சத்யாவின் திருட்டு வேலையை அம்பலப்படுத்திய முத்து.. வாயை கொடுத்து வம்பில் மாட்டிட்டாங்க ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயாவிடம் இருந்து திருடிட்டு போன பணத்தை சத்யா கொண்டு வந்து முத்துவிடம் கொடுத்து திமிராக பேச அதற்கு முத்து பதிலடி கொடுத்து அனுப்புகிறார். அதோடு அந்த பணத்தை விஜயாவிடம் கொடுத்து திருட்டு வேலையை அம்பலப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் முத்து திருட்டு பணத்தை கொண்டு வந்ததை வைத்து ரோகிணி சந்தேகப்பட மனோஜ் தம்பி மீது இருக்கும் பாசத்தை வெளிக்காட்டுகிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December February 28th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சத்யா பணத்தை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து இது உங்க அம்மா கிட்ட எடுத்துட்டு போன பணம் அதை திருப்பிக் கொடுத்தாச்சு இனி அக்காவை வீட்டுக்கு அனுப்பி அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்று முத்துவை மிரட்டுகிறார். அப்போது முத்து அந்த பணத்தை எடுக்காமல் இருக்க சத்யா பணம் வேண்டாம்னா சொல்லுங்க நானே திருப்பி எடுத்துகிறேன் என்று சொல்லி பணத்தை எடுக்க போகும் போது முத்து இது எங்க அப்பாவோட காசு கஷ்டப்பட்டு சம்பாதித்தது என்று எடுத்துக் கொள்கிறார்.

பிறகு சத்யா இனிமே உங்களால என்கிட்ட நேரடியா பேச முடியல அக்கா கிட்ட சொல்லி அனுப்புற வேலை எல்லாம் இனி வச்சுக்க கூடாது... இன்னும் பணம் வேணும்னா சொல்லுங்க இந்த ஒரு லட்ச ரூபாய்க்கு வட்டி தரேன் என்று ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க அந்த பணத்தை பிடுங்கி முத்து சத்யா முகத்திலேயே தூக்கி வீசி இது நீ சொன்ன பிச்சை காசு அதை நீயே வச்சுக்க என்று திட்டி அனுப்புகிறார்.

siragadikka aasai serial December February 28th episode full update

அதைத் தொடர்ந்து மீனா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது சாப்பாடு இன்னும் ரெடியாகவில்லை என்று விஜயா புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது உங்களுக்கு நேரத்துக்கு சாப்பிட வேணும்னா நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று மீனா பதிலடி கொடுக்கிறார். அந்த நேரத்தில் ஆர்டர் கொடுத்த ஒருவர் வீட்டுக்கு வந்து மீனா விடம் பூவை வாங்கிக்கொண்டு 600 ரூபாயை கொடுக்கிறார்கள்.

அப்போது விஜயா நீ எதுக்கு பூவை எல்லாம் பிரிட்ஜ்ல வைக்கிற எல்லாத்துலையும் ஒரே பூவாசனையா இருக்கு என்று மீனாவை திட்ட அதற்கு அண்ணாமலை நீதானே இட்லி மல்லி பூ மாதிரி வேணும்னு கேக்குற அப்போ மல்லி பூ வாசம் வந்தா என்ன என்று கவுண்டர் கொடுக்கிறார். அதற்கு ரோகிணியாவது என் பெயரை பியூட்டி பார்லருக்கு வச்சிருக்கா மாசா மாசம் எனக்கு பாக்கெட் மணி தரா.. இவா என்ன வாடகையா தரா என்று கேட்க அதற்கு அண்ணாமலை ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா? ரவா எதற்கு வாடகை தரணும் என்று அண்ணாமலை கேட்கிறார்.

siragadikka aasai serial December February 28th episode full update

அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் முத்து வீட்டுக்கு மேல ரெண்டு பிளைட் பறந்துச்சு அவங்க அம்மாவுக்கு வாடகை கொடுத்தாங்களா? ஏன்னா அம்மா வீட்டுக்கு மேல அந்த பிளைட் பறந்து இருக்கே! அதான் கேட்கிறேன் என்று கலாய்க்கிறார். பிறகு முத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து அண்ணாமலையும் கொடுக்க எதற்காக இந்த பணம் என்று கேட்க? அதற்கு இந்தப் பொண்ணு ஸ்ருதி அப்பா உன்னை அலைய வச்சதுக்காக கோர்ட் மூலமா ஒரு லட்சம் ரூபாய் பணத்த கொடுத்தாரே அந்த பணத்தை நீ அம்மாகிட்ட கொடுத்த அது காணாம போச்சுலா? அந்த பணம் இப்ப கிடைச்சிடுச்சு என்று சொல்கிறார்

அதற்கு ரோகினி அது எப்படி மொத்த பணமும் வரும் என்று கேட்கிறார். அப்போது பணம் என்றதும் ஓடி வந்த மனோஜை பார்த்ததும் சிலர் திருடினா தான் வராது சிலர் திருடனா வரும் என்று முத்து ஜாடை மாடையாக பேசுகிறார். அப்போது நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா ஆன்ட்டி என்று ஸ்ருதி கேட்க அதற்கு விஜயா இல்ல அன்னைக்கு இருந்த நிலமையில் அதெல்லாம் கொடுக்க முடியல என்று சொல்ல அதற்கு கம்ப்ளைன்ட் கொடுக்காமல் எப்படி பணம் திரும்ப வரும் என்று ஸ்ருதி கேட்கிறார்.

siragadikka aasai serial December February 28th episode full update

அதற்கு முத்து அன்னைக்கு நான் எனக்கு தெரிந்த போலீஸ் கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்று சமாளிக்கிறார். அதற்கு விஜயா அந்த திருடனை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்து அவனை செருப்பால் அடித்தால் தான் என் மனசு ஆறும் என்று சொல்லி அதற்கு முத்து அப்படி அடிக்கணும் என்றால் நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகிறார்.

பிறகு ரோகிணி மனோஜிடம் ஏதோ தப்பா இருக்கு.. திருடு போன பணம் முழுசா எப்படி கிடைக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுபோல முத்துவுக்கும் அந்த திருடனுக்கும் ஏதோ கலெக்ஷன் இருக்கணும் இல்லை இந்த திருட்டுக்கும் முத்துக்கும் ஏதாவது கனெக்சன் இருக்கணும் என்று சொல்ல அதற்கு மனோஜ் முத்து கோபப்படுவான் பணத்தை எல்லாம் திருட மாட்டான் என்று கூறுகிறார்.

siragadikka aasai serial December February 28th episode full update

அதற்கு ரோகிணி அப்படினா இந்த திருடனுக்கும் முத்துக்கும் ஏதோ லிங்க் இருக்கு. அவர் சொல்ற காரணங்கள் எதுவும் நம்புற மாதிரி இல்லையே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை எல்லாம் மீனா கேட்டு விடுகிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+