஸ்ருதியை திட்டி விடுகிறார்.

siragadikka aasai serial December February 17th episode full update

அதற்கு அண்ணாமலை முத்துவிடம் என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்பு சத்தியாகிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல அதற்கு முத்து அப்படி கேட்க முடியாது நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன். எப்பவும் மத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் தான் தண்டனை அனுபவிக்கணும் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி உள்ளே போகிறார்.

siragadikka aasai serial December February 17th episode full update

இதனால் அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார். இதைப் பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். இவங்க ரெண்டு பேரும் சண்டையை தொடங்கிட்டாங்க இதுதான் இவங்கள வெளியே அனுப்ப சரியான நேரம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அங்கே வந்த முத்து நீ எதுக்கு அப்பா கிட்ட வந்து சொன்னே?

எதுவாக இருந்தாலும் நேருக்கு நேரா என்கிட்ட பேச வேண்டியதுதானே? என்று கேட்க மீனா யார்கிட்டயாவது சொல்லி அழ வேண்டும் இல்லையா என்று அழுது கொண்டிருக்க, அதற்கு முத்து என் அப்பா கிட்ட சொல்லுவியா? என்று கேட்க அதைக் கேட்டு மீனா ஷாக் ஆகின்றார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+