வள்ளலாக மாறிய முத்து! ஸ்ருதி குடும்பத்தால் அண்ணாமலை வீட்டிற்கு வரும் அடுத்த பிரச்சனை.. இனி விஜயா பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சிட்டியை முத்து அடித்ததால் அசிங்கப்பட்ட சிட்டி மீதமுள்ள டிரைவர்களை பணம் கேட்டு மிரட்டி இருந்த நிலையில் அதற்கு சமரசம் பண்ண போன முத்துவை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி சிட்டி மிரட்ட அதற்கு தன்னுடைய காரை விற்று மொத்த பணத்தையும் முத்து செட்டில் பண்ணி இருக்கிறார்.

அதே நேரத்தில் அண்ணாமலை குடும்பத்தில் ஏற்கனவே பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில் இப்போது ஸ்ருதியின் குடும்பத்தால் புதிய பிரச்சனை வெடிக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December February 20th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து செட்டிற்கு வர அங்கிருந்து அவருடைய நண்பர்கள் எல்லாரும் சிட்டி வந்துட்டு போனதையும் சிட்டி மூனே நாள்ல மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று சொல்லிட்டு போயிருப்பதையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதோடு மொத்த பணத்தை கொடுக்கலைன்னா காரை தூக்கிடுவேன்னு மிரட்டிட்டு போயிருக்கிறான் அதனால இனி எங்க பொழப்பு போச்சு என்று அவர்கள் புலம்பி கொண்டு இருக்க முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி போய் விடுகிறார்.

மறுபக்கத்தில் ஸ்ருதி ரவி தன்னிடம் தோற்று போனதால் தன்னை ஸ்டுடியோவுக்கு சைக்கிளில் கூட்டிட்டு போகணும்னு சொல்ல ரவியால் ஸ்ருதியை வைத்து சைக்கிள் மிதிக்க முடியாமல் திணறுகிறார். இதனால் கோபமான ஸ்ருதி ரவியை கீழே இறக்கிவிட்டு அவரை வைத்து ஸ்ருதி சைக்கிள் மிதிக்கிறார். அப்போ பார்த்து அந்த பக்கமாக வந்த ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் இதை பார்த்து ஸ்ருதி எப்படி இருந்த பொண்ணு இப்படி கஷ்டப்படுற இதனால இப்படியே விட்டால் சரியா வராது.

ரவியை நம்ம வீட்டோட மாப்பிள்ளையா கொண்டு வந்துடனும் அதற்கான வேலையை பாக்கணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக முத்து சிட்டியை வந்து பார்த்து உனக்கும் எனக்கும் தான் பிரச்சனை எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட பேசு.. எப்படி நீ பசங்கள மிரட்டலாம் உனக்கு அவங்க வட்டியை கரெக்டா தானே கட்டிட்டு இருக்காங்க என்று கேட்க அதற்கு சிட்டி எனக்கு பணம் எல்லாம் பிரச்சனையே கிடையாது.

siragadikka aasai serial December February 20th episode full update

நீ என்ன அவமானப்படுத்திட்ட அதனால அவங்க முன்னாடி என் காலில் விழுந்து மன்னிப்பு கேளு நான் அவங்களோட வட்டி பணம் கூட கேட்க மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு முத்து நீ அவங்க மேல கைவைத்து பாரு அப்புறம் இருக்கு என்று மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த முத்துவிடம் மீனா எதுவுமே பேசாமல் கோபமாக இருக்க அதற்கு முத்து உண்மைய சொன்னா நீ இன்னும் கவலைப்படுவ மீனா, உன் தம்பி மேல நீ அவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கிறா என்று மனதிற்குள் பேசிக்கொண்டு மொட்டை மாடிக்கு போய்விடுகிறார்.

பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் கீழே வந்து தூங்கிக் கொண்டிருக்கும் மீனா பக்கத்தில் நின்று முத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா முழித்துக் கொள்ள அதற்கு முத்து தண்ணீர் குடிக்க வந்ததாக நடித்துக் கொண்டு மீண்டும் போகிறார். அப்போது மீனா நான் தெரியாம பண்ணிட்டேன் இனிமே இப்படி பண்ண மாட்டேன்னு மன்னிப்பு கேட்கிறாரா? அவருக்கு இவ்வளவு கோபம் இருந்துச்சுன்னா எனக்கும் இருக்கும் என்று மீண்டும் படுத்து விடுகிறார்.

siragadikka aasai serial December February 20th episode full update

அடுத்த நாள் காலையில் சிட்டி செட்டுக்கு வந்து காரை எடுக்க போக அப்போது அங்க வந்து முத்து தடுத்து நிறுத்துகிறார். அதனால் சிட்டி நீ வருவேன்னு தெரியும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போறியா என்று கேட்க அதற்கு முத்துவும் மன்னிப்பு கேட்பது போல நடித்துவிட்டு பிறகு இங்கிருந்து எட்டி மிதித்தால் நெஞ்சி எலும்பு உடைஞ்சிடும் என்று மிரட்டி விட்டு யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு பணத்தையும் அவர்கள் கையாலேயே சிட்டி இடம் கொடுக்க சிட்டி கிளம்பி போய் விடுகிறார்.

siragadikka aasai serial December February 20th episode full update

பிறகு செல்வம் எவ்வளவு பணத்துக்கு நீ என்னடா பண்ணுன என்று கேட்க அதற்கு முத்து நான் காரை வித்துட்டேன். நான் பொறக்கும் போதே காரோடய பொறந்தேன்? இந்த வேலை இல்லனா இன்னொரு வேலை.. பார்த்துக்கலாம் என்று வள்ளலாக பேசிக்கொண்டு கெத்தாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+